சென்னை: மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி : ஆப் மூலம் நேரத்தைமுன் பதிவு செய்யலாம்.!
'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்பது மிகமுக்கிய காரணமாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியும், பேட்டரி வாகனங்களுக்கான தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கங்கள், அதன் கொள்முதலில் இருக்கும்.

எலக்ட்ரிக் வாகனங்கள்
சர்வதேச சிக்கல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு என பெட்ரோல்-டீசலுக்கு ஏராளமான கெடுபிடிகள் உருவாகியிருப்பதால், இந்திய அரசாங்கம் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க தொடங்கி இருக்கிறது. அதேசமயம், வெப்பமயமாதலை தவிர்க்கும் பார்முலாவாகவும், எலக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்ற.
புதுமைகளை விரும்பும் இந்தியர்களும், எலக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களையும், சந்தைப்படுத்தப்படும் வண்டிகளையும் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

மெட்ரோ ரயில் நிலையத்தில்
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஜ் செய்து கொள்ளும் வசதி
குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிக்களை ஈர்க்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது என்றுதான்கூறவேண்டும். அந்தவகையில் தற்சமயம் பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும்
வசதியை தொடங்கியுள்ளது.
Passenger utilizing the EV Charger Facility at Nandanam Metro Station
— Chennai Metro Rail (@cmrlofficial) September 30, 2019
Download the “ELECTREEFI” app from google playstore and book your slots today!
Installation of EV Charger Facility under progress at Anna Nagar East, Koyambedu and High court Metro Stations! pic.twitter.com/MgeXGRrWUm
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் டிவிட்டர்
இந்த சேவையை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னைமெட்ரோ ரயில் நிலையத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், தற்போது பயணிகள்தங்களின் மின்சார வாகனங்களை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ELECTREEFI ஆப்
இதற்குவேண்டி பயணிகள் ELECTREEFI என்ற ஆப் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம்
செய்து தங்களுக்கான நேரத்தையும் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு
மேலும் இந்த புதிய வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றும், விரைவில் அண்ணாநகர் கிழக்கு,கோயம்பேடு மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்க்கப்படவுள்ளது எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications