டேட்டா திருட்டு & பணத் திருட்டு: 29 ஆப்கள் கூகுளில் இருந்து அதிரடி நீக்கம்! காரணம் இதுதான்!
கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியனுக்கும் அதிகமான மொத்த பதிவிறக்க எண்ணிக்கையுடன், 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று குயிக் ஹீல் பாதுகாப்பு ஆய்வகம் புதிய அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம் செய்துள்ளது.

5 மில்லியன் முறை டவுன்லோட் செய்யப்பட்ட மால்வேர் ஆப்
மல்டிடேப் மல்டிபிள் அக்கௌன்ட்ஸ் சைமால்டேனியாஸ்லி (multiapp multiple accounts சிமுல்தானியசுலி) என்று பெயரிடப்பட்ட இந்த ஆப், 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்த ஆப்-ஐ இதுவரை சுமார் 5 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். பயனர்களின் தனி விபரங்களைத் திருடுவதுடன், பணத்தையும் சுரண்டல் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அனுமதியில்லாத ஷார்ட் கட்
மேலும் 29 பயன்பாடுகளில் 24 பயன்பாடு செயலிகள் 'ஹிட் ஆட்' (HiddAd) வகையைச் சேர்ந்தவை, அவை இன்ஸ்டால் செய்த முதல் அறிமுகத்திற்குப் பிறகு, ஐகானை மறைத்து போனின் ஹோம் முகப்புத் திரையில் பயனரின் அனுமதி இல்லாமல் ஆப்-களுக்கான ஷார்ட் கட் ஐகான்களை உருவாக்குகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அன்இன்ஸ்டால் செய்ய தடை
குயிக் ஹீல் பாதுகாப்பு ஆய்வகத்தின் அறிக்கையின்படி, இந்த மால்வேர் ஆப்களின் ஐகானை ட்ராக்(drag) அண்ட் அன்இன்ஸ்டால் செய்வதற்கான அனுமதியைப் பயனர்களுக்கு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயனர்களுக்கு அன்இன்ஸ்டால் வசதியையும் இந்த செயலிகள் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஆட்வேர்' மால்வேர் ஆப்கள்
மீதமுள்ள 5 பயன்பாடுகள் 'ஆட்வேர்' வகையைச் சேர்ந்தவை, பொதுவாக அவை விளம்பரங்களின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனிற்கு வந்து சேரும். குறிப்பாக யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களைப் பார்வையிடும்போது பல விளம்பரங்களைப் பயனர்களுக்குத் தேவை இல்லாமல் வழங்கிவருகிறது.

ஸ்மார்ட்போனை பாழாக்கும் ஆப்ஸ்
'ஆட்வேர்' வகை மால்வேர் ஆப்கள் பெரியளவில் பாசாங்கு செய்கின்றன, உண்மையில் இவை பயனரின் மொபைலில் அதிக விளம்பரங்களைக் காட்டுகின்றன, இதனால் பயனரின் பேட்டரி பயன்பாடு வீணை போவதுடன், அதிக தரவு பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன் இழப்பை ஏற்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முழு திரை விளம்பரங்கள்
இந்த பயன்பாடுகள் கேமராவைத் திறந்து ஃபிளாஷ் லைட், கேலரி போன்ற பல்வேறு விருப்பங்களைக் காண்பிக்கின்றன. ஆனால் பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த பயன்பாடுகள் முழு திரை விளம்பரங்களைத் தொடங்குகின்றன, மூடவோ அல்லது தவிர்க்கவோ முடியாத விளம்பரங்களை வலுக்கட்டாயமாகப் பயனருக்கு வழங்குகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை
தற்பொழுது கூகுல் நிறுவனம், இது போன்ற 29 பயன்பாடு செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம் செய்துள்ளது. இன்னும் இது போன்ற மால்வேர் ஆப்கள் பிளே ஸ்டோரில் நிறைந்து இருப்பதனால், கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications