மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் நிறுவனத்திற்குப் போட்டியாக பேஸ்புக் கேமிங் அறிமுகம்

|

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் கிளவுட் கேமிங் துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. டெக் நிறுவனங்கள் சில காலமாக இந்த துறையில் கவனம் செலுத்தி வருகின்றன, மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் நிறுவனத்தை தொடர்ந்து தற்பொழுது கிளவுட் கேம் ஸ்டிரீமிங் தொழில்நுட்பத்தில் பேஸ்புக் நிறுவனமும் களமிறங்கியுள்ளது.

பேஸ்புக் கேமிங்

பேஸ்புக் கேமிங் என அழைக்கப்படும் இந்த புதிய கிளவுட் கேமிங் சேவை, கிளவுட் பயன்முறை சார்ந்த கேம்களை டவுன்லோட் செய்யாமல் டைரெக்ட்டாக பேஸ்புக் செயலி அல்லது பிரவுசர் மூலமாக விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை இப்பொழுது முற்றிலுமாக அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கேமிங் துறை

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, மொபைல் கேமிங் துறையில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பயனர்கள் தங்களின் டேட்டா மூலம் இந்த தளத்தில் கேம்களை டவுன்லோட் செய்யாமல் தொடர்ந்து இலவசமாக விளையாடலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Google Pay.. காரணம் என்ன தெரியுமா?

ஃபுல் மற்றும் இலவச கேமிங்

கூகிள் நிறுவனத்தின் கூகிள் ஸ்டேடியா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் எக்ஸ்-கிளவுட் கேமிங் போன்று இல்லாமல், பேஸ்புக்கின் கிளவுட் கேம்கள் நேரடியாக ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது என்பது தனிச்சிறப்பு. புதிய பேஸ்புக் கிளவுட் கேமிங் சேவை ஃபுல் மற்றும் இலவச கேமிங் என்று இரண்டு சேவைகளாக கிடைக்கிறது.

கேம்கள்

ஆஸ்பால்ட் 9 லெஜண்ட்ஸ் (Asphalt 9: Legends), மொபைல் லெஜண்ட்ஸ் - அட்வென்ச்சர் (Mobile Legends: Adventure), பிஜிஏ டூர் கொல்ப் ஷூட்அவுட் (PGA TOUR Golf Shootout), சாலிடேர்- ஆர்தர்ஸ் டேல் (Solitaire: Arthur's Tale), டபிள்யூடபிள்யூஇ சூப்பர்கார்டு (WWE SuperCard) போன்ற கேம்கள் இந்த வாரம் முதல் விளையாடக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook launches Cloud Gaming Service Things you should know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X