CamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா? இல்லைனா உடனே இதை இன்ஸ்டால் செய்யுங்க!

|

உலகம் முழுதும் உள்ள 200 நாடுகளில் சுமார் 370 மில்லியன் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருக்கும் இந்த கேம்ஸ்கேனர் (CamScanner) பயன்பாட்டுச் செயலி உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை ஏன் உலகத்தில் உள்ள இத்தனை மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதையடுத்து, அடுத்த முக்கிய வேலையாக உங்கள் போனிலும் கேம்ஸ்கேனர் பதிவிறக்கம் செய்துகொள்ளத் தயாராகுங்கள்.

கேம்ஸ்கேனர் வெளியிட்ட புதிய அப்டேட்

கேம்ஸ்கேனர் வெளியிட்ட புதிய அப்டேட்

உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், சிறு வணிகங்கள், நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்று, உலகத்தில் உள்ள அனைத்து பிரபலமான இடங்களிலும் இந்த கேம்ஸ்கேனர் செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது இந்த பயன்பாட்டுச் செயலியை கேம்ஸ்கேனர் நிறுவனம் ஆங்கிலம் தவிர 4 பிரதேச மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது.

என்ன செய்யும் இந்த கேம்ஸ்கேனர்?

என்ன செய்யும் இந்த கேம்ஸ்கேனர்?

கேம்ஸ்கேனர் பயன்பாட்டுச் செயலியைப் பயன்படுத்தி மக்கள் தங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும், தங்களின் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து டாக்குமெண்ட் ஃபைல்களாக சேமித்துக்கொள்ளலாம். கேம்ஸ்கேனர் நிறுவனம், இந்தியப் பயனர்களைக் குறிவைத்து இந்தி, பெங்காலி, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், கேம்ஸ்கேனரை அணுக கூடும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!

இந்தியாவை குறிவைத்து 4 மொழிகளில் கேம்ஸ்கேனர்

இந்தியாவை குறிவைத்து 4 மொழிகளில் கேம்ஸ்கேனர்

இந்தியாவின் மிக முக்கியமான 4 பிரதேச மொழிகளின் அறிமுகத்துடன், இந்த புதுப்பித்தலின் மூலம், கேம்ஸ்கேனர் இந்தியாவில் அதிகபட்ச ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதன் புதிய பயனர்களுக்காக, தங்களுக்கு விருப்பமான மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் புதிய அனுமதியை கேம்ஸ்கேனர் இப்பொழுது வழங்குகிறது.

பழைய பயனர்கள் உடனே அப்டேட் செய்யுங்கள்

பழைய பயனர்கள் உடனே அப்டேட் செய்யுங்கள்

மேலும் ஏற்கனவே கேம்ஸ்கேனர் பயன்படுத்தும் பயனர்கள், தங்கள் மொழி விருப்பங்களைப் பயன்பாட்டுச் செயலியின் செட்டிங்ஸ்-ற்கு சென்று, விருப்பமான மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த புதிய மொழி மாற்றம் அப்டேட் தற்பொழுது, ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் களமிறக்கப்பட்டுள்ளது. முந்தைய கேம்ஸ்கேனர் பயனர்கள் உடனே அப்டேட் செய்து இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

TRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்!TRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்!

370 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம்

370 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம்

இதனால் இப்போது அனைவருக்கும் அணுகக்கூடிய மொபைல் மூலம், அவர்களுக்கு பிடித்தமான மொழியிலேயே அவர்களின் ஆவணத்தை எளிமையாக வெறும் சில நொடிகளில் ஸ்கேன் செய்துகொள்ளலாம். கூகிள் பிளே ஸ்டோர், iOS ஆப் ஸ்டோர்களில், கேம்ஸ்கேனர் செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 370 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தேவையான ஒரு செயலி தான் இந்த கேம்ஸ்கேனர்

தேவையான ஒரு செயலி தான் இந்த கேம்ஸ்கேனர்

இந்த கேம்ஸ்கேனர் பயன்பாட்டை ஒவ்வொரு நாளும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்கின்றனர். உலகின் மிகவும் பிரபலமான மொபைல் ஸ்கேனிங் பயன்பாடுகளில் கேம்ஸ்கேனர் தனி இடம் பிடித்ததற்கு இதுவும் ஒரு காரணமே. ஆவணங்களை ஸ்கேன் செய்ய உதவும் இந்த சிறப்பான செயலியை உடனே இன்ஸ்டால் செய்து தமிழிலும் பயன்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
CamScanner Is Now Available In 4 Indian Regional Languages : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X