வந்துவிட்டது புதிய 'கார்ட்டானா ஷோ மி' செயலி.!
கார்ட்டானா செயலி தற்போது ஃபாஸ்ட் ரிங் இன்சைடர்களுக்காக அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் மட்டும் கிடைக்கும்.
மைக்ரோசாப்ட் இன்று புதிய அம்சத்தை இன்சைடர்களுக்காக செய்துள்ளது. ஃபாஸ்ட் ரின் இன்சைடர்களுக்கு இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுதான் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 'கார்ட்டானா ஷோ மி' என்ற புதிய செயலி.

இந்த புதிய செயலி தற்போது ஃபாஸ்ட் ரிங் இன்சைடர்களுக்காக அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் மட்டும் கிடைக்கும். இந்த புதிய கார்ட்டானா செயலி விண்டோஸ் 10 செட்டிங்கை நேவிகேட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார்ட்டானா செயலி கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ் 10 ஓஎஸ்களில் தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களுக்கும் படிப்படியான ஸ்டெப்களை கூறி அவர்களுக்கு வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 ஓஎஸ்-ஐ இந்த கார்ட்டான தரும் 15 எளிய வழிமுறைகளின்படி யாருடைய உதவியும் இல்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து இன்சைடர் குழுவினர் கூறும்போது இந்த கார்ட்டானா ஷோ மி செயலி எந்தவித அனுபவமும் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பது மட்டுமின்றி பயனாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் வகையில் அமைக்கபப்ட்டுள்ளது.
மேலும் இந்த கார்ட்டானா செயலி, ஸ்க்ரீன் ரெசலூசனை எப்படி மாற்ற வேண்டும் என்று நீங்கள் குரலில் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும். எனவே டெக்னிக்கல் நபர் உதவியின்றி நீங்கள் எந்தவித பணியையும் முடிக்க முடியும் என்பதற்கு இந்த செயலி ஒரு உதாரணமாக உள்ளது.

இந்த செயலி உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும் அனைத்து பயனாளிகளுக்கும் இப்போதைக்கு கிடைக்கும் வகையில் இல்லை. இந்த செயலியை நீங்கள் டவுண்லோடு செய்ய முடியவில்லை என்றால் ஸ்டோரில் சென்று செக் செய்யுங்கள் அல்லது சில காலம் இந்த செயலியை டவுன்லோடு செய்ய காத்திருங்கள்.
இந்த பயன்பாட்டை தற்போது புதிதாக கிடைக்கும் இன்சைடர்ஸ் இன்டர்நெட்டில் மட்டுமே கிடைக்கும். சமீபத்திய இன்சைடர் ப்ரொஜக்டை ஃபாஸ்ட் ரிங்கில் பதிவு செய்துள்ளது. அடுத்த மாதம் ஸ்பிரிங் கிரியேட்டர்ஸ் புதுப்பிப்பு வெளியீட்டுடன் இந்த பயன்பாட்டை அனைத்து பயனர்களுக்கும் மைக்ரோசாப்ட் வழங்குவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஒருவேளை நீங்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்து அதன் பயனை அனுபவித்து இருந்தால் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள கமெண்ட் பாக்ஸை பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications