பேஸ்புக்கில் வரும் கிறிஸ்துமஸ் மோசடி, ஜாக்கிரதை!

|

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் பேஸ்புக்கை பயன்படுத்தி, பல்வேறு மோசடிகளும் கட்டுக்கதைகளும் வலம் வருகின்றன. இந்த வரிசையில் சுயவிவர பார்வையாளர்கள் அப்ளிகேஷன்கள், பிரபலமானவர்களின் இறப்பு கட்டுக்கதைகள் மற்றும் இலவச ஐபோன் / சாம்சங் சலுகைகள் உள்ளிட்டவை வருகின்றன.

பேஸ்புக்கில் வரும் கிறிஸ்துமஸ் மோசடி, ஜாக்கிரதை!

இதன் பின்னணியில் ஏதாவது ஒரு அச்சுறுத்தல் காணப்படும் என்பதால், பேஸ்புக்கில் வரும் இதுபோன்ற மோசடிகளுக்கு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக்கில் தற்போது ஒரு புதிய மோசடி வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான தருணம் என்பதை முன்நிறுத்தி, பேஸ்புக்கில் சிலர் நம்பிக்கைக்கு உரியவர்களாக தங்களைக் காட்டி கொண்டு இழிவான மோசடியில் ஈடுபடுவதாக, Express.co.uk பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே பேஸ்புக் மூலம் பரிசு பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும் எந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

இந்தச் செய்தியில், பண்டிகை காலத்தில் மக்களின் பெருந்தன்மையைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களின் மூலம் "சிக்ரெட் சிஸ்டர் கிஃப்ட் எக்ஸ்சேஞ்" என்று அழைக்கப்படும் ஒரு கிறிஸ்துமஸ் ஏமாற்று கும்பல் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் திட்டத்தில் இணையும் பங்காளர்களிடம் இருந்து 10 டாலர் மதிப்புள்ள பரிசு பெற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கு பதிலாக பல பரிசுகள் வழங்கப்படும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நம்பர்.1 ஃபேன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இதுமட்டுமின்றி, மற்றொரு வித்தியாசமான பிரமிடு திட்டத்தின்படி, நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பணத்தின் மூலம் ஒரு தெரியாத நபருக்கான பரிசுப் பொருள் வாங்கப்பட்டு, அதற்கு பதிலாக நுகர்வோருக்கு 36 பரிசுகள் திரும்ப கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் பரிசு பரிமாற்றத்தில் கலந்து கொள்ளும் பயனர்கள், வீட்டு முகவரி உள்ளிட்ட தங்களின் தனிப்பட்ட தகவல்களை அளித்து பிறகே துவங்க முடியும்.

அமெரிக்காவின் த பெட்டர் பிசினஸ் பியூரோ (BBB)என்ற இலாப நோக்கமற்ற வளரும் சந்தையைச் சேர்ந்த டிரஸ்ட், இதை ஆராய்ந்து பார்த்து, சமூக வலைதளங்களின் மூலம் இந்தப் பரிமாற்றங்கள் நடைபெறுவதை முதலாவதாக எச்சரிக்கை விடுத்தது.

பிபிபி அளித்த எச்சரிக்கை செய்தியில், இந்த மோசடி கடிதங்களைப் பயன்படுத்தி செய்யும் பழைய முறையைத் தவிர்த்து, வேகமாக பரவக் கூடிய பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளது. மேலும், "இந்த மோசடியில் இருந்து தப்புவதற்கு, இது போன்றவற்றை முழுமையாக புறக்கணிப்பது தான் சிறந்த வழி. மேலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் அளிக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Facebook is most popular social media platform and to take advantage of its popularity there are several scams and hoaxes always circulating around.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X