Home
Apps

இனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ், ஈசியாக கிடைக்கும்.! அதெப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள இந்த மொபைல் ஆப்ஸை இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்சமயம் அசத்தலான மொபைல் ஆப்ஸை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு உதவும் வகையிலும் மற்றும் உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த மொபைல் ஆப் வெளிவந்துள்ளது.

இனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ், ஈசியாக கிடைக்கும்.! அதெப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இந்த மொபைல் ஆப்ஸை வெளியிட்டனர்.

இனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ், ஈசியாக கிடைக்கும்.! அதெப்படி?

மேலும் டோனி தலைமையில் களமிறங்கும் சென்னை அணியில் வெய்ன் பிராவோ, டு பிளிசிஸ், ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செக்பிளே சிஸ்டம்ஸ்

செக்பிளே சிஸ்டம்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் ஆப் பொறுத்தவரை செக்பிளே சிஸ்டம்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. குறிப்பாக இந்த மொபைல் ஆப்ஸில் ஐபிஎல் போட்டியின் நிலவரம், கருத்துக்கள், போட்டி ஆய்வுகள், ரசிகர்கள் பங்கேற்பு, சிறிய அளவிலான விளையாட்டுகள் மற்றும் சிஎஸ்கே டிவி,டிக்கெட்டுகள் விற்பனை போன்ற அனைத்து விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.

விஸ்வநாதன்

விஸ்வநாதன்

சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்தது என்னவென்றால் சிஸ்கே ரசிகர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் வகையிலும், அவர்களை எங்களோடு இன்னும் இணக்கமாக வைத்திருக்கவும், இந்த ஆப்ஸை கட்டமைத்து இருக்கிறோம். இந்த ஆப்ஸ் மூலமும், சென்னைசூப்பர்கிங்ஸ்.காம் என்ற தளத்திலும் சென்று அதிகாரபூர்வமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் சிஎஸ்கே அணி ரசிகர்களையும் அணியையும் டிஜிட்டல் தளத்தில் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 மும்பை அணி

மும்பை அணி

வரும் ஏப்ரல்-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை அணி பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்கிறது. தற்சமயம் சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
5 லட்சத்துக்கும் அதிகமானோர்

5 லட்சத்துக்கும் அதிகமானோர்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள இந்த மொபைல் ஆப்ஸை இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
CSK launches mobile app ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X