Home
Apps

வெளியாகிவிட்டது ஃபேஸ்புக் இன் "டேட்டிங்" ஆப்.! சிங்கில்ஸ்-க்கு ஒரே குஷி தான்.!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்காக டேட்டிங் ஆப் ஒன்றை உருவாக்கிவருவதாகத் தனது வருடாந்திர மாநாட்டில் தெரிவித்தது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்காக டேட்டிங் ஆப் ஒன்றை உருவாக்கிவருவதாகத் தனது வருடாந்திர மாநாட்டில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயனர்கள் மிக ஆர்வமாக எப்பொழுது இந்த டேட்டிங் ஆப் வெளியிடப்படும் என்று காத்திருந்தனர்.

வெளியாகிவிட்டது ஃபேஸ்புக் இன்

காத்திருந்த அனைத்து ஃபேஸ்புக் பயனர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் அந்த இனிமையான செய்தியை இன்று ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆமாம் ஃபேஸ்புக் இன் டேட்டிங் செயலி இன்று கொலம்பியா நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. டேட்டிங் செயலியை சோதனை செய்வதற்காக கொலம்பியா நாட்டில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சோதனை முயற்சிகள் முடிவடைந்தவுடன் இந்தியா மற்றும் அனைத்து இடங்களிலும் இந்த புதிய டேட்டிங் ஆப் வெளியிடப்படுமென்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வெளியாகிவிட்டது ஃபேஸ்புக் இன்

இந்தச் செயலுக்கு 'டேட்டிங்' செயல் என்று ஃபேஸ்புக் நிறுவனம் பெயர் சுட்டியிருக்கிறது. ஃபேஸ்புக் செயலி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த டேட்டிங் செயலி வேலை செய்யும். இந்த செயலி பயன்படுத்தக் குறைந்தது 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பது அவசியம்.

தற்போது, கொலம்பியாவில் இது வெளிவந்துவிட்டாலும் ஓரளவு மக்கள் சேர்ந்தபின்தான் மேட்சிங் வேலைகளை ஆரம்பிக்குமாம் 'டேட்டிங்'. இது விரைவில் இந்தியாவுக்கும் வர உள்ளது. இந்த டேட்டிங் செயலி நிச்சயம் சிங்கில்ஸ்-களிக்கு பிடிக்கும், ஆனால் நம்மூர் குடும்பஸ்தர்களுக்கு செட் ஆகுமா... ஆகாதா?

Best Mobiles in India

English summary
Facebook Launches Dating App to Test Market : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X