பேஸ்புக் டார்க் மோடு அறிமுகம்.! சிம்பிள் ட்ரிக் தெரிஞ்சா இப்பாவே ஆக்டிவேட் செய்யலாம்.!
பேஸ்புக் பயனர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் இன் டார்க் மோடு தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் பயனர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் இன் டார்க் மோடு தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் படி பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.

டார்க் மோடு
பேஸ்புக் நிறுவனம், அண்மையில் வெளியிட மெஸ்சேன்ஜ்ர் அப்டேட்டை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் அப்டேட் செய்திருந்தால் உங்களுக்கும் டார்க் மோடு ஆக்டிவேட் செய்ய வாய்ப்புள்ளது. இன்னும் சரியாக சோலா வேண்டுமானால் அப்டேட் செய்தால் மட்டும் போதாது, நாங்கள் கூறப்போகும் சீக்ரெட் டிப்ஸும் தெரிந்திருக்க வேண்டும்.

பிறை நிலா இமோஜி
உங்கள் மெஸ்சேன்ஜ்ர் செயலியில் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ மெஸ்சேன்ஜ்ர் மூலம் பிறை நிலா இமோஜியை லாங் ப்ரெஸ் செய்து அனுப்பும் பொழுது டார்க் மோடிற்கான சீக்ரெட் அனுமதி வழங்கப்படுகிறது.

சீக்கிரட் அன்லாக் செய்ய
உங்களுடைய நபரை உங்களுக்கு பிறை நிலா இமோஜி அனுப்பச் சொல்லுங்கள், இல்லை என்றால் நீங்களே உங்களுக்கு அனுப்பிக் கொள்ளுங்கள். நீங்கள் பிறை நிலா இமோஜியை அனுப்பியவுடன் மழை போல் நிலாக்கள் விழும். அதனைத் தொடர்ந்து "You have found dark mode" என்ற செய்தியுடன் உங்களுக்கான டார்க் மோடு ஆக்டிவேட் செய்யப்படும்.

பிறை அனுப்பி ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்
இந்த புதிய சீக்ரெட் அப்டேட் இன்னும் பல பயனர்களுக்குப் போய்ச் சேரவில்லை, இருப்பினும் நாங்கள் முயற்சி செய்த வரை பலருக்கும் டார்க் மோடு ஆக்டிவேட் ஆகியுள்ளது. நீங்களும் பிறை நிலவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி டார்க் மோடை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








