இனி போலி பொருட்களை சில நொடிகளில் எளிதாக அடையாளம் காணலாம்! எப்படி தெரியுமா?

|

இனி சந்தையில் விற்கப்படும் பொருட்களில் உண்மையான பொருள் எது? போலியான பொருள் எது என்பதை எளிதாக அடையாளம் காணும் புதிய பயன்பாட்டுச் செயலியை இந்திய அரசாங்கம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த பயன்பாட்டின் உதவியுடன் அனைத்து பொருட்களின் தகவல் மற்றும் நகைகள் போன்றவற்றின் போலிகளை எளிதாக நீங்கள் அடையாளம் காண முடியும். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

எளிதில் அடையாளம் காணும் முறை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் போலியானவற்றை எளிதில் அடையாளம் காணும் ஒரு புதிய செயல்முறையை இந்திய அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இதை நீங்கள் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைச் சட்டம் 2019 சட்டத்தின் கீழ் இந்த அதிகாரம் தற்பொழுது நுகர்வோருக்கு மத்திய அமைச்சகம் (Union Ministry) மூலம் வழங்கப்பட்டுள்ளது.

 அசல் தானா அல்லது போலியா

இனி இந்திய சந்தையில் நீங்கள் எந்தவொரு பொருளை வாங்கினாலும், ​​அது உண்மையில் முறையான தயாரிப்பு தானா, அசல் தானா அல்லது போலியான ஒரு ஏமாற்றத் தயாரிப்பா என்பதை உடனடியாக நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். புதிதாகத் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

BIS மொபைல் பயன்பாடு

இந்த முறையைப் பின்பற்றி சில நிமிடத்தில் பொருளின் தரம், தயாரிப்பு, உண்மையில் அந்த பொருள் முறையானதா அல்லது போலியானதா என்பதை ஒரு மொபைல் பயன்பாட்டின் மூலம் இனி எளிதாக அடையாளம் காண முடியும். இந்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் BIS என்ற மொபைல் பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய பணியக தரநிலைகளால் தொடங்கப்பட்ட மொபைல் சோதனை பயன்பாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை செய்து பார்க்கலாம்

எந்தவொரு தயாரிப்பு பொருளாக இருந்தாலும் இந்த பயன்பாட்டில் சோதனை செய்து பார்க்கலாம். நகைகளின் தோற்றத்தையும் நகலையும் எளிதாக இதில் சரிபார்க்க முடியும். தயாரிப்பு பொருளின் மீது உள்ள ISI மார்க் உரிம எண்ணை மொபைல் பயன்பாட்டில் வைப்பதன் மூலம் பொருளை நீங்கள் சோதனை செய்யலாம். அதன் உரிம எண் உண்மையானதா இல்லையா என்பதைப் பயன்பாடு கண்டறியும். இது தயாரிப்பு முறையானதா அல்லது போலியானதா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.

Samsung கேலக்ஸி M01 கோர் வெறும் ரூ.5,499 விலையில் அறிமுகம்! விற்பனை எப்போது தெரியுமா?Samsung கேலக்ஸி M01 கோர் வெறும் ரூ.5,499 விலையில் அறிமுகம்! விற்பனை எப்போது தெரியுமா?

உரிம எண்

தரிப்பு பொருளின் உரிம எண் சரியாக இருந்தால், தயாரிப்பு குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு மொபைல் பயன்பாட்டில் காண்பிக்கப்படும். பிராண்ட் விபரத்திலிருந்து தயாரிப்பு வரை அனைத்து விபரங்களும் இதன் கீழ் காண்பிக்கப்படும். இதேபோல், நகைகளை வாங்கும் போது, ​​மொபைல் பயன்பாட்டில் உள்ள ஹால்மார்க் எண்ணைச் சரிபார்த்துச் சரியான நகைகளை வாங்கிக்கொள்ளலாம். இனி போலி பொருளை அடையாளம் காண்பது மிகவும் சுலபம்.

Best Mobiles in India

English summary
Bureau Of Indian Standards Launched New Bis Mobile App To Identify Fake Products : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X