ஐபோன் பயனாளிகளுக்கு உதவும் 10 சிறந்த பாதுகாப்பு செயலிகள்

By Siva
|

ஐபோன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு வகையில் ஹேக்கர்கள், மால்வேர்களின் அட்டாக்கை சந்திக்க வேண்டிய நிலை அவ்வப்போது ஏற்படும்.

ஐபோன் பயனாளிகளுக்கு உதவும் 10 சிறந்த பாதுகாப்பு செயலிகள்

வைரஸ்கள், மால்வேர்கள், ஆகியவை ஐபோன்களை செயலிழக்கவோ, அல்லது மெதுவாக செயல்படும் வகையிலோ செய்வது மட்டுமின்றி நம்முடைய முக்கிய டேட்டாக்களும் பறிபோகும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஐஒஎஸ் போன்கள் பயன்படுத்துபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு செயலிகள் குறித்து தற்போது பார்ப்போம்

லுக் அவுட் (Lookout)

லுக் அவுட் (Lookout)

இந்த செயலி உங்களுடைய ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மற்றும் அனைத்துவிதமான உபகரணங்களையும் பாதுகாக்கும் தன்மை உடையது.

உங்கள் போனில் உள்ள பர்சனல் விபரங்களை பாதுகாக்கவும், டேட்டா பாதுகாப்புக்கும், போன் தொலைந்தால் மீண்டும் கண்டுபிடிக்கவும் மற்றும் அனைத்துவிதமான ரிஸ்க்குகளுக்கும் இந்த செயலி உதவிகரமாக இருக்கும். எனவே ஐபோன் பயனாளிகள் இந்த செயலியை பயன்படுத்தி தங்கள் போனை பாதுகாத்து கொள்ளலாம்

பெஸ்ட்போன் செக்யூரிட்டி புரோ (Best Phone Security Pro)

பெஸ்ட்போன் செக்யூரிட்டி புரோ (Best Phone Security Pro)

ஐபோன் போனின் பாதுகாப்புக்கு ஏற்ற செயலிகளில் ஒன்று இந்த பெஸ்ட்போன் செக்யூரிட்டி புரோ. இந்த செயலியை ஆக்டிவேட் செய்து அலாரத்தை ஆன் செய்துவிட்டால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் பாதுகாக்கலாம்.

மேலும் இந்த செயலில் தவறான பாஸ்வேர்டை பதிவு செய்தால் உடனே உபயோகிப்பாளரை போட்டோ எடுத்துவிடும். இதைவைத்து போனை திருட முயற்சிப்பவரை எளிதில் அடையாளம் கொள்ளலாம். எனவே ஐபோனின் பாதுகாப்புக்கு உகந்த செயலிகளில் இதுவும் ஒன்று

ஃபைண்ட் மை ஐபோன் (Find My iPhone)

ஃபைண்ட் மை ஐபோன் (Find My iPhone)

ஒருசில ஐபோன்களில் இந்த செயலி ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் ஐபோன், ஐபேட், ஐபோட் டச் போன்ற உபகரணங்களை தொலைத்துவிட்டால் வேறு எந்த ஐஒஎஸ் சாதனங்களில் இருந்து தொலைந்த சாதனத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய டேட்டாவை பாதுகாத்து கொள்வதோடு தொலைந்த பொருள் இருக்குமிடத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலியை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் ஆப்பிள் ஐடியை வைத்து சைன் - இன் செய்தாலே போதும் உங்கள் போனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தொலைந்த போன் கண்டுபிடிக்கப்படுவதோடு, ரிமோட் மூலம் லாக் செய்யவும், டேட்டாக்களை முழுவதும் அழிக்கவும் முடியும்

ஃபோஸ்காம் சர்வேலன்ஸ் புரோ: (Foscam Surveillance Pro)

ஃபோஸ்காம் சர்வேலன்ஸ் புரோ: (Foscam Surveillance Pro)

ஐபோனை பாதுகாக்கும் செயலிகளில் மிக முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று. உங்களுடைய போஸ்காம் கேமிராவை கண்ட்ரோல் செய்ய உதவும் ஒரே செயலி இது மட்டுமே. இந்த போன் மூலம் உங்கள் வீடு, அலுவலகம், வயதான தாய், தந்தையர் அல்லது சிறு குழந்தை ஆகியவற்றை கண்காணிக்கும் மூன்றாவது கண்ணாகவும் இந்த செயலி உங்களுக்கு பயன்படும்

எம் செக்யூர் பாஸ்வேர்டு மேனேஜர் (mSecure Password Manager)

எம் செக்யூர் பாஸ்வேர்டு மேனேஜர் (mSecure Password Manager)

இந்த செயலியை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தாலும், இதனால் ஏற்படும் பாதுகாப்பு உங்கள் விலை மதிப்பில்லா பொருட்களை பாதுகாக்கும் தன்மை உடையது. உங்களுடைய பாஸ்வேர்டுகள் எந்த காரணத்தை முன்னிட்டும் யாராலும் கைப்பற்ற முடியாத வகையிலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இந்த செயலி பாதுகாக்கும்

நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி ( Norton Mobile Security)

நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி ( Norton Mobile Security)

ஐபோன் அல்லது ஐபேட் தொலைந்து விட்டாலோ அல்லது திருடு போய்விட்டாலோ இந்த செயலியின் பயன்பாடு மிக அதிகம். ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்கள் போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கொடுப்பது மட்டுமின்றி இண்டர்நெட் கனெக்சன் மூலம் அலாரம் அடித்து போனை கண்டுபிடிக்க உதவும். மேலும் தொலைந்த போனில் உள்ள டேட்டாக்களை எளிதில் கைப்பற்றவும் உதவும்

 அவிரா வால்ட் (Avira Vault)

அவிரா வால்ட் (Avira Vault)

இந்த செயலி மூலம் உங்களுடைய பர்சனல் புகைப்படங்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்ட் விபரங்கள் ஆகியவற்றை பாஸ்வேர்டு அமைத்து பாதுகாக்க உதவும் டிஜிட்டல் பாதுகாப்புதான் இந்த செயலி. ஒருசில குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மை தவிர வேறு யாரும் பார்க்க முடியாத வகையில் பாஸ்வேர்டுகளை அமைத்து கொள்ள இந்த செயலி உதவும்

ஓபரா ஃப்ரி விபிஎன் (Opera Free VPN0)

ஓபரா ஃப்ரி விபிஎன் (Opera Free VPN0)

மிக வேகமாக அதே சமயம் நல்ல பாதுகாப்பு அம்சம் உள்ள இலவச செயலி தான் இந்த ஓபரா விபிஎன். தேவையில்லாத விளம்பரங்களை தடை செய்கிறது. மேலும் இணையத்தில் நம்மை யாராவது தெரியாமல் ஃபாலோ செய்தால் அவர்களை பிளாக் செய்துவிடும்

சிக்னல் (Signal)

சிக்னல் (Signal)

இந்த சிக்னல் செயலி மூலம் உங்களுடைய எஸ்.எம்.எஸ் செலவு மிச்சப்படும். இதன் மூலம் குரூப்புகள் உருவாக்கி அதன் மூலம் ந்ண்பர்களுடன் விடிய விடிய சேட் செய்தாலும் உங்கள் பர்ஸ்ஸுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் தனிப்பட்ட ரகசிய தகவல்களை பாதுகாப்புடன் பகிர்ந்தும் கொள்ளலாம். உங்களுடைய டேட்டா உங்களை தவிர வேறு யாருக்கும் செல்வதை இந்த செயலி தடுக்கும்

விக்கர் மி (Wickr Me)

விக்கர் மி (Wickr Me)

உங்கள் மொபைல் போனில் உள்ள டெக்ஸ்ட், புகைப்படம், வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை கண்ட்ரோல் செய்ய உதவும் செயலிதான் இது. மிகச்சிறந்த செக்யூரிட்டி மற்றும் பிரைவசி வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி உங்களை மோசடி உலகில் இருந்து பாதுகாகும்

எனவே மேற்கண்ட பத்து செயலிகளில் ஒன்றை நீங்கள் உங்கள் ஐபோனில் பயன்படுத்தி உங்கள் போனை பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
These apps will help you a lot to secure your privacy.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X