இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை, அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் டிக்கெட்களை இப்படி புக் செய்யலாம்.!

இந்திய ரெயில்வே துறை, புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் செயலி வழிப் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்குத் தேவையான அன்ரிசர்வுடு டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ள முடியும்.

|

இந்திய ரெயில்வே துறை, புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மொபைல் செயலி வழிப் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்குத் தேவையான அன்ரிசர்வுடு டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ள முடியும்.

யு.டி.எஸ் ஆன் மொபைல்

யு.டி.எஸ் ஆன் மொபைல்

யு.டி.எஸ் ஆன் மொபைல்(UTS on Mobile) என்று இந்தச் செயலிக்கு ரயில்வே துறை பெயரிட்டுள்ளது. இந்தச் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

ஷோ டிக்கெட்

ஷோ டிக்கெட்

யு.டி.எஸ் செயலி மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அசல் டிக்கெட்டை டி.டி.ஆர் இடம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை, அதற்குப் பதிலாக யு.டி.எஸ் செயலியில் உள்ள "ஷோ டிக்கெட்(Show Ticket)" ஆப்ஷன் மூலம் டிக்கெட்டை காண்பிக்கலாம்.

 பிளட்பார்ம் டிக்கெட் & சீசன் டிக்கெட்

பிளட்பார்ம் டிக்கெட் & சீசன் டிக்கெட்

கூடுதல் சிறப்பாக பயனர்கள், இச்செயலி மூலம் சீசன் டிக்கெட்களை வாங்கிக்கொள்ளம், அல்லது இருக்கும் டிக்கெட் வேலிடிட்டியை புதிப்பித்து கொள்ளலாம். இத்துடன் இதில் நீங்கள் பிளட்பார்ம் டிக்கெட் பெறுவதற்கான வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.டி.எஸ் செயலி மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?

யு.டி.எஸ் செயலி மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?

- முதலில் உங்களுக்கான யு.டி.எஸ் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் இல் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
- ஐபோன் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு இந்த செயலி கிடைக்கிறது.
- பதிவிறக்கம் செய்த பிறகு உங்களுக்கான தனி பயன்பட்டு அக்கௌன்ட்டை, உங்களின் மொபைல் நம்பர் மூலம் பதிவு செய்யுங்கள்.
- பிரத்தியேக ஓ.டி.பி நம்பர் உங்கள் மொபைல் போன்ற்கு அனுப்பப்படும்.
- அதை யு.டி.எஸ் செயலியில் என்டர் செய்து, உங்களுக்கான பயன்பாடு அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.
- இனி நீங்கள் பயணிக்கும் ரயில் பெயர், ரயில் நிலையம், டிக்கெட் வகை, வகுப்பு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை என அனைத்து விபரங்களையும் நிரப்பி உங்களுக்கான டிக்கெட்டை உங்கள் மொபைல் இல் பெற்றுக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Book train tickets through UTS on Mobile app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X