இந்த ஆப் மூலம் ஆண் குரலைப் பெண்ணாக மாற்றி உங்கள் நண்பரைக் கேலி செய்யலாம்.!
நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் குரலைப் பெண்ணாக மாற்றி உங்கள் நண்பர்களைக் கேலி செய்து நன்கு ஏமாற்றலாம். நீங்கள் பெண்ணாக இருந்தாலும் கவலை வேண்டாம், உங்கள் மென்மையான குரலை கணீர் என்ற ஆண் குரலாக மொபைல் ஆப் செயலி மூலம் மாற்றி உங்கள் நண்பரைக் கேலி செய்யலாம். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

கூகுள் பிளே ஸ்டோர்
முதலில் உங்களுக்கு பிடித்தமான குரல் மாற்றும் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். கூகுள் பிளே ஸ்டோர் சென்று Make Funny voice effects during Call என்று டைப் செய்து பட்டியலில் உள்ள செயலியை ட்ரை செய்யுங்கள்.

வாய்ஸ் சேஞ்ஜர் பதிவிறக்கம்
நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள செயலியை ஓபன் செய்து, முதலில் நீங்கள் டயல் செய்ய வேண்டிய உங்கள் நண்பரின் எண்ணை டைப் செய்துகொள்ளுங்கள். அவருக்கு உங்கள் எண் எப்படித் தெரியவேண்டும் என்ற ஆப்ஷனும் சில செயலிகளில் வழங்கப்பட்டுள்ளது.

பிடித்த குரலை தேர்வு செய்யுங்கள்
பிறகு உங்கள் குரல் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு. செயலியில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்துகொள்ளுங்கள். பெண் குரல் வேண்டும் என்றால் பெண் குரலைத் தேர்வு செய்யுங்கள்.

கூடுதல் ஆப்ஷன்கள்
சில செயலிகளில் டிராகன் குரல், ரோபோட் குரல், ஏலியன் குரல், நீருக்கு அடியிலிருந்து பேசும் குரல், ட்ராபிக்கில் இருப்பது போன்ற பின்னணி வாய்ஸ்கள் போன்ற பல குரல்களுக்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப செலெக்ட் செய்துகொள்ளுங்கள்.

ட்ரை செய்ய வேண்டிய ஆப்ஸ்கள்
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் சில முன்னணி செயலிகளின் பட்டியல்.
1.Fun Phone Call (iOS)
2.Funny Call (iOS)
3.Funcall (Android / iOS)
4.Call Voice Changer (Android / iOS)
5.Voice Changer (Android / iOS)

சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா..!
இந்த உலகத்துல எல்லாத்துக்குமே போட்டி உண்டு. எந்த ஒரு போட்டிக்குமே, எப்பவுமே ரெடியாக, உஷாராக இருக்கணும். அப்போதான் ஜெயிக்க முடியும்..!
ஆனா, சில விஷயத்துக்கு போட்டியே கிடையாது. யார் வந்தாலும் அடி - உதை தான், நாங்க தான் 'கிங்', நாங்க தான் ஜெயிப்போம் என்று 'குதிக்கும்' சீனாவையே.. 'ஒரம்போ ஒரம்போ' என்று சுவாரசியமான கணக்கெடுப்பில் ஒன்றில் பின்னுக்கு தள்ளியுள்ளது இந்தியா..!

ஆய்வு :
சமீபத்தில் வித்தியாசமான, அதே சமயம் 'கொஞ்சம்' விஷமத்தனமான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது..!

முடிவு :
ஏழு நாடுகளில் மொத்தம் 7112 ஸ்மார்ட்போன் பயனாளிகளை கொண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவு கடந்த செய்வாய் அன்று வெளியிடப்பட்டது..!

இந்தியர்கள் :
அந்த ஆய்வின்படி எந்த நாட்டினரை விடவும், இந்தியர்கள் தான் தூங்கும்போது கூட, மொபைலை கையில் வைத்துக் கொண்டே தூங்குகிறார்களாம்..!

செக்ஸை விட :
அதாவது இந்தியர்கள் செக்ஸை விட ஸ்மார்ட்போன்களைத் தான் அதிகம் விரும்புகிறார்கள் என்று நக்கல் அடிக்கிறது அந்த ஆய்வு..!

ஸ்லீப்பிங் பார்ட்னர் :
அது மட்டுமின்றி இந்த ஆய்வின்படி, இந்திய மக்களின் 'புதிய' ஸ்லீப்பிங் பார்ட்னர் - ஸ்மார்ட்போன்கள் தானாம்..!

பட்டியல் :
ஆய்வில் உட்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியல் : இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ஸ்பெயின், சீனா மற்றும் மெக்ஸிக்கோ..!

தூங்கும் போதும் :
ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்ட 7112 பேர்களில் 60% பேர் தூங்கும் போதும் மொபைலை கையில் வைத்துக் கொண்டே தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்களாம்..!

அதிகம் :
அந்த 60% பேரில், இந்தியர்கள் தான் அதிகமாம். அதாவது அந்த 60 சதவிகிதத்தில், 74% இந்தியர்கள் தானாம்..!

சீனா :
70% பெற்று இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது..!

குளிக்கும் போது :
மேலும் இந்த கணக்கெடுப்பின்படி 6 பேரில் ஒருவர் மட்டுமே குளிக்கும் போதும் கூட மொபலை பயன் படுத்துகிறார்களாம்..!

அதிக அக்கறை :
மேலும் 54% பேர், எதை விடவும் தங்கள் போன் மீது தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்வோம் என்று கூறி உள்ளார்களாம்.!

மகிழ்ச்சி :
இருந்தாலும் கணக்கு எங்கயே இடிக்குது..!? வெறும் 39% பேர் மட்டுமே தங்கள் ஸ்மார்ட்போன் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார்களாம்..!

மோட்டோரோலா :
இந்த 'சுவாரசியமான' ஆய்வை நடத்தியது - பிரபல மோட்டோரோலா நிறுவனம்..!


Click it and Unblock the Notifications