தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்!

|

இந்த டிஜிட்டல் யுகத்தில், உங்கள் தனியுரிமை பெரும்பாலும் தனியுரிமையாக மட்டும் இல்லை, பல நிறுவனங்களின் பரிமாற்று தகவலாக தான் இருந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் உங்களை உறையவைக்கலாம்.

தப்பிக்கவே முடியாது:போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் கண்காணிக்க படுகிறது

இன்னும் சில அதிர்ச்சி தரக்கூடிய செயல்களையும், நம்ப முடியாத செயல்களையும் அமேசான், பேஸ்புக், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் செய்து வருகிறது என்பது தான் உண்மை. அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

கண்காணித்து, தகவலைச் சேகரிக்கும் நிறுவனங்கள்

கண்காணித்து, தகவலைச் சேகரிக்கும் நிறுவனங்கள்

உங்களுக்கே தெரியாமல் உங்களைக் கண்காணிக்கும் இந்த நிறுவனங்கள், நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறது, நீங்கள் ஷேர் செய்யும் மற்றும் நீங்கள் வலைத்தளத்தில் தேடும் செய்தியை உங்களுடன் சேர்ந்தே கண்காணித்து, அந்த தகவலைச் சேகரித்தும் வைக்கிறது, உங்கள் பழக்கவழக்கங்களைக் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறது.

1. அமேசான்

1. அமேசான்

ப்ளூம்பெர்க் வெளியிட அறிக்கையின் படி அமேசான் தனது எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கரால் பதிவுசெய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்க ஆயிரக்கணக்கான முழுநேர ஊழியர்களையும், வெளி ஒப்பந்தக்காரர்களையும் பணியில் அமர்த்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேட்டாகளை அலெக்சா சேவையை மேம்படுத்துவதற்கா எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>செக்ஸ் மெஷின்ஸ் - சர்ச்சைக்குரிய ஆய்வு..!</strong>செக்ஸ் மெஷின்ஸ் - சர்ச்சைக்குரிய ஆய்வு..!

2. கூகிள்

2. கூகிள்

கூகிள் சமீபத்தில் தனது முக அங்கீகார AI சேவையைப் பயிற்றுவிப்பதற்காக, மக்களின் முகங்கள் கொண்ட டேட்டாவை சுமார் ரூ.350 என்ற விலைக்கு வாங்கியது. ஆனால் அதற்கு முன்பே, கூகுள் ஆன்லைனில் உங்களைக் கண்காணிக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக நீங்கள் அணுகும் ஒவ்வொரு வலைத்தளத்திலும் உங்கள் தேடல் வரலாற்றுடன் தொடர்புடைய விளம்பரங்களை மட்டுமே பிரதிபலிக்கும் படி உங்கள் தகவலைக் கண்காணித்திருக்கிறது என்பதே உண்மை.

3. ஆப்பிள்

3. ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனமும் தந்து பயனர்கள் சிரியுடன் பேசும் ஆடியோ தகவல்களை பயனர்களிடமிருந்து வெளி ஒப்பந்தக்காரர்கள் மூலம் சேகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் சேகரிக்கும் தகவலின் அடிப்படையில் சிரியின் பயன்பாடு மேம்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பேசும் தகவல்களை உங்களுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்து சேகரித்து வருகிறது.

<strong>'சாத்தான் முக்கோணத்தில்' இருந்து தானாக திரும்பி வந்த கப்பல்..?!</strong>'சாத்தான் முக்கோணத்தில்' இருந்து தானாக திரும்பி வந்த கப்பல்..?!

4. பேஸ்புக்

4. பேஸ்புக்

பேஸ்புக் தனது மெசஞ்சர் பயன்பாட்டில் பகிரப்படும் ஆடியோ கிளிப்களைக் பதிவு செய்கிறது, இதற்காகத் துணை ஒப்பந்தக்காரர்களை நியமித்ததும் உள்ளது. குரல் செய்திகளை உரைக்கும், மொழிபெயர்க்க உதவும் பயன்பாட்டின் அம்சத்தைப் பயிற்றுவிப்பதற்காக இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

5. மைக்ரோசாப்ட்

5. மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் சமீபத்தில் கோர்டானாவிலிருந்து ஆடியோ பதிவுகள் மற்றும் ஸ்கைப் அழைப்புகள் இரண்டையும் கான்ட்ராக்டர்கள் மூலம் கேட்டுக் கண்காணிக்கிறது என்று தெரியவந்துள்ளது. நீங்கள் தேடு ஆபாச வலைத்தளம் முதல் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது என்பது தான் அதிர்ச்சியான தாவல்.

<strong>உலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு! உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்?</strong>உலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு! உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்?

6. ஸ்னாப்சாட்

6. ஸ்னாப்சாட்

ஸ்னாப்சாட் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைப்பேசி எண்கள், புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட டேட்டாக்களை இந்நிறுவனம் ஆராய்ந்து கண்காணித்திருக்கிறது. இதில் சிலரின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டுள்ளது.

7. ரஷ்ய மற்றும் சீன பயன்பாடுகள்

7. ரஷ்ய மற்றும் சீன பயன்பாடுகள்

கூகிள் பிளே ஸ்டோரில் ஏராளமான பயன்பாடுகள் உள்ளன மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயலிகளைத் தவிர, பல ரஷ்யா மற்றும் சீன பயன்பாடுகளையும் பயனர்கள் பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த செயலிகள் மூலம் உங்களின் தகவல்கள் அனைத்தும் டேட்டா சேவையகங்களில் சேமிக்கப்படும் இடத்திற்குச் செல்கிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது உங்கள் யாருக்கும் தெரிவதில்லை. அதை அறிய உங்களுக்கு வழியும் இல்லை.

<strong>வாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.!</strong>வாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.!

உங்களை யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்

உங்களை யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்

இங்குக் குறிப்பிட்டுள்ள வழிகளில் மட்டும் தான் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று நாங்கள் கூறவில்லை, பிரபலமான வழிகளில் உங்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளர்களைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இன்னும் பல வழிகளில் உங்களை யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கொடுமை என்பது இதான்!

கொடுமை என்பது இதான்!

இந்த நிறுவனங்களைத் தவிர்த்து இன்னும் சில மூன்றாம் நபர் ஒப்பந்தக்காரர்கள் நீங்கள் ஆபாசத் தளத்தைத் தேடுவதையும், அசிஸ்டன்ட் உதவியுடன் முழு ஆபாச தளத்தின் முகவரியை உள்ளிடுவதையும், தொலைப்பேசியில் மக்கள் உறவுகொள்வதையும் கூட கண்காணிக்கிறார்கள் என்பது தான் கொடுமையே. ஆனால் இதை மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம் என்ற ஒரே பதிலை மட்டும் அனைவரும் ஒன்றாக கூறி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Digital World That Spying Your Personal Photos and Information No Escape From This : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X