வெறும் 5 ரூபாய்க்கு டிஜிட்டல் தங்கம் வாங்கலாம்! டிஜிட்டல் உலகில் அதிரடி காட்டும் அமேசான்!

|

இந்த டிஜிட்டல் காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. முதற்கட்டமாக நமது கையிலிருந்த காசு பணம் எல்லாம் டிஜிட்டல் ஆனது, தற்பொழுது தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக டிஜிட்டல் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. டிஜிட்டல் தங்கமா அப்படினா என்ன? வெறும் 5 ரூபாயில் தங்கம் வாங்க முடியுமா? என்ற உங்களுடைய கேள்விக்கான பதில் இந்த பதிவில் உள்ளது.

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?

முதலில் டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன என்று பார்க்கலாம், டிஜிட்டல் தங்கத்தை அரசுக்கு சொந்தமான MMTC (மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) வழங்குகிறது, இது சுவிட்சர்லாந்தின் PAMP (Produits Artistiques Métaux Précieux) உடன் நேரடி தொடர்பில் உள்ளது.

24 கேரட் கோல்டு

24 கேரட் கோல்டு

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 24 கேரட் கொண்ட 99.5% தூய தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்குகிறீர்கள். டிஜிட்டல் தங்கத்தில் ரூ .100 வரை முதலீடு செய்யலாம். அமேசான் தற்பொழுது 5 ரூபாய்க்கு டிஜிட்டல் தங்க விற்பனையை துவங்கியுள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் 1 ரூபாய்க்கு எல்லாம் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?

ஏன் டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பானது மற்றும் சிறந்தது?

ஏன் டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பானது மற்றும் சிறந்தது?

டிஜிட்டல் தங்க முறை உங்களுக்குத் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கவும் விற்கவும் வெளிப்படையான வழிமுறையை வழங்குகிறது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நீங்கள் நிஜ தங்கத்தை வாங்குவது போன்றது தான். இதில் உள்ள ஒரே விதிவிலக்கு என்னவென்றால், நீங்கள் வாங்கும் தங்கத்தை நகையாகவோ அல்லது தங்க பிஸ்கட்டாகவோ அல்லது நிஜமாகவோ உங்கள் கையில் நீங்கள் வைத்திருக்கப் போவதில்லை என்பதே உண்மை.

டிஜிட்டல் முறையில் தங்கம்

டிஜிட்டல் முறையில் தங்கம்

டிஜிட்டல் முறையில் மட்டுமே உங்கள் கணக்கில் உங்களுக்குச் சொந்தமான தங்கம் பாதுகாக்கப்படுகிறது. நிஜமான தங்கம் இல்லை என்றாலும் கூட தங்கத்தின் விலைக்கே நீங்கள் தங்கத்தை வாங்குகிறீர்கள். நீங்கள் வாங்கும் இந்த டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் தேவைப்படும் நேரத்தில்விற்பனையும் செய்துகொள்ளலாம். அன்றைய தினத்தில் தங்கம் என்ன விலைக்கு விற்பனை ஆகிறதோ அதே விலைக்கு நீங்கள் உங்கள் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!

தங்கத்தின் பயன் லாபத்துடன்

தங்கத்தின் பயன் லாபத்துடன்

இதனால் தங்கத்தின் தூய்மை, சேமிப்பு, கட்டணம் வசூலித்தல், வீணடிக்கப்படுதல் மற்றும் பணப்புழக்கம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் உண்மை. நிஜ தங்கம் வேண்டாம், ஆனால் தங்கத்தின் பயனையும் லாபத்தையும் மட்டும் அடைந்தாள் போதும் என்பவர்களுக்கு இது தெளிவான நன்மையை வழங்குகிறது.

புதிதாக ஆன்லைன் டிஜிட்டல் தங்க விற்பனை

புதிதாக ஆன்லைன் டிஜிட்டல் தங்க விற்பனை

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் தற்பொழுது அதன் அமேசான்.காம் இந்தியா தளத்தில் புதிதாக ஆன்லைன் டிஜிட்டல் தங்க விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் கோல்டு விற்பனை தற்பொழுது இந்தியாவில் சூடுபிடித்துள்ளது. அமேசான் தற்பொழுது குறைந்தபட்சமாக வெறும் 5 ரூபாயில் இருந்து டிஜிட்டல் தங்கம் வாங்கும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பழைய டிவிக்கு கோடி ரூபாய் தரோம்: அறிய சிவப்பு பாதரசம் அதுல இருக்கு-சதுரங்க வேட்டைய ஓவர்டேக் பண்றாங்கபழைய டிவிக்கு கோடி ரூபாய் தரோம்: அறிய சிவப்பு பாதரசம் அதுல இருக்கு-சதுரங்க வேட்டைய ஓவர்டேக் பண்றாங்க

அமேசானின் Gold Vault

அமேசானின் Gold Vault

அமேசானின் இந்த புதிய சேவைக்கு அமேசான் நிறுவனம் "Gold Vault" என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய சேவையை சிறந்த அனுபவத்துடன் வழங்க அமேசான் நிறுவனம் சேப்கோல்டு (Safegold) நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. அமேசான் கோல்ட் வால்ட் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கம் அனைத்தும் 24 கேரட் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தங்கத்தை வாங்கவும், விற்கவும் முடியும்.

பாதுகாப்பு லாக்கர்

பாதுகாப்பு லாக்கர்

அமேசான் கோல்ட் வால்ட் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தினசரி சந்தை விலை மாற்றத்தின் கீழ் தங்கத்தை வாங்கவும், விற்பனை செய்ய முடியும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்களின் தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சேப்கோல்டு நிறுவனம் சார்பில் உங்களுக்கு பாதுகாப்பு லாக்கரும் வாடகைக்குக் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

1 ரூபாய்க்கு கூட வாங்கலாம்

1 ரூபாய்க்கு கூட வாங்கலாம்

அமேசான் நிறுவனத்தைப் போல இந்தியாவில் பேடிஎம், போன்பே, கூகிள் பே, சியோமி பேமெண்ட் போன்று பல நிறுவனங்கள் டிஜிட்டல் தங்கத்தை டிஜிட்டல் முறையில் விற்பனை செய்து வருகிறது. டிஜிட்டல் தங்கத்தை சரியான முறையில் வாங்க நீங்கள் அந்தந்த நிறுவனத்தின் மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். பேடிஎம், கூகிள் பே மற்றும் போன்பே போன்ற தளங்களில் டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் வெறும் 1 ரூபாய்க்கு கூட வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

100 கிலோ டிஜிட்டல் தங்கம் விற்பனை

100 கிலோ டிஜிட்டல் தங்கம் விற்பனை

ஏப்ரல் மாத அக்ஷய திருதியை நாளில் பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் சுமார் 37 கிலோ மற்றும் 100 கிலோ டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த நிறுவனங்களுடன் நேரடி போட்டியில் அமேசான் நிறுவனமும் டிஜிட்டல் விற்பனையைத் துவங்கிக் களமிறங்கியுள்ளது. அமேசான் மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்க வேண்டும் என்பவர்கள் அமேசான் மொபைல் ஆப் மூலம் தங்கத்தை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Buy Digital Golg Minimum Of ₹5 At Amazon: Partnered With SafeGold : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X