WhatsApp-ல் தோன்றும் புது Warning.. என்னது? எப்போது தோன்றும்? அதை பார்த்ததும் என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு இப்போது ஒரு புதிய வார்னிங்-ஐ (New Warning) சந்திக்க நேரிடுகிறது. ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ்-ல் (iOS) உள்ள வாட்ஸ்அப் பயனர்கள், அவர்களுக்கு அறிமுகமே இல்லாத (stranger) ஒருவர் உடனான உரையாடலை தொடங்குவதற்கு முன்பு ஒரு எச்சரிக்கையை பார்க்கிறார்கள்.
மேலும் அந்த மொபைல் நம்பர் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், உங்களுக்கும் அந்த நபருக்கும் இடையே ஏதேனும் பொதுவான க்ரூப்கள் (groups) உள்ளனவா என்பதையும் இது காட்டுகிறது. வாட்ஸ்அப் ஆனது ஏற்கனவே டிவைஸ் லிங்கிங் (device-linking) தொடர்பான மோசடிகளுக்கு எதிராக உள்ளமைக்கப்பட்ட எச்சரிக்கை அமைப்பை கொண்டுள்ளது. இந்த புதிய வார்னிங் ஆனது அதை மேலும் வலுப்படுத்துகிறது.

ஏனென்றால் வாட்ஸ்அப் இந்த செயல்முறையின் ஆரம்ப நிலையிலேயே ஒரு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை சேர்க்கிறது. இது பயனர்கள் அவர்களுக்கு தெரியாத ஒரு நபருடன் உரையாடலை தொடங்குவதற்கு முன்பே செயல்படக்கூடிய ஒரு புதிய எச்சரிக்கையாக இருக்கும். இதற்கு முன் ஒருபோதும் மெசேஜ் அனுப்பாத ஒரு மொபைல் நம்பரில் இருந்து உரையாடலை தொடங்க முயற்சிக்கும்போது இந்த எச்சரிக்கை தோன்றுகிறது.
டிவைஸ் லிங்கிங் தொடர்பான எச்சரிக்கையை போலன்றி, இதற்கும் அக்கவுண்ட்டை வேறொரு டிவைஸ் உடன் இணைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உரையாடலை திறப்பதற்கு முன், நீங்கள் யாருடன் பேச போகிறீர்கள் என்பதை இது வெறுமனே சரிபார்க்கிறது. ஆகஸ்ட் 2025 இல், இது போன்ற மோசடிகளுக்கு எதிரான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக மெட்டா (Meta) கூறியிருந்தது; அந்த அம்சம் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த பாதுகாப்பு எச்சரிக்கை பயனர்களுக்கு எவ்வாறு உண்மையில் உதவுகிறது? இந்த அம்சத்தின் மூலம், பயனர் உரையாடலை திறக்கும் வரை வாட்ஸ்அப் காத்திருப்பதில்லை; மாறாக, ஏதேனும் நடப்பதற்கு முன்பே அது முன்கூட்டியே செயல்படுகிறது. வேறொரு நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பார்க்கும்போது, அதுவே உங்களை சற்று யோசிக்க வைக்க போதுமானதாக இருக்கும். சிந்திப்பதற்கு முன்பே அவசரமாக செயல்படும் நபர்களையே மோசடி செய்பவர்கள் குறிவைக்கிறார்கள். எனவே, இத்தகைய ஒரு சிறிய இடைவெளி அல்லது தயக்கம் அவர்களுக்கு எதிராக அமைகிறது.
இந்த எச்சரிக்கையை நீங்கள் கண்டால் என்ன செய்ய வேண்டும்? வாட்ஸ்அப் இந்த எச்சரிக்கையை காட்டினால், உடனடியாக உரையாடலை தொடங்குவதற்கு பதிலாக, அதில் உள்ள விவரங்களை சற்று நிதானமாக படித்து பார்க்க வேண்டும். வேறொரு நாட்டின் குறியீடு (country code) இருப்பதே, ஒரு கணம் நின்று சரிபார்ப்பதற்கான வலுவான காரணமாகும்.
அந்த நபர் உங்களுக்கு தெரிந்தவர் என்றால், அவர்களின் பழைய மொபில் நம்பருக்கு அழைப்பது போன்ற வேறு வழிகளில் அவர்களை தொடர்புகொள்வதே பாதுகாப்பானதாகும். மேலும், உரையாடலை தொடரும் முன், உங்களுக்கு பொதுவான நண்பர் ஒருவரிடமும் இது குறித்து கேட்கலாம். ஏதேனும் சந்தேகத்திற்குரியதாக தோன்றினால், அந்த உரையாடலைத் தவிர்த்துவிடுங்கள். இதை செய்வதால் எந்த செலவும், பாதிப்பும் இல்லை; ஆனால், தொடர்ந்து உரையாடுவது அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும் இந்த எச்சரிக்கை அனைத்து மோசடிகளையும் கண்டறிந்துவிடாது. இது ஒரு முழுமையான அல்லது பிழையற்ற அமைப்பு அல்ல. ஏதேனும் ஒரு காரணத்திற்காக மோசடி செய்பவரின் நம்பர் ஏற்கனவே உங்கள் தொடர்புகளில் (contacts) சேமிக்கப்பட்டிருந்தால், இந்த எச்சரிக்கை தோன்றாமலே போகலாம்.
மேலும், அறிமுகமில்லாத எல்லா நம்பர்களுமே மோசடிக்குரியவை அல்ல; உங்களுக்கு தெரிந்த ஒருவர் கூட சாதாரண காரணங்களுக்காக தனது மொபைல் நம்பரை மாற்றியிருக்கலாம். இது பாதுகாப்பிற்கான ஒரு கூடுதல் அடுக்கு மட்டுமே ஆகும்; இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்காது. அதாவது இப்போதும் கூட எல்லாமே உங்கள் சொந்த பொறுப்பிலேயே தான் உள்ளன.


Click it and Unblock the Notifications