ஃபேஸ்புக்கில் மில்லியன் கணக்கான லைக்குகளை முறைகேடாக பெறுவது சாத்தியமா?

உலகின் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஆயிரகணக்கான போலி மட்டும் உண்மையான அக்கவுண்ட்களை அனுமதிக்கின்றது.

By Siva
|

உலகின் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஆயிரகணக்கான போலி மட்டும் உண்மையான அக்கவுண்ட்களை அனுமதிக்கின்றது. அதே போல் 100 மில்லியனுக்கும் அதிகமான கமெண்ட் மற்றும் லைக்குகளையும் அனுமதிக்கின்றது. இது சிலசமயம் பாதுகாப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்த செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கில் மில்லியன் கணக்கான லைக்குகளை முறைகேடாக பெறுவது சாத்தியமா?

அமெரிக்காவில் உள்ள லோவா பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மூலம் போலி லைக்குகள் குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோதுதான் இவர்கள் பல நெட்வொர்க்குகளை பயன்படுத்தி லைக்குகளை குவித்தது தெரிய வந்தது

இந்த பாதுகாப்பு ஓட்டைகளில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் இதேபோல் இன்னும் பல அமைப்புகள் இந்த போலி லைக்குகளை பெற்று வருவதை கண்டுபிடிக்க தூண்டுகோலாக உள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் புகழ்பெற்ற 50 நெட்வொர்க்குகளை ஆராய்ந்தால் அவை இன்னும் அதிகமான அளவில் போலிகள் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

2 மாதங்களாக 2 மாதங்களாக "யூஸ்" பண்ணாத ஆண்ட்ராய்டு வைத்துளீர்களா.? உஷார்.!

மேலும் ஆய்வாளர்கள் இதுகுறித்து மேலும் சில தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது என்னவெனில் ஃபேஸ்புக் பயனாளிகள் இதுபோன்ற அமைப்புகளை அணுகி தங்களுக்கான அதிகபட்ச லைக்குகளை பெற்று கொள்வதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி ஃபேஸ்புக் அல்லாத வேறு சில செயலிகளில் இருந்தும் லைக்குகளை பெற்று கொள்வதாகவும் தெரிகிறது

இதை நிரூபிக்கும் வகையில் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் பெயரில் ஒரு போலி அக்கவுண்ட் ஆரம்பித்து குறிப்பிட்ட அமைப்பை தொடர்பு கொண்ட போது ஆப்பிள் ஐமூவி செயலியில் இருந்தும் போலி லைக்குகளை பெற்று கொள்வதை அறிய முடிந்தது. இதன் மூலம் சிபிஎஸ் செய்தி நிறுவனம் பதிவு செய்த ஒரு செய்திக்கு ஏராளமான லைக்குகள் கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது

இந்த முயற்சிகள் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போதும் நடந்திருக்கலாம் என்று சிபிஎஸ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கடுமையான எச்சரிக்கை ஒன்றை இதுபோன்ற அமைப்புகளுக்கு விடுத்துள்ளனர். இவை ஒரு கிரிமினல் நடவடிக்கை என்றும், இதுபோன்ற தவறுகள் செய்வதும், ஒருவருயை பெர்சனல் விபரங்களை திருடுவது போன்ற குற்றம் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்த விரிவான அறிக்கை ஒன்றை வரும் நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் கூட்டம் ஒன்'றில் தாக்கல் செய்ய ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
A security flaw has allowed thousands of Facebook accounts -- both real and fake -- to generate millions of fake 'likes' and comments.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X