பேஸ்புக் விரைவில் அறிமுகப்படுத்தும் ஸ்னூஸ் (அம்சங்கள்).!
இந்த ஸ்னூஸ் அப்டேட் பொறுத்தவரை வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர், தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது, அதன்படி பேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் அம்சம் விரைவில் கொண்டுவரப்படும் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் ஸ்னூஸ் சிறப்பம்சம் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கம் அல்லது க்ரூப்களை பின்தொடர்வதை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னூஸ்:
இதன்மூலம் 30நாட்களுக்கு வாடிக்கையாளர் ஸ்னூஸ் செய்த நபர்களின் பக்கம் அல்லது க்ரூப்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பதிவுகள்
போன்றவற்றை பார்க்க முடியாது என பேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்:
இந்த ஸ்னூஸ் அப்டேட் பொறுத்தவரை வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் வாட்ச் ;
பின்வரும் காலங்களில் யூடியூப் போலவே பேஸ்புக் வாட்ச் மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சேவைப் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018:
பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

மெசன்ஜர் கிட்ஸ் செயலி:
பேஸ்புக் அறிவித்த தகவலின் அடிப்படையில் 13-வயதிற்கும் குறைவான குழைந்தைகள் புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு குறுந்தகவலை அனுப்ப வழிசெய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

குறுந்தகவல்கள்:
இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை பொறுத்தவரை குழந்தைகள் தங்களது நண்பர்களை சேர்க்கவோ, குறுந்தகவல்களை அழிக்கவோ முடியாது. பெற்றோர் கட்டுப்படுத்தக் கூடிய நிறைய அமச்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications