ஃபேஸ்புக் கேமிரா தரும் புதிய வசதி GIF அனிமேஷன் படங்கள்

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீபத்தில் தனது மெசஞ்சர் செயலியில் கேமிரா ஆப்சன் ஒன்றை வைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஃபேஸ்புக் கேமிரா தரும் புதிய வசதி GIF அனிமேஷன் படங்கள்

இந்த கேமிரா மூலம் சாட்டிங் போது எமோஜிக்கள் உள்பட பல்வேறு புதிய அனுபவங்களை வாடிக்கையாளர்கள் பெற்று வரும் நிலையில் தற்போது அதில் அனிமேஷன் GIF இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு கூடுதல் உற்சாகம் கிடைத்துள்ளது

இந்த புதிய வசதியை உபயோகப்படுத்த இடது மேல்புறத்தில் உள்ள கேமிரா ஐகானில் டேப் செய்ய வேண்டும். இந்த கேமிரா வசதி தோன்றியவுடன் பயனாளிகள் வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும், இந்த GIF வசதியை அனிமேஷன் வகையில் பெறலாம்.

ஃபேஸ்புக் கேமிரா தரும் புதிய வசதி GIF அனிமேஷன் படங்கள்

இந்த வசதி பயனாளிகளுக்கு புதுவித அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பது மட்டுமின்றி விதவிதமான எஃபெக்ட்களில் பிரேம் மற்றும் பில்டர்களையும் பெற்று கொள்ளலாம். இதில் கிடைக்கும் GIF அனிமேஷன் படங்களை ஃபேஸ்புக்கில் உள்ள நண்பர்களுக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனிமேஷன் GIF புகைப்படங்களை ஃபேஸ்புக் தவிர வேறு செயலிகளுக்கு அனுப்ப முடியாது என்றாலும் அதை வீடியோவாக மாற்றி உங்கள் மொபைல் போனில் சேமித்து வைத்து கொள்ளலாம். எனவே ஃபேஸ்புக்கை தவிர வேறு எதற்கும் இந்த GIF படங்கள் பயன்படாது என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் இந்த அனிமேஷன் GIF படங்கள் ஒருசில நிமிடங்களில் தானாக மறைந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த GIF அனிமேஷன் வசதி ஐஓஎஸ் வசதியுடன் கூடிய ஃபேஸ்புக் செயலியில் மட்டுமே இப்போதைக்கு இயங்கும். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு இந்த வசதி இன்னும் செய்யப்படவில்லை. இருப்பினும் மிக விரைவில் ஆண்ட்ராய்ட் போன் பயனாளிகளுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெகுலராக ஐஒஎஸ் ஃபேஸ்புக் செயலியை அப்டேட் செய்யும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த வசதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே GIF கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து GIF படங்கள் மூலம் கமெண்ட் செய்யும் வசதியை ஃபேஸ்புக் அரிமுகம் செய்தது என்பது தெரிந்ததே. மேலும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் தோன்றிய இந்த வசதி பின்னர் வாட்ஸ் அப் செயலிக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி ஃபேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வந்த பின்னர் GIF படங்களுக்காக வேறு தளங்களுக்கு பயனாளிகள் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook camera gets the ability to create animated GIFs but it is usable only on Facebook.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X