ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட நேரத்தை பிக்ஸ் செய்துவிட்டால் அதற்கு மேல் நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வந்து உங்கள் நேரத்தை தெரிவிக்கும்.

|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளர்களுக்கு பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்த வசதிகளில் ஒன்று நீங்கள் எவ்வளவு நேரம் ஃபேஸ்புக்கில் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி. அதற்கான டேப்பை கிளிக் செய்தால் நீங்கள் ஃபேஸ்புக்கில் எத்தனை மணி நேரம் இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ளபுதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா

அதேபோல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பிக்ஸ் செய்துவிட்டால் அதற்கு மேல் நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வந்து உங்கள் நேரத்தை தெரிவிக்கும். இந்த புதிய வசதிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது இன்னொரு புதிய வசதியை ஃபேஸ்புக் செய்துள்ளது. இதற்கு 'தொந்தரவு செய்ய வேண்டாம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும்போது அனைத்துவிதமான நோட்டிபிகேசனையும் மியூட் செய்துவிடலாம். எனவே நீங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும்.

'டூ நாட் டிஸ்டர்ப்'

'டூ நாட் டிஸ்டர்ப்'

இந்த 'டூ நாட் டிஸ்டர்ப்' என்ற வசதியால் உங்களுக்கு எந்தவிதமான நோட்டிபிகேசனும் வராது என்பது மட்டுமின்றி இந்த வசதிக்கு நீங்கள் செட்டிங் மெனு சென்று ஒரே ஒரு சிங்கிள் செக்சனை புஷ் செய்தால் போதும். இந்த வசதியை நீங்கள் எத்தனை நாள் பயன்படுத்த வேண்டுமோ அத்தனை நாள் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்களாகவே இந்த வசதிய ஆஃப் செய்தால் மட்டுமே அதன் பின்னர் நோட்டிபிகேசன் வரும்.

24 மணி நேரம்

24 மணி நேரம்

அதேபோல் இந்த வசதியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தேவை என்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம் .அதாவது 20 நிமிடங்கள் முதல் 24 மணி நேரம் வரை டைம் செட் செய்துவிட்டால் செட் செய்த நேரத்திற்கு மட்டும் நோட்டிபிகேசன் வராது. மேலும் நோட்டிபிகேசன் வரும் நேரத்தில் சவுண்ட் அலர்ட் மற்றும் வைப்ரேஷனை மட்டும் நீக்க வேண்டும் என்றாலும் அதற்கும் தனியாக வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

 டெக்கிரன்ச்

டெக்கிரன்ச்

மேலும் ஃபேஸ்புக் மட்டுமின்றி அதன் இன்னொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் இதே வசதியை அறிமுகம் செய்துள்ளதாக டெக்கிரன்ச் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வசதியை எப்போது முதல் பயனாளிகள் பயன்படுத்தலாம் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. அனேகமாக அடுத்த அப்டேட்டில் இந்த வசதி பயனாளிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

மேலும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்தது. இதற்கு 'யூ ஆர் ஆல் காட்' வசதி என்று பெயர். இந்த வசதியின்படி இன்ஸ்டாகிராம் செயலியில் உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களில் வந்த புதிய போஸ்ட்டுகள் அனைத்தும் உங்கள் கண்முன் தெரியும் வசதியே இந்த 'யூ ஆர் ஆல் காட்' வசதி என்பதாகும். இந்த வசதி காரணமாக இரண்டு நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை என்றாலும் அடுத்து இன்ஸ்டாகிராம் செயலியை ஓப்பன் செய்யும்போது திரும்பவும் ரீஃபிரெஷ் செய்ய தேவையில்லை

புதிய வசதி

புதிய வசதி

மேலும் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் கதை உள்பட எழுதும் வழக்கம் உள்ளவ்ர்களுக்காக ஒரு புதிய வசதியை கொண்டு வரவுள்ளது. அதேபோல் ஒபினியன் போல் என்று கூறப்படும் கருத்துக்கணிப்பு போன்ற திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook and Instagram might soon receive Do Not Disturb feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X