பேஸ்புக் விளம்பரங்களில் வாட்ஸ்அப்பை இணைக்கும் (கிளிக்-டு-வாட்ஸ்அப்) பொத்தான்கள் விரைவில் அறிமுகம்

|

மெசேஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், ஒரு காலத்தில் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி வந்தது. ஆனால் வாட்ஸ்அப்பை, பேஸ்புக் நிறுவனம் சொந்தமாக வாங்கிய பிறகு, அந்தப் பிரபல மெசேஜிங் தளத்தின் மூலம் வருமானத்தை ஈட்டும் முயற்சிகளில் பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பேஸ்புக் விளம்பரங்களில் வாட்ஸ்அப்பை இணைக்கும் (கிளிக்-டு-வாட்ஸ்அப்) பெ

இது குறித்து டெக்கிரான்ஞ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை இணைக்கும் ஒரு இணைப்பை (லிங்) உருவாக்க, விளம்பரத்தாரர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய விளம்பர பகுதியை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தயாராகி வருகிறது.

இதன்படி, விளம்பரத்தாரர்கள் தங்களின் விளம்பரங்களில் ஒரு பொத்தானை உட்படுத்த முடியும். இந்தப் பொத்தானை கிளிக் செய்து வாட்ஸ்அப் மூலம் அழைக்கவோ அல்லது மெசேஜ் செய்யவோ வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாகும்.

இந்தாண்டின் முற்பகுதியில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம், தற்போது பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான முறையில் இந்த அம்சத்தின் அறிமுகம் உறுதியாகி உள்ளதாக, மேற்கூறிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி மேலும் கூறுகையில், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகியவற்றில் உட்படும் நாடுகளில் ஆரம்பக் கட்டமாக இந்த அம்சம் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த முதற்கட்ட அறிமுக திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தக் கண்டத்தைச் சேர்ந்த பயனர்களுக்கு, பிற்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அறிமுகம்: டேட்டா பிரியர்களை குறிவைத்து ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.157/- பேக்ஸ்.!அறிமுகம்: டேட்டா பிரியர்களை குறிவைத்து ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.157/- பேக்ஸ்.!

ஐரோப்பா தவிர்த்து மற்ற பகுதிகளில் இந்த அம்சம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பேஸ்புக் தரப்பில் முதலில் கண்டறியப்பட்டு, அதன்பிறகு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு தீர்வைக் காணும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் இன்றே அறிவிக்கப்பட்டு, வாட்ஸ்அப் பயன்படுத்தும் வணிகங்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய விளம்பர பகுதி பொத்தானைப் பொறுத்த வரை, ஏற்கனவே பேஸ்புக்கில் நாம் கண்டுள்ள கிளிக்-டு-மெசேஞ்சர் விளம்பரங்களைப் போல ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு, வாட்ஸ்அப்பின் வழக்கமான நுகர்வோர் சேவைகளில் இந்தப் பொத்தானை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் பேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை என்றும், தொடர்பு முகவரிக்காக பயனர்கள் கோரும் பக்கங்களில் மட்டும் இவை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

தாங்கள் வாட்ஸ்அப்பில் இருப்பதை தங்களின் பேஸ்புக் பக்கத்திலேயே தெரிவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஒரு பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த மற்ற எந்தத் தகவல்களும் இப்போதைக்கு வெளியிடப்படவில்லை என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், தனது சமூக வலைத்தள பயன்பாட்டு எல்லைக்குள் வாட்ஸ்அப்பை கொண்டு வரும் திட்டங்கள், பேஸ்புக் நிறுவனத்திடம் இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதற்காக அந்நிறுவனத்தின் மூலம் இந்த சமூக வலைத் தளத்திற்குள் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு, பயனர்களால் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இடையே உடனடியாக இணைக்கும் வசதி உருவாக்கப்படலாம் என்று அந்தத் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook ads have started getting the Click-to-WhatsApp buttons for the people who are interested.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X