ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிக்கவைக்க ஒரு ஆப் அறிமுகம்.!

கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த சி விஜில் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸமார்ட்போனில் இன்ஸ்டால்செய்ய வேண்டும்.

|

இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தேர்தல் பற்றிய பேச்சே அதிகமாக பேசப்படுகிறது, குறிப்பாக கூட்டணி அமைப்பத்தில் அனைத்து கட்சியினரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும். பின்பு அரசயில் தலைவர்கள் விரைவில் நடத்தும் பிரசாரங்கள் சூடுபிடிக்கவிருக்கின்றன, இதில் பல்வேறு கருத்துகள்,எதிர்கருத்துக்கள், குற்றச்சாட்டுகளும் அதற்குப் பதில்களும் எனத் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கும்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிக்கவைக்க ஒரு ஆப் அறிமுகம்.!

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய சி விஜில்(C Vigil-Vigilant Citizen) என்ற ஆண்ட்ராய்டு செயலியை (ஆப்) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் வசதி கடந்த வருடமே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போதுதான் இதற்கான தேவை அதிகரித்திருக்கிறது.'

பரிசுகள்

பரிசுகள்

அரசியல் பிரமுகர்கள் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாட செய்வது, பின்பு பரிசுகள், பொருள்கள், மதுபானம் அளிப்பது,அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற அனைத்து வகையான விதிமீறல்கள் தொடர்பாகவும் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் இந்த சி விஜில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

சி விஜில் ஆப்

சி விஜில் ஆப்

கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த சி விஜில் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸமார்ட்போனில் இன்ஸ்டால்
செய்ய வேண்டும். பின்பு இந்தச் செயலியினுள் சென்று மொழியைத் தேர்வு செய்தல் வேண்டும்.

அதன்பின்பு உங்கள் செல்போன் எண்ணை இந்த செயலியில் பதிவு செய்தால் ஒடிபி அனுப்பிவைக்கப்படும், மேலும் பெயர்,
முகவரி, பின்கோடு ஆகியவற்றை பூர்த்தி செய்யவும். அதைத் தொடர்ந்து இந்த செயலியை எளிமையாக பயன்படுத்தலாம்.
செல்போன் எண்ணைப் பதிவு செய்யாமலும் செயலியைப் பயன்படுத்த முடியும், ஆனால் இ டழஉயவழைn
ஆப்ஷனை யடடழற என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.

விதிமீறல்கள்

விதிமீறல்கள்

நீங்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாராக பதிவு செய்யலாம், குறிப்பாக Auto location capture என்ற விருப்பம் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்பமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாள எண்

அடையாள எண்

இந்த செயலி புகார் பதிவை ஏற்க சுமார் 5நிமிடம் எடுத்துக்கொள்ளும், புகார் அளித்தபிறகு அனுப்பியவரின் செல்போனுக்கு அடையாள எண் அனுப்பப்டும் என்றும், இந்த எண்ணைக் கொண்டு நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து எளிமையாக தெரிந்து கொள்ளமுடியும்.

100நிமிடங்களுக்குள்

100நிமிடங்களுக்குள்

அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு செல்லும், பின்பு புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். பின்னர் தேர்தர் ஆணையத்தின் தேசிய குறைதீர்வுமையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பு:

குறிப்பு:

தற்சமயம் வரை எந்த ஒரு புகாரையும் இந்த செயலில் பதிவிட முடியாது, தேர்தல் நடத்தை விதிகள் குறித்துதேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு செயலி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த செயலி செயல்படாது. மேலும் புகார் அளிக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Election Commission launches app to report poll malpractice : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X