இன்ஸ்டாகிராம் அலுத்துவிட்டதா? இவற்றை உபயோகித்து பாருங்கள்.!
இந்த செயலியில் புகைப்படக்கலைஞர்கள் தங்களின் முழு தொகுப்பையும் பயனர்களுக்கு ஒன்றாக கிடைக்கும் வகையில் தனி போல்டராக உருவாக்கமுடியும்.
கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பிரபலமடைந்து வந்தாலும், புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரும் தளம் இதுமட்டுமல்ல. ஆயினும் இந்த செயலியின் இடைமுகம் மற்றும் எளிமை பல மில்லியன் பயனர்களை கவர்ந்துள்ளது மற்றும் மேலும் பல புதிய பயனர்களை ஒவ்வொரு நாளும் சேர்த்துக்கொண்டே வந்தாலும், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்கனவே உள்ள பயனர்களை இழக்கவும் இல்லை.

ஆனாலும், முன்னரே கூறியது போல இன்ஸ்டாகிராம் மட்டுமே இதற்கென உள்ள தளம் இல்லை. இதை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட செயலிகள் பல உள்ளன. பல பில்டர்களை எதிர்பார்க்கும் பயனர்கள் முதல் நிறைய பார்வையாளர்களை எதிர்பார்ப்பவர்கள் வரை, அனைவர் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்யும் செயலிகள் உள்ளன.
இன்ஸ்டாகிராமுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய 5 சிறந்த செயலிகளை இங்கே காணலாம்.


டேப்ளாஸ் (Dayflash)
டேப்ளாஸ் செயலியில் மற்றவர்கள் பகிர்ந்த படங்களை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிய முடியும். இதில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், முழுநீள புகைப்படத்தை சேர்க்கும் போது இன்ஸ்டாகிராமை போல இல்லாமல் தனித்துவமாக உள்ளது. இதில் நீங்கள் உருவாக்கும் உங்கள் கணக்கை இன்ஸ்டாகிராமுடன் இணைக்கமுடியும் என்பதால் நிறைய பிரபலம் கிடைக்கலாம். இந்த செயலி ஐ ஓ.எஸ்-ல் மட்டுமே கிடைக்கிறது.

ஸ்மக்மக்(SmugMug)
இந்த செயலியில் புகைப்படக்கலைஞர்கள் தங்களின் முழு தொகுப்பையும் பயனர்களுக்கு ஒன்றாக கிடைக்கும் வகையில் தனி போல்டராக உருவாக்கமுடியும். அந்த போல்டரை முழுவதும் பதிவிறக்கம் செய்வதன் மூலம், அவை ஆப்லைனில் கிடைக்கும் சிறப்பு வசதியும் உள்ளது.செயலியில் உள்நுழைந்த பயனர்கள் எவ்வித தடையும் இல்லாமல், கேலரியை பார்க்கமுடியும். மேலும் டிவிட்டர், பேஸ்புக், ஈமெயில் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக இணைப்பை அனுப்பி புகைப்பட தொகுப்பை மற்றவர்களுடன் பகிர முடியும்.
ஆனால், இச்செயலியின் இலவச பதிப்பை 14 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். அதற்கு பிறகு கீழே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
°அடிப்படை
°பவர்
°தொகுப்பு
°பிஸ்னஸ்

ஐஎம் (EyeEm)
பயனர்களுக்கு டிஸ்கவரி பக்கத்தை வழங்கி அதன் மூலம் புகைப்படங்கள், நேர்காணல், பயிற்சிகள் மற்றும் பலவற்றை பயன்படுத்த வைத்து பயனர்களை கவர்கிறது ஐஎம். நம் கற்பானசக்தியை மேலும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு கருவிகளை வழங்குகிறது. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால், புகைப்படங்களை ஸ்கேன் செய்து அது தரும் மதிப்பெண்கள் மூலம் சிறந்த புகைப்படங்களை கண்டறிய வழிவகை செய்கிறது. இந்த வசதி ஐஎம் செலக்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை மொபைலிலேயே பாதுகாப்பாக செய்யமுடியும்,சர்வருடன் இணைப்பு தேவைப்படாது.
உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் பில்டர்களை அப்ளை செய்யலாம் அல்லது சில அடிப்படை எடிட்டிங்களை செய்யலாம். இந்த செயலி ஆண்ராய்டு மற்றும் ஐஓ.எஸ்-ல் கிடைக்கிறது.

500px
புகைப்படகலைஞர்களுக்கான சிறந்த தளமான இதில் புகைப்படகலைஞர்களின் 11 மில்லியன் படைப்புகளை பயனர்கள் அணுக முடியும். மேலும் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களுக்கு அதிக அளவிலான பின்னூட்டங்கள் கிடைக்கும் அதே வேளையில், ஆக்கப்பூர்வமான கிண்டல்களும் செய்வர்.
உங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேர்வுகளுக்கு ஏற்றவகையில் புகைப்படங்கள் காண்பிக்கப்படும். ஸ்மார்ட்போன் புகைப்படகலையை ஆர்வமாக செய்யும் புகைப்படகலைஞர்களின் சமூகமான இதில், பயனர்கள் தங்களின் திறமைகள் மற்றும் கற்பனைத்திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.
இந்த செயலி ஆண்ராய்டு மற்றும் ஐஓ.எஸ் இரண்டிலும் கிடைக்கிறது.

oggl:
ஹிப்ஸ்டாமேடிக் எனும் பழம்பெரும் கேமரா செயலியை உருவாக்கி அதே நபர்கள் தான் இதையும் உருவாக்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் கவரப்பட்ட பல்வேறு அம்சங்கள் இதிலும் உள்ளன. மேலும் அதைவிட சிறந்த அம்சங்கள் தான் ஹிப்ஸ்டாமேடிக்-ஐ மறுபடி உருவாக்க தூண்டுதலாக இருந்தது.
இச்செயலியில் நேரிடையாக புகைப்படங்களை எடுக்க முடியும் அல்லது கேலரியில் இருந்தும் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். இதில் உள்ள அனைத்து லென்ஸ் மற்றும் பில்டர்களை பயன்படுத்தி எடிட் செய்தபின்பு ப்ரிவியூ செய்யமுடியும்.
இதில் நீங்கள் உருவாக்கும் புகைப்படங்களை, oggl செயலியில் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்,ப்ளக்கர், டம்ப்ளர் அல்லது போர்ஸ்கொயர் போன்ற சமூகவலைதளங்களில் கூட பகிர முடியும்.


Click it and Unblock the Notifications