அடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா? இது தெரியாம போச்சே.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் பயனர்களுக்கு தகுந்தபடி புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று தான் கூறவேண்டும். குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களை விட வாட்ஸ்அப் செயலியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப்

அதேபோல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்று வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அம்சமும் இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆனது 24 மணிநேரம் வரை இருக்கும். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் உள்ள ஸ்டோரீஸ் போலவே இதிலும் பல ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளையும் நீங்கள் சேர்க்க முடியும்.

ன்ஸ்டாகிராம் தளத்தில்

இன்ஸ்டாகிராம் தளத்தில் நீங்கள் நெருங்கிய நண்பர்களின் குழுவை உருவாக்கி அவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் ஸ்டோரீஸைப் பகிர்ந்து கொள்ள முடியும். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் உங்களை பின் தொடர்பவர்களில் சிலருக்கு ஸ்டோரீஸ் தெரியாமல் மறைக்க முடியும்.

பட்ஜெட் விலை: 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதிகளுடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!பட்ஜெட் விலை: 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதிகளுடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

செயலியில்

இருந்தபோதிலும் வாட்ஸ்அப் செயலியில் அப்படிபட்ட விரும்பம் இல்லை, வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டால் அது உங்கள் போனில் இருக்கும் அனைத்து வாட்ஸ்அப் தொடர்புகளுக்கும் காண்பிக்கும். பின்பு மற்றொருவர் வாட்ஸ்அப் தொடர்பில் நீங்கள் இருந்தால், அவர்கள் பதிவிடும் ஸ்டேட்ஸையும் நீங்கள் எளிமையாக பார்க்க முடியும். நீங்கள் பார்த்தது பதிவிட்டவருக்கும் தெரிந்துவிடும்.

தெரியாமல்

ஆனாலும் ஒருவர் பதிவிடும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நீங்கள் பார்த்தாலும் அது அவர்களுக்கு தெரியாமல் இருக்க ஒரு அட்டகாச ட்ரிக் உள்ளது. அந்த அம்சத்தின் பெயர் Read Receipts.

 பகுதிக்கு சென்று

அதாவது வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Privacy என்பதை தேர்வு செய்து Read Receipts அம்சத்தை ஆஃப் செய்து விடுங்கள். இப்போது நீங்கள் ஒருவரின் ஸ்டேட்டஸைப் பார்க்க முடியும், ஆனால் ஸ்டேட்டஸ் பார்த்தவர்களின் பட்டியலில் உங்களது பெயர் இருக்காது.

அம்சத்தை ஆஃப்

கண்டிப்பாக Read Receipts அம்சத்தை ஆஃப் செய்யும் மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நீங்கள் Read Receipt அம்சத்தை ஆஃப் செய்துவிட்டால், உங்கள் ஸ்டேட்ஸை யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை நீங்களும் பார்க்க முடியாது, பின்பு சாதாரணமாக ஒரு செய்தியை பார்த்துவிட்டால் தோன்னும் ப்ளூ டிக் அம்சமும் தோன்றாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Do You Know How to See Others Whatsapp Status in Hidden Method!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X