வைஃபை தேடும் அம்சத்தை உலகம் முழுவதும் விரிவாக்கிய ஃபேஸ்புக்.!

ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் வைஃபை வசதி இருப்பதை அறிந்து கொள்ளும் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்தது.

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஒவ்வொரு நாளும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் வைஃபை வசதி இருப்பதை அறிந்து கொள்ளும் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த வசதி ஒருசில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை தேடும் அம்சத்தை உலகம் முழுவதும் விரிவாக்கிய ஃபேஸ்புக்.!

இந்த வசதியின் மூலம் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஆங்காங்கே உள்ள வைஃபை வசதி குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கும். இந்த வசதியை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் நீட்டித்துள்ளது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் மொபைலில் ஃபேஸ்புக் செயலியை ஆன் செய்து அதில் வைஃபை செட்டிங்கை ஆன் செய்ய வேண்டும். தற்போது உங்களுக்கு எங்கெங்கு வைஃபை கிடைக்கின்றது என்பது மேப் மூலம் தெரிய வரும்

இந்த வசதியை தொடர்ந்து பெற அவ்வப்போது ஃபே|ஸ்புக் செயலியை அப்டேட் செய்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போது இந்த வசதி குறித்த தகவல் உங்களுக்கு தெரியவரும்

இந்த புதிய வசதி உலகில் உள்ள கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதனால் வைஃபையை தேடி அலையும் நேரம் மிச்சமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியை நீங்களும் பயன்படுத்தி தடையில்லா டேட்டா சேவையை பயன்படுத்தி மகிழுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook is expanding the Find Wi-Fi feature to the global users by rolling out the update to Android and iOS apps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X