ஆதார் தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை – பேஸ்புக் விளக்கம்

|

இந்தியாவைச் சேர்ந்த புதிய பயனர்கள், தங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரிலேயே பேஸ்புக்கில் உள்நுழைய வேண்டும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளதாக, ஆன்லைனில் நேற்று செய்திகள் பரவின. அதே நேரத்தில், இந்தச் செயல்பாட்டின் மூலம் ஆதார் அட்டை தகவல்களைத் திரட்டும் நோக்கம் எதுவும் இல்லை என்று சமூக இணையதள ஜாம்பவானான பேஸ்புக் தெளிவுப்படுத்தி உள்ளது.

ஆதார் தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை – பேஸ்புக் விளக்கம்

பேஸ்புக் உடன் ஆதார் தகவலை இணைப்பதன் பின்னணியில் நாம் நினைப்பது போன்றோ அல்லது நாட்டில் இப்போது எழுந்துள்ள எல்லா கொந்தளிப்புகளுக்கும் காரணமாக அமையும் தவறான எண்ணங்களைப் போன்றோ காரணம் எதுவும் இல்லை.

மேலும், ஒரு சமூக வலைத்தளத்திற்குள் வரும் புதிய பயனர், தனது உண்மையான பெயரில் உள்நுழைந்து, தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் எப்படி இணைப்பைப் பெறுவது என்பது குறித்த ஒரு சிறிய பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், “இந்தச் சோதனையின் மூலம் மக்களின் ஆதார் அட்டை தகவல்களை நாங்கள் பெறுவதாக சிலர் தவறாக திரித்து கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

இந்தப் பரிசோதனை இப்போது முடிவடைந்து, பேஸ்புக் கணக்கின் உள்நுழையும் பக்கத்தில் கூடுதலாக மொழியை உட்படுத்தி உள்ளதால், தங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை பயன்படுத்தினால், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எளிதாக கண்டறிய உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனையின் போது உள்நுழைந்து அதில் பங்கேற்ற பயனர்களுக்கு, “உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் நண்பர்களால் உங்களை எளிதாக கண்டறிய முடியும்” என்று காண்பிக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பரிசோதனையில் பங்கேற்றவர்களிடம் இருந்து, அவர்களின் ஆதார் அட்டை எண்ணை அளிக்குமாறு கூட, சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவைச் சேர்ந்த குறுகிய எண்ணிக்கையிலான பயனர்களை மட்டுமே இந்தப் பரிசோதனையில் உட்படுத்திய பேஸ்புக் நிறுவனம், இந்தப் பரிசோதனையை மேலும் தொடரும் எந்தத் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஐபோன் எக்ஸ் பயனர்களின் முகத்தை மறைக்கும் ஒரு அப்ளிகேஷன்ஐபோன் எக்ஸ் பயனர்களின் முகத்தை மறைக்கும் ஒரு அப்ளிகேஷன்

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ஆதார் அட்டை தகவல்களை நாங்கள் சேகரிக்கவில்லை என்பதோடு, பேஸ்புக்கில் நுழையும் போது தங்களின் ஆதார் அட்டை பெயரை குறிப்பிடுமாறும் கேட்க இல்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு, மாதந்தோறும் இந்தியாவைச் சேர்ந்த 217 மில்லியனுக்கும் அதிகமாகச் சுறுசுறுப்பான பயனர்கள் உள்ளார்கள். அதில் சுமார் 212 மி்ல்லியன் பயனர்கள் ஸ்மார்ட்போன்களின் மூலம் பயன்படுத்துகிறார்கள். உலகளவில் மாதந்தோறும் 2.1 பில்லியன் சுறுசுறுப்பான பயனர்கள் உள்ளார்கள். பேஸ்புக் மூலம் வாங்கப்பட்ட வாட்ஸ்அப்பிற்கு, மாதந்தோறும் 200 மில்லியனுக்கும் மேலான சுறுசுறுப்பான பயனர்கள் இந்தியாவில் உள்ளார்கள்.

டிஜிட்டல் தொடர்புடைய காரியங்களுடன் ஆதார் அட்டைத் தகவல்களை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு, குடிமக்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கும் இந்நேரத்தில், இது போன்ற ஒரு பரிசோதனையை பேஸ்புக் நடத்தி உள்ளது.

மத்திய அரசு மூலம் வங்கி கணக்குகள், பேன், மொபைல் எண்கள் மற்றும் மற்ற பல திட்டங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கெடுவை, வரும் 2018 மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Social media giant Facebook has now clarified that it is not collecting Aadhaar data and that some people have misinterpreted the information.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X