ஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை !

“ விமானத்தில் உயர்வகுப்பில் பயணிப்பவர்களுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன.”

|

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், வெற்றிடக் குழாய்களின் வழியாக மிக வேகமாக இயங்கும் நவீன பயணிகள் போக்குவரத்துத் தொழில்நுட்பம் குறித்துக் கூறிய போது சிலர் ஆச்சரியப்பட்டனர், பலர் கேலி சேய்தனர். அப்பொழுதுதான், ஹைபர்லூப் என்னும் போக்குவரத்துத் தொழில் நுட்பம் பிறந்தது.

2015 ஆம் ஆண்டு எலன் மஸ்க்கினுடைய நிறுவனம், ஒரு மைல் நீளமுள்ள ஹைபர்லூப் போக்குவரத்துப் பாதையை அமைத்தது. 2016 ஆம் ஆண்டு மசாசூட் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள் குறைந்த அழுத்தம் கொண்ட ஹைபர்லூப் போக்குவரத்து வாகனத்தைச் சோதித்துக் காட்டினர்.

கனவுத் திட்டம்

கனவுத் திட்டம்

வெற்றிடக் குழாய்களின் வழியாக அதிக வேகமான போக்குவரத்தை மேற்கொள்ளும் ஹைபர்லூப் தொழில்நுட்பம் ஒரு கனவுத் திட்டம் என்னும் நிலைமையைத் தாண்டி தற்போது அது நிஜமான செயல்வடிவத்தைப் பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு அபுதாபியில் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். அதேபோல அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரையும் கிளிவ்லேன்ட் (Cleveland) நகரையும் இணைக்கும் வகையில் ஹைபர்லூப் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஹைபர்லூப்

ஹைபர்லூப்

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலாஜி (HTT) நிறுவனம் ஹைபர்லூப் தொழில் நுட்பத்தின் மூலமாக மத்திய ஆசியாவில் உள்ள துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 800 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் பல மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியுள்ளது.

 பிசினஸ் இன்சைடர்

பிசினஸ் இன்சைடர்

இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிர்க் அல்பர்ன் (Dirk Ahlborn ) பிசினஸ் இன்சைடர் ( Business Insider) என்னும் இதழுக்கு அளித்த பேட்டியில் ஹைபர்லூப் தொழில் நுட்பம் குறித்தும், இப் போக்குவரத்தின் எதிர்காலம் குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கிய அம்சங்கள் குறித்து இனிக் காண்போம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

"பொதுப் போக்குவரத்து என்பது அவ்வளவு சிறப்பானதாக இல்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மெட்ரோ போக்குவரத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியாலும் நிர்வாகத்திற்கு 2.50 டாலர் நஷ்டம் ஏற்படுகிறது."

" விமானத்தில் உயர்வகுப்பில் பயணிப்பவர்களுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன."


" பாதுகாப்பு என்னும் பெயரில் பயணிகள் விலங்குகளைப் போல நடத்தப்படுகின்றனர். பாதுகாப்பு என்பது உயவியல் சார்ந்தது. இந்த விசயத்தில் இன்னும் மேம்பாடு அடைய வேண்டியுள்ளது."

 சீனா அல்லது ரஷ்யா

சீனா அல்லது ரஷ்யா

" ஹைபர்லூப் போக்குவரத்தில் பயணிகளின் தகவல்கள் பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும். அதனால் தேவையற்ற தொல்லைகள் குறையும்"

" கடல்கடந்து பயணிப்பதானால் ஏற்படும் ஆபத்துகள் ஹைபர்லூப் போக்குவரத்தில் இல்லை. ஏனென்றால் கடலைக் கடக்கும் வகையில் இதனுடைய போக்குவரத்துப் பாதை அமைவதில்லை." "விமானப் போக்குவரத்தைக் காட்டிலும் ஹைபர்லூப் போக்குவரத்து பாதுகாப்பு மிகுந்தது. கடத்தல், தீவிரவாதத் தாக்குதல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் ஹைபர்லூப் போக்குவரத்தில் குறைவு."

"ஜனநாயக நாட்டில் புதிய திட்டங்களை மிக விரைவாக அறிமுகப்படுத்திட முடியாது. அமெரிக்காவில் பல்வேறு வகையான நடைமுறை விதிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பினால் அது உடனடியாக நடக்கும்" "ஹைபர்லூப் போக்குவரத்துத் தொழில் நுட்பத்தை யாரும் ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இதுதான் எதிர்காலத்திற்கான போக்குவரத்தாகும்."

Best Mobiles in India

English summary
CEO of a Hyperloop Company Has Some Surprising Thoughts On The Future of Transportation: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X