கூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).!

|

இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் நமக்கு பாதுகாப்புடன் வருகிறதா என்றால் சந்தேகம் தான். குறிப்பாக நமக்கு தெரியாமல் சில செயிலகள்(ஆப்) நமது தகவல்களை திருடும். எனவே தான் கூகுள் நிறுவனம் சந்தேகமான ஆப் வசதிகளை கண்டுபிடித்து நீக்கி வருகிறது.

சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்

சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்

கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தனது பிளே ஸ்டோரில்இருந்து சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்களை நீக்கிவிட்டது. அவற்றில் சில ஆட்வேர், சில மால்வேர் மற்றும் பயனர்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்பட்ட சில உரையாடல்கள் மற்றும் சில இடம் சார்ந்த தகவல்கள் ஆகியவைகள் அடங்கும்.

ரகசியமாக திருடும் ஆப்

ரகசியமாக திருடும் ஆப்

இதிலும் மிகவும் ஆபத்தான வகைகளின் ஒன்றுதான் பயனர்களின் ஸ்மாரட்போனில் உள்ள புகைப்படங்களை ரகசியமாக திருடும் ஆப்கள். இந்த வகையின் கீழ் 29செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

அன்இன்ஸ்டால்

அன்இன்ஸ்டால்

கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரிலிருந்து ஆபத்தான செயலிகளை நீக்கிவிட்டாலும் கூட, அதை டவுன்லோட்செய்த பயனர்கள் இன்னமும் அவைகளை தங்களின் ஸ்மார்ட்போனில் கொண்டுள்ளன. எனவே இந்த 29 ஆப்களில்
ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறுபரிந்துரைக்கப்படுகீறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியல்-1

பட்டியல்-1

ப்ரோ கேமரா பியூட்டி (Pro Camera Beauty)
போட்டோ எடிட்டர் (Photo Editor)
போட்டோ ஆர்ட் எபெக்ட் (Photo Art Effect)
பிரிஸ்மா போட்டோ எபெக்ட் (Prizma Photo Effect)
செல்பீ கேமரா ப்ரோ (Selfie Camera Pro)
ஹாரிஸான் பியூட்டி கேமரா (Horizon Beauty Camera)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோஸ் (Cartoon Art Photos)
கார்ட்டூன் எபெக்ட் (Cartoon Effect)
கார்ட்டூன் போட்டோ பில்டர் (Cartoon Photo Filter)

பட்டியல்-2

பட்டியல்-2

ஆஸம் கார்ட்டூன் ஆர்ட் (Awesome Cartoon Art)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோ (Cartoon Art Photo)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோ பில்டர் (Cartoon Art Photo Filter)
ஆர்ட் பில்டர் போட்டோ (Art Filter Photo)
ஆர்ட் பில்டர் (Art Filter)
ஆர்ட் ஃபிளிப் போட்டோ எடிட்டிங் (ArtFlipPhotoEditing)

பட்டியல்-3

பட்டியல்-3

ஆர்ட் எபெக்ட்ஸ் ஃபார் போட்டோ (Art Effects for Photo)
ஆர்ட் போட்டோ எடிட்டர் (Art Filter Photo Editor)
ஆர்ட் பில்டர் போட்டோ எபெக்ட்ஸ் (Art Filter Photo Effcts)

பட்டியல்-4

பட்டியல்-4

பிக்ஸ்சர் (Pixture)
சூப்பர் கேமரா (Super Camera)
வால்பேப்பர்ஸ் எச்டி (Wallpapers HD)
ஆர்ட் எடிட்டர் (Art Editor)
மேஜிக் ஆர்ட் பில்டர் போட்டோ எடிட்டர் (Magic Art Filter Photo Editor)
ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் (Fill Art Photo Editor)

பட்டியல்-5

பட்டியல்-5

ஆர்டிஸ்டிக் எபெக்ட் பில்டர் (Artistic effect Filter)
ஆர்ட் எபெக்ட் (Art Effect)
பியூட்டி கேமரா (Beauty Camera)
எமோஜி கேமரா (Emoji Camera)

வாட்ஸ்ஆப் விடுங்க மக்களே: வருகிறது இந்திய அரசின் ஜிம்ஸ் ஆப்.!

வாட்ஸ்ஆப் விடுங்க மக்களே: வருகிறது இந்திய அரசின் ஜிம்ஸ் ஆப்.!

சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை பெகாஸஸ் என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 1400வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன. குறிப்பாக இதில் இந்தியாவை சேர்ந்த 121முக்கிய நபர்களின் கணக்குகள் அடங்கும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

இப்போது அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்துமே வாட்ஸ்ஆப்-ல் தான் என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் டெலிகிராம் போன்று தகவல்களை பரிமாகொள்ள தனக்கென பிரத்யேச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக இந்த செயலிக்கு ஜிம்ஸ் -GIMS(government instant messaging system) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி தற்போது ஒடிசா போன்ற மாநிலங்களில் சோதனை கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கேரளா

கேரளா

அதன்பின்பு கேரளாவில் இருக்கும் தேசியத் தகவலியல் மையத்தில் இந்த செயலியின் உருவாக்கமும் ஆராய்ச்சியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை அலுவலங்களில் தொலைபேசி தொடர்புக்காக மட்டுமே பிரத்யேக இன்டர்காம் வசதி இருந்துவந்தது. ஆனால் இன்றைய உலகத்தில் தகவல்களைப் பரிமாறக்கொள்ள பெரும்பாலும் இதர நாட்டு செயலிகளையே நாடவேண்டியதாக இருந்தது.

ஜிம்ஸ் ஆப்

ஜிம்ஸ் ஆப்

எனவேதான இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளிநாட்டு செயலிகளால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத் தடுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இதிலும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்று எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் முறையில்தான் தகவல்கள் பரிமாற்றப்படும்.

ஒடிசா

ஒடிசா

இந்த ஜிம்ஸ் ஆப் இந்தியாவில் உருவாக்கப்படுவதால் மிகுந்த பாதுகாப்பான செயலியாகக் கருதப்படுகிறது, மேலும் இதன் சோதனைப் பயன்பாடானது தேசியத் தகவலியல் மையத்தில் பணிபுரியும் பணியாளர்களிடையே உட்தகவல் பரிமாற்றத்திற்காக நடத்தப்பட்டது. பின்னர் ஒடிசாவின் நிதித்துறையிலும் தற்போது கப்பல் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஜமிஸ்

ஜமிஸ் செயலியைப் பயன்படுத்தி அலுவலகத்தில் பணிபுரிவோரிடம் தனிநபர் தகவல்களையும், குழு தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். இதனுடன் மேலதிகாரிகளுடன் பணி சம்பந்தமான ஆவணங்களையும் தகவல்களையும் பரிமாற்றிக்கொள்ள பிரத்யேக வசதியும் இதில் உள்ளது.

 எப்படியான மாற்றத்தை கொண்டுவரப்போகிறது

எப்படியான மாற்றத்தை கொண்டுவரப்போகிறது

பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை சாரமல் இருக்கவேண்டும் என்ற கருத்துகள் அடிப்படையாக வைத்து இந்த செயலி உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான. ஜிம்ஸ் அனைத்து துறைகளில் எப்படியான மாற்றத்தை கொண்டுவரப்போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்கள் கவனிக்க மறந்த கூகுள் மேப்ஸின் சூப்பர் டிப்ஸ்.! இனி எல்லாம் ஈசி தான்!

நீங்கள் கவனிக்க மறந்த கூகுள் மேப்ஸின் சூப்பர் டிப்ஸ்.! இனி எல்லாம் ஈசி தான்!

கூகுள் மேப்ஸ் என்பது கூகுள் உருவாக்கிய வலைத்தள மேப்பிங் சேவையாகும். இந்த மேப்பிங் சேவையில் உலகத்தில் உள்ள அனைத்து இடங்களின் செயற்கைக்கோள் படங்கள், வான்வழி புகைப்படங்கள், தெருக்களின் வரைபடங்கள், 360° வியூ புகைப்படங்கள், லைவ் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு நிலைமைகள் போன்ற தகவல்களை இந்த கூகுள் மேப் சேவை வழங்குகிறது.

பயணிப்பதற்கான பாதை திட்டமிடல்

பயணிப்பதற்கான பாதை திட்டமிடல்

பயணிப்பதற்கான பாதை திட்டமிடல் நடை பயணம், மோட்டர் பைக், கார், சைக்கிள் மற்றும் விமானம் அல்லது பொது போக்குவரத்து மூலம் பயணிப்பதற்கான பாதை திட்டமிடல், கால அவகாசத்தின் தகவல், மாற்று வழி மற்றும் செல்லும் வழியில் உள்ள சிறப்பிடங்கள் ஆகியவற்றின் தகவலை வழங்குகிறது.

புதிய மாற்றங்களையும் சோதனை செய்துவரும் கூகுள்

புதிய மாற்றங்களையும் சோதனை செய்துவரும் கூகுள்

கூகுள் மேப்ஸ் இயன்றளவில் பல எல்லைகளைக் கடந்து, யாரும் எதிர்பார்த்திடாத பல புதிய அம்சங்களைக் களமிறக்கி மக்களுக்குப் பெரிதும் பயனுள்ள ஒரு முக்கிய பயன்பாட்டுச் செயலியாக மாற்றியுள்ளது. இன்னும் மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதத்தில் பல புதிய மாற்றங்களையும் சோதனை செய்து வருகிறது.

மறைநிலை முறை

மறைநிலை முறை

மேலும் கூகுள் நிறுவனம், சமீபத்தில் கூகுள் மேப்ஸ் இன் புதிய சேவைகளாக மறைநிலை முறை (Incognito mode), பார்வையற்றவர்களுக்கு உதவும் கூடுதல் வாய்ஸ் சேவைகள் மற்றும் பலவற் றை தற்பொழுது மேப்ஸ் செயலியில் கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது.

இது தெரிந்தாலே இனி எல்லாம் ஈசி தான்!

இது தெரிந்தாலே இனி எல்லாம் ஈசி தான்!

கூகுள் மேப்ஸ் அப்-ஐ, நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கியமான டிப்ஸ்கள் இவை தான். இவற்றைத் தெரிந்துகொண்டால் கூகுள் மேப்ஸ் மூலம் இன்னும் நீங்கள் அதிகப்படியான சிறப்பான விஷயங்களைக் அறிந்துகொண்டு, கூகுள் மேப்ஸ் மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.

1. ஷேர் லொகேஷன்

1. ஷேர் லொகேஷன்

நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கிறீர்கள் என்றால், இந்த ஷேர் லொகேஷன் அம்சம் உங்களைக் கண்டுபிடிப்பதை உதவும். IOS அல்லது ஆண்ட்ராய்டு போனில் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து, மேல் இடது மூலையில் உள்ள ஆப்ஷன் மெனுவை கிளிக் செய்து "ஷேர் லொகேஷன்" கிளிக் செய்யவும். நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை எவ்வளவு காலம் காண்பிக்க வேண்டும், யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கிருந்து நீங்கள் தீர்மானிக்கலாம்.

2. பிடித்த இடங்களைச் சேவ் செய்யுங்கள்

2. பிடித்த இடங்களைச் சேவ் செய்யுங்கள்

உங்களுக்குப் பிடித்த உணவகங்கள் அல்லது பூங்காக்கள் அல்லது புத்தகக் கடைகள் என அனைத்து பிடித்தமான இடங்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள இந்த அம்சம் உங்களுக்கு உதவுகிறது. பிடித்தமான இடங்களைத் தேர்வு செய்து "சேவ்" என்பதை கிளிக் செய்யவும். பின்னர், "நியூ லிஸ்ட்" என்பதை கிளிக் செய்து அதற்கு ஒரு பெயரைக் கொடுங்கள். இப்போது, நீங்கள் உருவாக்கிய லிஸ்ட்டின் கீழ் புதிய இடங்களைச் சேர்க்கலாம். இந்த பட்டியல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

3.

3. "ஃபார் யு" அம்சம்

கூகுள் மேப்ஸ் இல் உள்ள "ஃபார் யு" அம்சம், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சுவாரசியமான இடங்கள் குறித்த தகவலைத் தருகிறது. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் செல்லும் வழியில் உள்ள சிறப்பான இடங்களுக்கும் செல்ல முடியும். குறிப்பாக இந்த அம்சத்தின் கீழ் அருகில் உள்ள இடங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படுகிறது. உங்களுக்கு முன்பு சென்றவர்கள் பதிவிட்ட கருத்துக்களையும் பார்க்கலாம்.

4. பயணத்தைத் கம்யூட் உடன் திட்டமிடுங்கள்

4. பயணத்தைத் கம்யூட் உடன் திட்டமிடுங்கள்

கூகுள் மேப்ஸ் கீழ் உள்ள இந்த சிறந்த "கம்யூட்" அம்சத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள், இது உங்கள் தினசரி பயணத்திற்குத் தேவையான பயண நேரத்தை முன்பே திட்டமிட்டு உங்களுக்கு வழங்குகிறது. கம்யூட் அம்சத்தின் கீழ் நீங்கள் எப்பொழுதும் செல்லும் வழியில் உள்ள லைவ் டிராபிக் அப்டேட்கள் வெறும் ஒற்றை கிளிக்கில் வழங்கப்படுகிறது. போக்குவரத்துக்கு நெரிசலினால் தாமதம் ஏற்படும் நேரங்களில்,உங்களுக்கான மாற்று வழியையும் இந்த கம்யூட்" அம்சம் வழங்குகிறது.

நீங்கள் இன்றே முயற்சிக்க வேண்டிய தலைச்சிறந்த செயலிகள்

நீங்கள் இன்றே முயற்சிக்க வேண்டிய தலைச்சிறந்த செயலிகள்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நமது ஒவ்வொரு தேவையையும் சரிவர பூர்த்தி செய்ய நமக்கு அத்தியாவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது ஆப்ஸ் எனப்படும் செயலிகள் தான் எனலாம்.

Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!

ஸ்மார்ட்போன்களில் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆப் டெவலப்பர்களும் தலைச்சிறந்த செயலிகள் மூலம் பயனர்களை கவர முயன்று வருகின்றனர்.

அந்தவகையில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த செயலிகளில் நீங்கள் முயற்சிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நமது ஒவ்வொரு தேவையையும் சரிவர பூர்த்தி செய்ய நமக்கு அத்தியாவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது ஆப்ஸ் எனப்படும் செயலிகள் தான் எனலாம்.

அடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோஅடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோ

ஸ்மார்ட்போன்களில் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆப் டெவலப்பர்களும் தலைச்சிறந்த செயலிகள் மூலம் பயனர்களை கவர முயன்று வருகின்றனர்.

அந்தவகையில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த செயலிகளில் நீங்கள் முயற்சிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

கிளீன் மாஸ்டர் (Clean Master)

கிளீன் மாஸ்டர் (Clean Master)

கிளீன் மாஸ்டர் செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனினை எளிமையாக பராமரிக்க உதவும். ஆண்டராய்டை சுத்தப்டுத்தும் கிளீன் மாஸ்டர் செயலி ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் இருக்கும் ஃபைல்கள், சர்ச் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவற்றை அழிக்கும். மேலும் பயன்படுத்தாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கும்.

360 செக்யூரிட்டி ( 360 Security)

360 செக்யூரிட்டி ( 360 Security)

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி உங்களது ஸ்மார்ட்போனிற்கு பாதுகாப்பு வழங்கும் பணியினை சிறப்பாக செய்யும். திரெட்களை ஸ்கேன் செய்து அவற்றை ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேற்றும் 360 செக்யூரிட்டி ஸ்மார்ட்போனினை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

சாலிட் எக்ஸ்புளோரர் ஃபைல் மேனேஜர் (Solid Explorer File Manager)

தலைச்சிறந்த ஃபைல் எக்ஸ்புளோரர் அதிக அம்சங்களுடன் வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற செயலி இது தான். ஸ்மார்ட்போனில் ஃபைல் பிரவுசிங் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கும் சாலிட் எக்ஸ்புளோரர் டிராப் பாக்ஸ், பாக்ஸ், கூகுள் டிரைவ் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் வசதியையும் வழங்குகிறது.

பேட்டரி ஆப்டிமைசர் & விட்ஜெட் (Battery optimizer and Widget)

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் பேட்டரி சேவர் செயலிகளில் முக்கியத்துவம் வாய்ந்த செயலியாக இது இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவை பொருத்து எந்தெந்த செயலிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை கணிக்கும் தன்மையை இந்த செயலி கொண்டுள்ளது.

எம்எஸ் ஆஃபீஸ் மொபைல் (MS Office Mobile)

எம்எஸ் ஆஃபீஸ் மொபைல் (MS Office Mobile)

தலைச்சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள எம்எஸ் ஆஃபீஸ் மொபைல் ஆண்ட்ராய்டு செயலிக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் வெவ்வேறு எம்எஸ் ஆஃபீஸ் தரவுகளான எக்செல், வொர்டு, பவர்பாயின்ட் உள்ளிட்டவற்றை உருவாக்கவும், அவற்றை எடிட் செய்து இயக்கவும் முடியும்.

ஏர்டிராய்டு (AirDroid)

ஏர்டிராய்டு (AirDroid)

ஆண்ட்ராய்டு போன் அனுபவத்தை எளிமையாக்கும் இந்த செயலியும் இந்த ஆண்டின் தலைச்சிறந்த செயலிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கணினி மற்றும் லேப்டாப் சாதனங்களில் இருந்து தகவல்களை யுஎஸ்பி கேபிள் இல்லாமலேயே மிக எளிமையாக பரிமாற்றம் செய்ய இந்த செயலி வழி செய்கிறது.

Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!

Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது "பாசம்" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அம்பானி பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களை மக்கள் அதிகளவில் தேடிப் பார்க்கின்றனர்.

#1

அப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு பார்ப்போம்.

#1

அன்டிலியா உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். 4,00,000 சதுர அடி கொண்ட இந்த வீடு தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா வீடு 173.13 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளங்களும், சாதாராண வீட்டின் மூன்று தளங்களுக்கு ஒப்பான உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#2

#2

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புராண தீவின் அடையாளமாக அன்டிலியா என இந்த வீட்டிற்கு பெயரிடப்பட்டது. இந்த வீட்டின் அற்புதம் என்னவென்றால் கண்ணாடி மாளிகையான அன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தை கிழித்து செல்லும் கோபுரத்தை போல் தொடுவானத்தி காணப்படும்.

#3

#3

அம்பானியின் இல்லமானது ஆரோக்கிய ஸ்பா, சலூன், பால்ரூம், 3 நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு முறை, அம்பானியின் மனைவி நீதா, நியூயார்க்கில் மாண்டரின் ஓரியண்டலில் உள்ள ஒரு ஸ்பாவில் இருந்து சென்ட்ரல் பார்க்கை பார்த்துக் கொண்டிருந்தார். அங்குக் கண்ட சமகால உள் அலங்காரத்தால் கவரப்பட்ட அவர், அதைப் பற்றி டிசைனரிடம் விசாரித்தார். பின்புதான் இப்படி ஒரு வீட்டைக் கட்டும் நோக்கில் மாண்டரின் ஓரியண்டலின் டிசைனர்களான பெர்கின்ஸ் & வில் மற்றும் ஹிர்ஷ் பெண்டர் அசோஸியேட்ஸ் அவர்களை அம்பானி குடும்பத்தார் கலந்து ஆலோசித்தனர்.

#4

#4

இந்த பிரம்மாண்டமான இல்லத்தை பராமரிக்க உதவியாக 600 ஊழியர்கள் உள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள்/ காவலர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறை உள்ளது.

#5

#5

அன்டிலியா வீட்டில் உல்ல ஐஸ் ரூம் என ஒன்று உள்ளது,குடும்பத்தாரும் விருந்தினர்களும் மும்பையில் வெயிலில் வதைபடும் போது பயன்படுத்துவதற்காக இந்த அறை உள்ளதாம்.

#6

#6

50 நபர்கள் அமரக்கூடிய தனிப்பட்ட தியேட்டர் இந்த வீட்டில் உள்ளது. மற்றும் இந்த தியேட்டரின் கூரையாக மாடித்தோட்டம் உள்ளது. அதன்பின்பு இந்த வீட்டில் இருக்கும் கிரிஸ்டல் விளக்குகளுடன் கூடிய பாரில் உட்புற,வெளிப்புற மதுபானம் அருந்தகம், ஒய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது.

#7

#7

இந்த கட்டிடத்தின் ஆறு மாடிகள் 168 கார்கள் நிறுத்துமளவிற்கு பார்க்கிங் பகுதிக்கெனவே அர்ப்பணிக்கப்பட்டன. அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#8

#8

இந்த கட்டிடத்தில் மட்டும் 9 லிஃப்ட்கள் உள்ளது. விருந்தினர்களுக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக லிஃப்ட்கள் உள்ளன. குறிப்பாக அம்பானியின் இந்த வீடு ரிக்டர் 8வரையிலான நிலநடுக்கத்தை உறுதியோடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

#9

#9

சூரியன் மற்றும் தாமரை இரண்டு வடிவமைப்பு அலங்காரங்கள் மட்டுமே இக்கட்டிடம் முழுவதும் படிக, பளிங்கு, மற்றும் முத்து போன்ற வெவ்வேறு அரிதான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

#10

#10

அன்டிலியா மாளிகையின் கூறையில் 3 ஹெலிபேட்கள் உள்ளன, பின்பு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News source: gadgetsnow.com

Best Mobiles in India

English summary
Dangerous Android Apps List 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X