இந்தியாவில் உங்கள் கருவியில் இருக்க வேண்டிய ஆப்ஸ், என்னென்ன.?
பீம், ஐஆர்சிடிசி கனெக்ட், மைகவ் மற்றும் பல என உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய ஆப்ஸ் என்னென்ன.?
டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் ஆனது அரசு சேவைகள் மின்னணு முறையில் குடிமக்களுக்கு கிடைக்க செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வண்ணம் கடந்த ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது பெரும்பாலான அரசு துறைகள் டிஜிட்டல் கனவை உண்மையாக்கும் முயற்சிகளில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பார்வை ஒரு டிஜிட்டல் அதிகாரம் மிக்க சமூகம் உருவாக்க வேண்டும் என்பதாக இருப்பதால் அரசாங்கம் பல ஸ்மார்ட்போன் ஆப்ஸ்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்த பயன்பாடுகள் விவசாயம், கல்வி, சுற்றுலா, மின்-ஆளுகையில் இருந்து சுகாதாரம் வரை சேவைகளை நீடிக்கிறது. அப்படியாக இன்று பதிவிறக்கமிஸ் எய்ய அரசு பயன்பாடுகள் நிறைய உள்ளன. ஆக, இப்போதைய இந்தியாவில் உங்கள் கருவியில் இருக்க வேண்டிய ஆப்ஸ் என்னென்ன மற்றும் அந்த ஆப்ஸ்களின் டவுண்லோட் லின்க்குகள் உள்ளடக்கிய தொகுப்பே இது.

பீம்
இந்த பயன்பாடு அடிப்படையில் ஒரு ஆதார் அடிப்படையிலான மொபைல் கட்டண பயன்பாடு மற்றும் யு.பி.ஐ மற்றும் யுஎஸ்எஸ்டி பதிப்பாகும். பீம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். மேலும் இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஐஆர்சிடிசி கனெக்ட்
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அப்டேட்டட் இந்திய ரயில்வே பயன்பாட்டு இணையத்தில் பிரபலமான இந்திய பயன்பாடுகளில் ஒன்றாகும். ஐஆர்சிடிசி கனெக்ட் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். மேலும் இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

மைகவ் (மை கவர்ன்மென்ட் இந்தியா )
இந்த ஆப் ஆனது இந்திய மக்கள் நலனுக்காக அரசு நடத்தும் நடவடிக்கைகளில் எந்த பிரச்சினை தொடர்பாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உதவும். இந்த பயன்பாடு மூலம் எந்த குடிமகனும் தங்கள் ஆலோசனைகளை அல்லது கருத்துக்களை அரசாங்கத்திற்கு அரசாங்கம் தொடர்புடைய சேவை நிறுவனங்கள் அனுப்ப முடியும். அனுப்பிய பரிந்துரைகள் மற்றும் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும் இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

எம்பாஸ்போர்ட்சேவா (கன்சூலர், பாஸ்போர்ட் மற்றும் விசா அமைப்புகள்)
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேடும் மக்கள் இந்த பயன்பாட்டை பதிவிறக்கி கொள்ளலாம். இந்த மத்திய அரசு பயன்பாட்டை கொண்டு நீங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைள் தொடர்பாக அனைத்து தகவல்களும் பெறலாம். மேலும் இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

எம்இஏஇந்தியா (இந்திய வெளியுறவு அமைச்சகம்)
இந்த ஆப் முற்றிலும் வளர்ச்சி மற்றும் ஸ்மார்ட் ஆன காட்சியமைப்புகள் மற்றும் கிராபிக்ஸ் உள்ளுணர்வு கொண்ட பயனர்களுக்காக உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த பயன்பாட்டை வெளிவிவகார அமைச்சு மேற்கொள்கின்றது என்கிற போதிலும் இது மக்களை மையப்படுத்தி, சேவைகள் தொடர்பான தகவல்களை ஒற்றைச் சாளரம் மூலம் செயல்படுத்துகிறது. மேலும் இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க
உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி.?


Click it and Unblock the Notifications