Home
Apps

இனி நோ டென்ஷன்.. வெறும் 2 STEP-ல் CIBIL SCORE செக்கப்.. BHIM ஆப்பில் சேர்க்கப்பட்ட புதிய அம்சம்.. எப்படி?

பீம் ஆப்பில் (BHIM) ஆப்பில் அட்டகாசமான புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் சிபில் ஸ்கோர் (CIBIL score) மற்றும் கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்டை (Credit Information Report - CIR) ஆப்பிற்கு உள்ளேயே நேரடியாக சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை பீம் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிரான்ஸ்யூனியன் சிபில் மற்றும் என்பிசிஐ பீம் சர்வீசஸ் லிமிடெட் இடையேயான ஒத்துழைப்பின் மூலம் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. இது கிரெடிட் தொடர்பான விழிப்புணர்வை அன்றாட டிஜிட்டல் பேமண்ட்களுடன் ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது.

இனி நோ டென்ஷன்.. வெறும் 2 STEP-ல் CIBIL SCORE செக்கப்.. BHIM ஆப்பில்!

இந்த அம்சம் பீம் ஆப்பின் 4.0.19 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களில் கிடைக்கிறது. இது, பயனர்கள் தனிப்பட்ட மூன்றாம் தரப்பு தளங்களில் லாக்-இன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலேயே கிரெடிட் தரவுகளை அணுக உதவுகிறது. தனிப்பட்ட தனியுரிமை உரிமைகள் (PPR) தொடர்பான ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்க, பயனரின் வெளிப்படையான ஒப்புதலுக்கு பிறகே இந்த அணுகல் வழங்கப்படுகிறது.

பீம் ஆப்பில் உங்கள் சிபில் ஸ்கோரை சரிபார்ப்பது எப்படி?
படி 1: பீம் ஆப்பை திறந்து, ஹோம் ஸ்க்ரீனில் கீழே ஸ்வைப் செய்து 'ப்ரீ சிபில் ஸ்கோர்' (Free CIBIL Score) விருப்பத்தை கண்டறியவும். ஸ்கோர், ப்ரைவஸி டேர்ம்ஸ் மற்றும் யூசேஜ் லிமிட்ஸ் தொடர்பான விவரங்களை காண கிளிக் செய்யவும்.

படி 2: உங்கள் பான் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளபடியே, உங்கள் பான் அட்டை எண்ணுடன் உங்கள் முதல் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தொடரவும்.
படி 3: சரிபார்க்கப்பட்டதும், உங்கள் சிபில் ஸ்கோர் திரையில் காட்டப்படும்.

உங்கள் அறிக்கையில் பிழைகள் இருந்தால் என்ன செய்வது? பயனர்கள் தங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் முரண்பாடுகளை கண்டறிந்தால், அவர்கள் ஆன்லைன் செயல்முறை மூலம் ஒரு புகாரை தொடங்கலாம்:
படி 1: லாக்-இன் (ஏற்கனவே உள்ள பயனர்கள்) அல்லது ரிஜிஸ்டர் செய்வதன் (புதிய பயனர்கள்) மூலம் உங்கள் சமீபத்திய சிபில் ரிப்போர்ட்டை அணுகவும்.

படி 2: அறிக்கையில் உள்ள ஏதேனும் தவறுகள் அல்லது பொருந்தாத தகவல்களை கண்டறியவும்.
படி 3: சிக்கலை முன்னிலைப்படுத்தி ஒரு புகார் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
படி 4: குறிப்பிட்ட புகாரின் நிலையை கண்காணிக்க அவ்வப்போது லாக்-இன் செய்து சரிபார்க்கவும்

பீம் ஆப் இல்லாமல் வேறெந்த தளங்களின் வழியாக இலவச சிபில் ஸ்கோரை பார்க்கலாம்?
1. டிரான்ஸ்யூனியன் சிபில்-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலி (TransUnion CIBIL's official website and mobile app)
2. கூகுள் பே (Google Pay)

3. எஸ்பிஐ யோனோ (SBI Yono)
4. கிரெட் (CRED)
5. அமேசான் பே (Amazon Pay)
6. பேடிஎம் (Paytm)
7. ஒன்ஸ்கோர் (OneScore)
8. பைசாபஜார் (Paisabazaar)
9. ஐசிஐசிஐ வங்கி நெட் பேங்கிங் சேவைகள் (ICICI Bank net banking services)

OPINION: கிரெடிட் ஸ்கோர் கண்காணிப்பு அம்சம் சேர்க்கப்பட்டிருப்பது, பேமண்ட்களுக்கு அப்பாற்பட்டு பீம் ஆப்பின் திறன்களை விரிவுபடுத்துகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPI) உருவாக்கப்பட்ட இந்த ஆப் ஆனது - நிதி பரிமாற்றங்கள், கட்டண செலுத்துதல்கள் மற்றும் வணிகர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக (UPI) பரிவர்த்தனைகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஒருங்கிணைப்பின் மூலம், பயனர்கள் இப்போது செயல்பாட்டில் உள்ள லோன் அக்கவுண்ட்கள், ரீபேமண்ட் ஹிஸ்டரி மற்றும் நிலுவையில் உள்ள தொகைகள் போன்ற முக்கிய கடன் விவரங்களை ஒரே இன்டர்பேஸிற்குள் பார்க்க முடியும். இது பல ஆப்களை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, நிதி நிர்வாகத்தை இன்னும் எளிதாக்குகிறது.

Best Mobiles in India

English summary
BHIM app Users Now Check CIBIL Score Credit Information Report Directly within the platform Here is How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X