ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!

|

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மறுபுறம் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. COVID-19 தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் அப்டேட் என்ற வகையில் இந்த வைரஸ் பல ஸ்மார்ட்போன் பயனர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடி, பயனர்களை ஏமாற்றுகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வைரஸ் குறித்து சிபிஐ தற்பொழுது எச்சரித்துள்ளது.

செர்பரஸ் எனப்படும் புதிய சாப்ட்வேர் வைரஸ்

செர்பரஸ் எனப்படும் புதிய சாப்ட்வேர் வைரஸ்

செர்பரஸ் எனப்படும் இந்த புதிய தீங்கிழைக்கும் சாப்ட்வேர் வைரஸ், பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய நிதித் தரவுகளைத் திருடுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்டர்போல் உள்ளீடுகளைப் பெற்ற பின்னர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் முகவர் நிலையங்களை மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்பான அப்டேட் என்ற பெயரில் இந்த நாசவேலை நடந்து வருகிறது.

எப்படி ஸ்மார்ட்போன்களை இந்த வைரஸ் பாதிக்கிறது?

எப்படி ஸ்மார்ட்போன்களை இந்த வைரஸ் பாதிக்கிறது?

இந்த வைரஸ் ட்ரோஜன் வகை வைரஸ் ஆகும். இது ஸ்மார்ட்போன் பயனர்களைக் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்புகொண்டு, COVID-19 புதுப்பிப்புகளை வழங்கும் தகவல் என்ற ஒரு இணைப்பு லிங்கை கிளிக் செய்யச் சொல்கிறது. பயனர்கள் உண்மையில் இது கொரோனா பாதுகாப்பு தகவல் எனக் கருதி கிளிக் செய்ததும், அந்த லிங்க் பயனர்களின் ஸ்மார்ட்போனில் ஒரு தீங்கிழைக்கும் பயன்பாட்டை நிறுவுகிறது.

FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

நிதி தரவுகளை திருடும் வைரஸ்

நிதி தரவுகளை திருடும் வைரஸ்

இந்த தீங்கிழைக்கும் பயன்பாடு பயனரின் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான நிதி தரவைப் பிரித்தெடுக்கிறது. குறிப்பாகப் பயனர்களின் கிரெடிட் கார்டு விபரங்களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் போலியான பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டு பயனரின் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுகிறது. கூடுதலாக, இந்த மொபைல் வைரஸ் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், இரண்டு காரணி அங்கீகார விவரங்களைக் கைப்பற்ற முயல்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

கோவிட் -19 பாதுகாப்பு என்ற பெயரில் ஃபிஷிங்

கோவிட் -19 பாதுகாப்பு என்ற பெயரில் ஃபிஷிங்

இன்டர்போலில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், சிபிஐ செர்பரஸ் எனப்படும் வங்கி ட்ரோஜன் தொடர்பான எச்சரிக்கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த தீங்கிழைக்கும் மென்பொருள் கோவிட் -19 தொற்றுநோயைப் பயன்படுத்தி, போலியான கோவிட்-19 தொடர்பான எஸ்எம்எஸ் தகவல்களை அனுப்பி பயனர்களை ஏமாற்றுகிறது. இந்த தீம்பொருள் வழக்கமான ஃபிஷிங் முறை மூலம் ஏமாற்றி பரவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!

மருத்துவமனைகளையும் விட்டுவைக்காத தீம்பொருள்

மருத்துவமனைகளையும் விட்டுவைக்காத தீம்பொருள்

முதலில் இந்த தீம்பொருள் ஏப்ரல் 7ம் தேதி முதல் சிபிஐ இன் கவனத்திற்குள் வந்துள்ளது. சிபிஐ இன் இன்டர்போல் பிரிவு, நாடு முழுவதும் உள்ள காவல் துறைகளுக்கு இந்த வைரஸ் தொடர்பான எச்சரிக்கை ஆலோசனைகளை அனுப்பியுள்ளது. குறிப்பாக இந்த தீம்பொருள் கொரோனா தொற்று மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவல்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் சிபிஐ எச்சரித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் பணயக்கைதிகளாக மாற்றும் தாக்குதல்

டிஜிட்டல் முறையில் பணயக்கைதிகளாக மாற்றும் தாக்குதல்

இந்த வைரஸ் மூலம் சைபர் குற்றவாளிகள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை டிஜிட்டல் முறையில் பணயக்கைதிகளாக வைத்திருக்க ரான்ஸோம்வேர் (ransomware) முறையைப் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவமனைகள் தங்கள் சேவைகளை மீட்டெடுக்க, ஸ்கிரீனில் வரும் குறிப்பிட்ட தொகை செலுத்தும் வரை முக்கிய கோப்புகள் மற்றும் அமைப்புகளை அணுக முடியாமல் இந்த வைரஸ் தடுக்கின்றது.

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!

செர்பெரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு

செர்பெரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு

செர்பெரஸ் எனப்படும் இந்த ஸ்மார்ட்போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனச் சர்வதேச போலீசார் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உங்கள் ஸ்மார்ட்போனிற்கு தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், அதில் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ விடுத்த எச்சரிக்கை

சிபிஐ விடுத்த எச்சரிக்கை

இந்த ஸ்மார்ட்போன் வைரஸ் தாக்குதலுக்கு பலரும் தற்பொழுது பதித்துள்ள நிலையில், கூடுதல் சைபர்கிரைம் குற்றங்கள் நடக்காமல் பாதுகாப்பதற்காக சிபிஐ அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த செர்பரஸ் வைரஸ்குறித்து சிபிஐயும் அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
CBI Has Warned All States About Smartphone Trojan Virus Cerberus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X