சிறந்த செயல்பாட்டை தரும் 10 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.!

|

கீழ்க்காணும் சில விட்கேட்ஸ், கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கக் கூடியவை.

சிறந்த செயல்பாட்டை தரும் 10 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.!

உங்கள் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனை அழகுப்படுத்துபவை தான் விட்கேட்ஸ். அவற்றின் பயன்பாட்டை வைத்து பார்க்கும் போது, அதை வீட்டு அலங்கார பொருட்களாக கூட நினைக்கலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும், ஒரு தனித்தன்மையான விட்கேட் இருக்கும். அவை ஏறக்குறைய உடனே தொடர்பு கொள்ளக் கூடியவையாக இருக்கும். இந்த விட்கேட்டின் விரிவாக்கம், அப்ளிகேஷனுக்கு ஷார்ட்கட்டாக கூட இருக்கின்றன. உங்கள் ஹோம் ஸ்கிரீனுக்கு இவை மேம்பட்ட உணர்வை மட்டும் அளிப்பது இல்லை. மாறாக, உங்கள் பணிகளை செய்து கொள்ளவும், புதிய காரியங்களை அறிந்தவராகவும், சேவைகளைப் பெறவும் இது உதவுகிறது. 2018 ஆம் ஆண்டின் சில சிறந்த விட்கேட்களை கீழே காணலாம்.

பிளாஷ்லைட்+

பிளாஷ்லைட்+

எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் உள் கட்டமைப்பு கொண்ட ஒரு பிளாஷ் லைட் இருக்க தான் செய்கின்றன. ஆனால் அதை இயக்க வேண்டுமானால், நோட்டிஃபிக்ஷேன் வரிசையை கீழ் நோக்கி இழக்க வேண்டியுள்ளது. ஆனால் பிளாஷ்லைட்+ விட்கேட் இயக்க, ஹோம் ஸ்கிரீனில் ஒரு பட்டன் அளிக்கப்படுகிறது. கேமரா பிளாஷை ஒளிர செய்ய வேண்டுமானால், அதை தட்டினால் போதுமானது. எவ்வளவு சுலபமாக உள்ளது பாருங்கள்.

கஷ்டம் சுவிட்சஸ்

கஷ்டம் சுவிட்சஸ்

இந்த அப்ளிகேஷன் நீங்களே ஒரு விட்கேட்டை உருவாக்க பயன்படும். அலாரம், ப்ளூடூத், அமைப்புகள் ஆகிய சேவைகளை பயன்படுத்தி இதை செய்ய முடியும். இதை கொண்டு, முன் அமைப்பு வடிவமைப்பு கூட செய்யலாம். இது ஒரு சுவிட்ச்கள் போல செயல்பட்டு, சுமூகமாக செயல்பாட்டை அளிக்கிறது. இதில் எண்ணற்ற வடிவமைப்புகள் தேர்ந்தெடுக்க முடியும். மேலும் அதை உருவாக்கி, சீர்ப்படுத்தவும் முடியும்.

ஆல் மெசேஜ்ஜஸ் விட்கேட்

ஆல் மெசேஜ்ஜஸ் விட்கேட்

இந்த விட்கேட் மூலம் பல்வேறு மெசேஜ்ஜிங் தளங்களை ஒரே இடத்தில் சந்திக்க வைக்க முடிகிறது. உங்கள் நண்பர்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தாவிட்டாலும், எல்லா மெசேஜ்களையும் நீங்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் சமூக இணையதள அறிவிப்புகள், உங்கள் அழைப்பு பட்டியல் கூட அறிய முடியும். இதை தேவைக்கேற்க மாற்றி அமைத்து கொள்ளக் கூடியது இதன் கூடுதல் வசதி ஆகும்.

கூகுள் கீப்

கூகுள் கீப்

இந்த கீப் என்பது ஒரு எளிய நினைவூட்டி, குறிப்பு எடுப்பு அப்ளிகேஷன் ஆகும். இந்த விட்கேட் ஒரு மெல்லிய கோடு உடன் பல்வேறு தேர்வுகளுடன் வருகிறது. இதில் ஒரு குறிப்பு எடுத்தல், நினைவூட்டியை அமைத்தல், பட்டியல் அமைத்தல், ஒரு படத்தை வரைதல், ஒரு படத்தை சேமித்தல் ஆகியவற்றை செய்ய முடியும். ஒரு தேர்வின் மீது நீங்கள் தட்டும் போது, குறிப்பிட்ட பணிக்கு நேராக உங்களை அது அழைத்து செல்கிறது.

ஐ.எப்.டி.டி.டி (IFTTT)

ஐ.எப்.டி.டி.டி (IFTTT)

ஏறக்குறை மற்ற எல்லா அப்ளிகேஷன்களையும் ஒருமித்து சேர்த்து ஒரு கனகம்பீரமான ஒரு அப்ளிகேஷனாக இது திகழ்கிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, நியூவார்க் டைம்ஸ் இருந்து செய்திகளை பெறலாம், மக்களுக்கு மெசேஜ் செய்யலாம், சமூக இணையதளத்தில் உலா வரலாம், கூகுள் அசிஸ்டெண்டின் அலெக்ஸா மூலம் எல்லாவற்றை கட்டுப்படுத்தலாம், உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ப, சில நிகழ்ச்சிகளையும் நீங்கள் நடத்த முடியும்.

கலெண்டர்

கலெண்டர்

பணிகளை ஆராய்தல், சிறந்த திட்டங்களை உருவாக்குதல், உங்கள் நாளை திட்டமிடல், பகிரப்பட்ட திட்டங்களை ஒருங்கிணைத்தல், நிற வேறுபாடுகளுடன் தலைப்புகளை பட்டியலிடுதல், நீங்களே இதற்கு பெயரிடுங்கள். மேற்கூறிய எல்லா காரியங்களையும் இந்த அப்ளிகேஷன் செய்கிறது. அலெக்ஸா, ஸ்ரீ மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவை உடன் தேவை செய்யும் தேர்வை இது அளிக்கிறது.

வெதர்

வெதர்

தட்பவெப்பநிலை குறித்த தகவல்களை அளிக்கிறது. இருப்பிடத்தை பொறுத்து அட்டகாசமாக ஹோம் ஸ்கிரீனை மாற்றி அமைக்கிறது. உள்ளூர் மற்றும் நாட்டின் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை வரைபடங்களை அளிக்கிறது.

பியூட்டிபுல் விட்கேட்ஸ்

பியூட்டிபுல் விட்கேட்ஸ்

2500 தீம்களுக்கு மேலாக வரிசைப்படுத்தப்பட்ட ஒரு பன்முக விட்கேட்டான இது, 4 மில்லியன் பதிவிறக்கங்களுக்கு மேலாக பெற்றுள்ளது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, உங்கள் ஹோம் ஸ்கிரீனை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.

பேட்டரி விட்கேட் ரீபார்ன்

பேட்டரி விட்கேட் ரீபார்ன்

ஒரு புதுமையான விட்கேட் வடிவமைப்பு பயன்படுத்தி, உங்கள் பேட்டரியின் நிலை குறித்த காரியங்களை அளிக்கிறது. இதில் பல்வேறு ஐகான் வடிவங்கள், அறிவிப்பு பகுதிகளுக்கான மாற்றி அமைக்கக் கூடிய எழுத்துக்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு முறைக்கான வசதியும் உள்ளது.

டாஷ்கிளாக் விட்கேட்

டாஷ்கிளாக் விட்கேட்

நமக்கு நன்றாக தெரிந்த பல்வேறு விட்கேட்களை, டாஸ்கிளாக் சீரிஸ் அளிக்கிறது. ஒரு அடிப்படையான மற்றும் இலவசமான அப்ளிகேஷனான இது, உங்கள் ஹோம் ஸ்கிரீனில் ஒரு டாஸ் கிளாக் ஆக தோன்றுகிறது. அலாரம் வைத்தல், தலைப்பு உடன் கூடிய நினைவூட்டிகள் ஆகியவற்றை அமைக்கலாம். பிற டாஸ் விட்கேட்களில், ஒரு டாஸ் கிளாக் தேதி விரிவாக்கம், பேட்டரி விரிவாக்கம், கீப் விரிவாக்கம் மற்றும் பலவற்றை காணலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Widgets For Android To Stylize Your Home Screen : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X