ஆகுலஸ் ரிஃப்ட்டில் வி.ஆர். -இல் லைவ் ஸ்டிரீமிங் வசதி அறிமுகம்: பேஸ்புக் அதிரடி

By: Meganathan S

பேஸ்புக் ஸ்பேசஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலியில் லைவ் ஸ்டிரீமிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டு நேரலை வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

ஆகுலஸ் ரிஃப்ட்டில் வி.ஆர். -இல் லைவ் ஸ்டிரீமிங் வசதி அறிமுகம்: பேஸ்புக

விர்ச்சுவல் ரியாலிட்டியில் லைவ் ஸ்டிரீமிங் வசதியை பேஸ்புக் வழங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நேரலை வீடியோக்களை பேஸ்புக் ஸ்பேசஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலியின் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட பேஸ்புக் ஸ்பேசஸ் அந்நிறுவனத்தின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலி ஆகும். இந்த செயலி ஆகுலஸ் ரிஃப்ட் ஹெட்செட் மூலம் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் போஸ்டின்படி, மக்கள் ஆகுலஸ் ரிஃப்ட் பயனாளிகளுடன் தகவல் பரிமாற்றம்செய்ய முடியும். இதில் விர்ச்சுல் பிளேகிரவுண்டு மற்றும் 3டி அனிமேஷன்களை வரை முடியும். பேஸ்புக் ஸ்பேசஸ் மூலம் லைவ் செய்யும் போது முற்றிலும் புதுவித முறையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க முடியும்.

இந்த அம்சத்தை பயன்படுத்துவோருக்கு நெருக்கமானவர்கள் லைவ் வீடியோக்களை பின்தொடர முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஸ்பேசஸ் மூலம் நேரலை செய்யும் போது விர்ச்சுவல் கேமரா எங்கு வேண்டுமானாலும் வைத்து, வீடியோக்களை நண்பர்களுடன் பகிரந்து கொள்ள முடியும், இந்த வீடியோக்களில் நண்பர்கள் கமென்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

ஸ்பேசஸ் வாடிக்கையாளர்கள் தங்களது விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோக்களை ஆகுலஸ் ரிஃப்ட் வைத்திராத வாடிக்கையாளர்களுக்கும் காட்ட முடியும். பேஸ்புக் ஆகுலஸ் ரிஃப்ட் ஹெட்செட்டை பெரும்பாலானோரும் வாங்க அதன் விலையை குறைத்துள்ளது.

Read more about:
English summary
Facebook has brought livestreaming to virtual reality via Facebook Spaces virtual reality app.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot