பிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.!

இந்த செயலி கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் முன்னர் இந்த செயலியில் நீங்கள் முதலில் சைன் - இன் செய்ய வேண்டும்.

|

பிரேய்ன் பாஸி என்ற செயலியை கடந்த பிப்ரவரி மாதம் டைம்ஸ் இண்டர்நெட் லிமிடெட் என்ற நிறுவனம் வெளியிட்டது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். தொலைக்காட்சிகளில் கேள்வி பதில் ஷோ மாதிரியே இந்த கேம் செயல்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், அது கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்து அதன் மூலம் வருமானமும் பார்க்கலாம் குறைந்த காலத்தில் மிக அதிகமானோர் பயன்படுத்தும் செயலிகளின் பட்டியலில் இந்த செயலியும் இணைந்துவிட்டது. எனவே இந்த செயலி உண்மையில் வருமானத்தை கொடுக்கின்றதா? என்பது குறித்தும் இந்த செயலி குறித்தும் தற்போது பார்ப்போம்.

பிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.!

செயலி எப்படி செயல்படுகிறது
இந்த செயலி கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் முன்னர் இந்த செயலியில் நீங்கள் முதலில் சைன் - இன் செய்ய வேண்டும். சைன் இன் செய்த பின்னர் ஒரு சிறிய வீடியோ உங்களுக்கு தோன்றி இந்த செயலியை பயன்படுத்தக்கூடிய விதிகள் குறித்து உங்களுக்கு விளக்கும். பணம் வருமானம் பெற ஏற்படுத்தப்பட்ட செயலிகளில் இந்த செயலியும் ஒன்று என்பதை இந்த விதிகளை படித்த பின்னர் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியை செய்த டெவலப்பர்கள் மிக எளிதாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைத்ததே இந்த செயலியின் வெற்றியாக கருதப்படுகிறது.

கேள்வி கேட்பதற்கு முன்பாக ஒரு சிறிய வீடியோ உங்கள் முன் தோன்றி பதிலளிக்கும் பயனாளிகளை ஊக்குவிக்கின்றது. இந்த வசதிக்கு சீட் கோட்ஸ் மற்றும் ஜியான் குரு என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடியோ கேள்விகளுக்கு பதிலளித்து விளையாடும்போது நமக்கு உறுதுணையாக இருக்கும்.

கேள்வி பதில்
ஒவ்வொரு நாளும் மதியம் ஒரு மணி முதல் ஒன்பது மணி வரை நேரலையில் தோன்றும் கேள்விகளுக்கு பயனாளிகள் அனைவரும் ஒரே நேரத்தில் விளையாட வேண்டும். ஒவ்வொரு கேள்வி பதில் செஷனும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தோன்றி பின்னர் அது முடிந்தவுடன் அதில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவர். பரிசுத்தொகை வெற்றி பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்

நீங்கள் இந்த செயலி மூலம் கேள்வி பதிலில் கலந்து கொண்டு வருமானம் பார்க்க விரும்பினால் உடனே பிளே ஸ்டோரில் சென்று இந்த செயலியை டவுன்லோடு செய்யவும். நீங்கள் ஐஒஎஸ் பயனாளிகளாக இருந்தால் கவலை வேண்டாம், இந்த செயலி ஆப்பிள் ஸ்டோரிலும் உள்ளது. அதில் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். கேள்வி பதில் நேரங்களை இந்த நிறுவனம் அவ்வபோது அதிகமாக்கி உங்களுக்கு அறிவித்து அதன்படி வரும் நாட்களில் செயல்படும்

பிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.!

எவ்வளவு வருமானம் வரும்?
இந்த செயலியில் நீங்கள் 11 பொது கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டீர்கள் என்றால் ஒரு லட்சம் வரை வருமானம் தரும் வகையில் உள்ளது. அதேபோல் வெற்றி பெறும் தொகை உடனடியாக உங்களுடைய பேடிஎம் அல்லது மொபிவிக் வாலட்டுகளில் உடனடியாக வரவு வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கேள்வியும் கேட்கப்பட்டவுடன் அந்த கேள்விக்கு எத்தனை பேர் சரியாக பதிலளித்து உள்ளீர்கள் என்ற விபரம் உடனுக்குடன் தெரிய வரும். அதுமட்டுமின்றி எத்தனை பேர் ஒரே நேரத்தில் இந்த கேள்வி பதில் செஷனில் கலந்து கொண்டுள்ளனர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் மறுபடியும் லாகின் செய்து கொள்ளும் வசதி உண்டு. இந்த செயலி இதுவரை பிளே ஸ்டோரில் மட்டும் ஐந்து மில்லியன் டவுன்லோடுகளை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தினமும் 10 சதவீதம் அதாவது ஐந்து லட்சம் புதிய பயனாளிகளையும் ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

கடுமையான போட்டி
கடந்த சில மாதங்களில் இந்த செயலிக்கு போட்டியாக இதே வடிவத்தில் லோகோ, ஐக்யு லைவ் மற்றும் மோப் ஷோ ஆகிய செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. பிரேய்ன் பாஸி பாணியிலேயே தான் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலி மதியம் 1.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் செயல்படும். ஆனால் அதே நேரத்தில் பிரேய்ன் பாஸி பரிசுத்தொகையுடன் ஒப்பிடும்போது இந்த லோகோவில் ரூ.12500 மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் மோப் ஷோ செயலியின் மூலம் ரூ.1500 முதல் ரூ.10000 வரை சம்பாத்திக்கலாம் என்பதும் இந்த செயலி 4,7 மற்றும் 10 ஆகிய நேரங்களில் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.!

இது ஒரு தந்திர வேலையா?
இந்த செயலியில் எந்தவித தந்திரங்களோ, மந்திரங்களோ இல்லை. பரிசுத்தொகையை சரியாக கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்று. ஆனால் அதே நேரத்தில் இந்த செயலியை அதிகம் பேர் பயன்படுத்தி வென்று, பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படுவதால் மிகப்பெரிய தொகையை ஒருவர் மட்டுமே வெல்வது சாத்தியம் இல்லை. ஆனால் வழக்கமாக விளையாடி கொண்டே இருந்தால் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மொத்தத்தில் நம்முடைய அறிவுத்திறனை வளர்த்து கொள்ளவும், வருமானம் பார்க்கவும் உதவுகிறது இந்த செயலி. எளிமையாக செயல்படுத்தும் வகையில் உள்ளது இந்த செயலியின் ஒரு சிறப்பு அம்சம் ஆகும். மிக அதிகமானோர் பயன்படுத்தும் வகையில் இருந்தாலும் இதில் எந்த பிரச்சனையும் தோன்றுவதில்லை. பத்து வினாடிகள் மட்டுமே பதிலளிக்க நேரம் கொடுக்கப்படுவதால் மெதுவான சர்வர்களுக்கு இந்த செயலி பொருந்தாது. இருப்பினும் இந்த செயலியை பயன்படுத்த அனைவருக்கு பரிந்துரை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

Best Mobiles in India

English summary
Brain Baazi app review Put your GK to test and earn money ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X