Home
Apps

சுற்றுலா பயணிகளுக்கு உதவும் சிறந்த செயலிகள்

சுற்றுலா பயணிகளுக்கு உதவும் சிறந்த செயலிகள்

By Siva

கோடை தொடங்கிவிட்டது. தேர்வுகளும் முடிந்துவிட்டது. அடுத்து என்ன, கோடை சுற்றுலாதான். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான சீசன் இது. ஆனால் எங்கு செல்வது, அழகிய கடற்கரை உள்ள நகரங்களுக்கா? வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், உயரமான மலைகள், இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் இவற்றில் எங்கே செல்வது, எப்படி செல்வது, எங்கு தங்குவது போன்ற பல கேள்விகள் நம் முன் எழும்.

சுற்றுலா பயணிகளுக்கு உதவும் சிறந்த செயலிகள்

ஆனால் இந்த அனைத்து கேள்விகளுக்கும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பதிலை கண்டுபிடித்து விடலாம். அதுதான் டெக்னாலஜி முன்னேற்றம்.

சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்கு என்றே பல இணையதளங்கள், செயலிகள் தற்போது கிடைப்பதால் நம்முடைய சுற்றுலா திட்டத்தை சரியான பட்ஜெட்டில் பக்காவாக அமைத்து கொள்ளலாம். இன்பச் சுற்றுலாவுக்கு உதவும் வகையில் உள்ள செயலிகளில் ஒருசில முக்கியமான செயலிகளை இங்கு பார்ப்போம்

காயக் (Kayak)

காயக் (Kayak)

தி பிரைஸ்லைன் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இணையதளம், ஒரு சியர்ச் எஞ்சின் ஆகவும் இயங்கி வருகிறது. இந்த இணையதளம் 20 முக்கிய மொழிகளில், 40 சர்வதேச தளங்களில் இயங்கி வருகிறது.

இந்த செயலி உள்ளூராக இருந்தாலும், உலக அளவில் இருந்தாலும் நம்முடைய சுற்றுலா திட்டத்தை பக்காவாக வகுத்து தரும்.

உங்களுடைய சுற்றுலா பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தகுந்த இடங்கள், அங்குள்ள முக்கிய பகுதிகள், அந்த பகுதியில் என்னென்ன வாங்கலாம், வாங்கக்கூடாது என்பது உள்பட பல குறிப்புகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பட்ஜெட்டுக்கு சரியான பயணத்தை திட்டமிட்டு தரும் இந்த செயலியை தாராளமாக பயன்படுத்தலாம்

மேக் மை டிர்ப் (Make My trip)

மேக் மை டிர்ப் (Make My trip)

இந்த செயலியை பலர் அறிந்து வைத்திருப்பார்கள். நம்முடைய சரியான சுற்றுலா பயணத்தை குறைந்த விலையில் டிராவல் டிக்கெட் புக் செய்து தருவது, அதில் உள்ள சலுகைகள், தள்ளுபடிகளை பெற்றுதருவது, என ஆன்லைனிலேயே அனைத்து பயண திட்டத்தையும் வகுத்து கொடுத்துவிடும்.

டெக்ஸ்டாப் மற்றும் மொபைலில் செயல்படும் வகையில் செயலி என செயல்பட்டு வரும் இந்த செயலி, பயன்படுத்துவதற்கு எளிமையாக ஒருசில கிளிக்குகளில் நம்முடைய அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிடும்

மேலும் ரெகுலராக இந்த செயலியை படுத்தி வந்தால் இதில் தள்ளுபடி, சலுகை, ரிவார்ட் புரோக்ரம், வேலட் ஆகிய பயன்களையும் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்

டிரிப் அட்வைஸர் (Trip Advisor)

டிரிப் அட்வைஸர் (Trip Advisor)

சுற்றுலா செல்பவர்களுக்காக உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேலும் ஒரு செயலி தான் இந்த டிரிப் அட்வைஸர்.

இதில் உள்ள தனிச்சிறப்பு என்னவெனில் எந்த இடத்திற்கு நாம் சுற்றுலா செல்ல போகின்றோமோ அந்த இடத்தின் அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய குறிப்புகள் ஆகியவை இந்த செயலியில் இருக்கும்.

அதுமட்டுமின்றி நாம் செல்லக் கூடிய இடத்தில் தரமான பார்கள், ரெஸ்டாரெண்ட்கள், ஓட்டல்கள், ஏர்லைன்ஸ், தங்குமிடம் உள்பட பல விவரங்களை நாம் முன்பே தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் Near Me என்ற ஆப்சனை பயன்படுத்தலாம். நீங்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே இதுவரை நீங்கள் கேள்விப்படாத இடங்களை உங்கள் கண்முன் நிறுத்தும்

ஏர்bnb (Airbnb)

ஏர்bnb (Airbnb)

இந்த செயலி நீங்கள் எந்த இடத்திற்கு சுற்றுலா செல்கின்றீர்களோ, அந்த இடத்தில் அல்லது அதன் அருகில் இருக்கும் தரமான அதே நேரத்தில் விலை குறைந்த ஓட்டல்கள் குறித்த முழு தகவல்கள் கிடைக்கும்.

உங்கள் சுற்றுப்பயணத்தை மறக்க முடியாத இன்ப அனுபவமாக்கவும், டிராவல் குறித்த அனைத்து விபரங்களையும் அறியவும், சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல கார் புக் செய்வது உள்பட பல வசதிகளையும் இந்த செயலி மூலம் செய்து கொள்ளலாம்

கோஃப்ரோ (GoFro)

கோஃப்ரோ (GoFro)

இந்த செயலியின் முக்கிய பணி சுற்றுலா செல்ல அமைத்து கொடுக்கும் நிறுவனங்களின் கட்டணத்தை நமக்கு தெரியப்படுத்தும். எந்த நிறுவனம் சரியான சேவையை கொடுத்து, சரியான கட்டணத்தை பெற்றுக்கொள்வதில் சிறந்த நிறுவனம் என்ற வேறுபாட்டை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து முன்னணி நிறுவனங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் இந்த செயலி உதவுவதால், இந்த செயலியை உபயோகித்தால் நாம் எந்த நிறுவனம் மூலம் சுற்றுலா சென்றால் குறைவான செலவில் திருப்தியான அனுபவத்தை பெறலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்

Best Mobiles in India

English summary
There are so many desktop and mobile apps available online which will be of handy during this trip plan. Few such best travel apps are picked here.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X