Home
Apps

உங்களின் ஃபேஸ்புக் அக்கவுன்ட் விவரங்கள் திருடப்பட்டுள்ளதா என அறிந்து கொள்வது எப்படி?

ஃபேஸ்புக் தளத்தில் கடந்த சில மாதங்களில் பயனர் விவரங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பல்வேறு சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன.

ஃபேஸ்புக் தளத்தில் கடந்த சில மாதங்களில் பயனர் விவரங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பல்வேறு சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன.

அந்த வகையில், ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. சமீபத்தில் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்தது. அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

1 கோடியே 15 லட்சம் தகவல் திருடப்பட்டுள்ளது

1 கோடியே 15 லட்சம் தகவல் திருடப்பட்டுள்ளது

மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. இது தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.

அறிவிப்பு

அறிவிப்பு

தகவல்களை பறிகொடுத்தவர்களை குறுந்தகவல் மூலம் ஃபேஸ்புக் தொடர்பு கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உங்களது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டு, விவரங்கள் திருடப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ள முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

பின்பற்ற வேண்டிய செயல்முறை:

பின்பற்ற வேண்டிய செயல்முறை:

வழிமுறை 1: டெஸ்க்டாப்பில் ஃபேஸ்புக் பக்கம் சென்று ஃபேஸ்புக் உதவி மையம் (https://www.facebook.com/help/securitynotice) வலைதளம் செல்ல வேண்டும்.

வழிமுறை 2: வலைதள பக்கத்தின் கீழ் வரை ஸ்கிரால் செய்து, ‘Is my Facebook account impacted by the security issue?' என்ற ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.

திருடாத விவரங்கள்

திருடாத விவரங்கள்

உங்களது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பின், "Yes. Based on what we've learned so far in our investigation, attackers accessed the following Facebook account information" மற்றும் ‘Name', ‘Email addresses', ‘Phone Number' என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதில் ஹேக்கர்கள் உங்களிடம் இருந்து திருடாத விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஹேக்கர்கள் எப்படி விவரங்களை திருடினர்?

ஹேக்கர்கள் எப்படி விவரங்களை திருடினர்?

கடந்த மாதம் ஃபேஸ்புக் வெளியிட்ட அறிப்பின் படி, ஹேக்கர்கள் ஃபேஸ்புக் வலைதளத்தில் உள்ள ‘View As' ஆப்ஷனை பயன்படுத்தி இருக்கின்றனர். ஹேக்கர்கள் பெயர், பிறந்த தேதி போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமின்றி கல்வி விவரங்கள், மொபைல் போன் நம்பர்கள், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றையும் திருடி இருக்கின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebook accounts hacked How to check your private information was stolen : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X