எலிமென்ட்ஸ் எனும் சோஷியல் மீடியா ஆப் இந்தியாவில் அறிமுகம்.! என்னென்ன சிறப்பு?

|

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் புதிய எலிமென்ட்ஸ் (Elyments) ஆப் எனும் சோஷியல் மீடியா ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இது சொந்தநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிக வரவேறப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வசதி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஆப் வசதி 100 சதவிகிதம் உள்நாட்டிலேயே உள்ளது மற்றும் 1,000 க்கும் மேற்பட்டஐ.டி தொழில் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது. இந்த எலிமென்ட்ஸ் ஆப் வசதி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

 சோஷியல் மீடியா

எலிமென்ட்ஸ் என்பது பல சோஷியல் மீடியா ஆப்களின் அம்சங்களை ஒரே தளமாக இணைக்கும் ஒரு சமூக ஊடக பயன்பாடுஆகும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இன்ஸ்டன்ட் மெசெஞ்சர் ஆப் மற்றும் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான டூல்கள் போன்ற டூல்களை ஒன்றாக இணைக்கும் ஒரு சிறந்த ஆப் வசதி ஆகும்.

6ஜிபி ரேம்., 64 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Motorola One Fusion+: இன்று விற்பனை., விலை தெரியுமா?

செய்யப்பட்ட எலிமென்ட்ஸ்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட எலிமென்ட்ஸ் ஆப் வசதியானது ப்ரைவஸி மீது அதாவது தனியுரிமை மீது அதிக கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களின் ப்ரைவஸி மீது கவனம் வைத்து எலிமெண்ட்ஸ் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த தனியுரிமை வல்லுநர்கள் இந்த ஆப்பின் தயாரிப்பு வடிவமைப்பை வழிநடத்தி வருகின்றனர்.

6ஜிபி ரேம்., 64 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Motorola One Fusion+: இன்று விற்பனை., விலை தெரியுமா?

தகவல்கள் மட்டுமே இதில்

வாடிக்கையாளர்களின் தகவல்கள் மட்டுமே இதில் சேமிக்கப்படும், ஒருபோதும் மூன்றாம் தரப்பினருடன்,பயனரின் வெளிப்படையான அனுமதியின்றி பகிரப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.! விலை மற்றும் முழுவிவரங்கள்!

சமூக ஊடக ஆப்கள் தனியுரிமையின் பல்வேறு குறைபா

மற்ற நாடுகளில் இருக்கும் ஏராளமான சமூக ஊடக ஆப்கள் தனியுரிமையின் பல்வேறு குறைபாடுகளை சந்திக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற எலிமென்ட்ஸ் ஆப் ப்ரைவஸியை பிரதானமாக கொண்டு வெளிவந்துள்ளது, வரவேற்கத்தக்கது.

ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்! கலங்கடிக்கும் உண்மை இதான்!

அடிப்படையில் எட்டுக்கும்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் எட்டுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இந்த எலிமென்ட்ஸ் ஆப் வசதியைப் பயன்படுத்த முடியும். பின்பு 1000-க்கும் மேறப்டவர்களால் இந்த ஆப் சோதனை செய்யப்பட்டுள்ளது. இப்போது 200,000 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Elyments App Download: How to Download and Use Elyments App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X