இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த ஆப்ஸ்!
ஸ்மார்ட்போன் ஆப்ஸ் நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைத்து விட்டது. இன்று எல்லாவற்றிகும் ஆப்ஸ் வந்து விட்டதோடு மக்களும் இவற்றைப் பயன்படுத்தாமல் இல்லை. அன்றாட வாழ்க்கை முறைகளை விரல் நுனியில் வழங்கும் மிகப்பெரிய வசதி இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஸ்மார்ட்போன் பயனர்களை போன்று இந்தியாவில் ஆப்ஸ் சந்தையும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாப் 10 தலைசிறந்த ஆப்ஸ்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

பயணம்
இந்தியா முழுக்கு எங்குச் செல்ல வேண்டுமானாலும் உங்களுக்கு விரல் நுனியில் பல்வேறு தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க நிறைய ஆப்ஸ்கள் இருக்கின்றன. அவற்றில் பிரபலமான சில ஆப்ஸ் தான் மேக் மை ட்ரிப் (Make My Trip), ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் கோஐபிஐபிஓ (Goibibo). இவற்றைப் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.

பொழுதுபோக்கு
காணா (Gaana) இணையத்தில் இசையை அனுபவிக்கச் சிறப்பான செயலியாக இது இருக்கின்றது. புக் மை ஷோ (BookMyShow) ஆப் மூலம் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் மற்றும் விண்க் (Wynk) ஆப் மூலம் அனைத்து இணையத்தில் பாடல்களை கேட்க முடியும்.

கட்டணம்
இணைய பண பரிமாற்ற சேவைகளில் பேடிஎம் (Paytm) பிரபலமான செயலியாக இருக்கின்றது. இதே போல் ஃப்ரீசார்ஜ் (Freecharge) மற்றும் மொபிவிக் (Mobiwik) ஆப்களும் இணைய பண பரிமாற்ற சேவைகளை வழங்குகின்றன.

கேமிங்
சுமார் 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கும் கேம் தான் டீன் பட்டி (Teen Patti). இந்த ஆப் தயாரித்தவர்கள் வெளியிட்ட இந்தியன் ரம்மி போன்ற கேம் கூட அதிகளவு டவுன்லோடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஏற்றச் செயலிகளாக பிளிப்கார்ட் (Flipkart), ஸ்னாப்டீல் (Snapdeal) மற்றும் இன்ஃபிபீம் (Infibeam) போன்ற செயலிகள் இருக்கின்றன. இவை அதிகளவு சலுகைகளை வழங்குவதோடு பல்வேறு பொருட்களையும் வழங்குகின்றன.

குறுந்தகவல்
இந்தியாவில் பிரபலமான குறுந்தகவல் செயலியாக ஹைக் இருக்கின்றது. ஆஃப்லைன் மெசேஜிங் மற்றும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளை இந்தச் செயலி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சேவை
உங்களது அனைத்து இதர சேவைகளையும் வழங்கும் ஆப் தான் ஜஸ்ட் டையல் (Just Dial), குவிக்கர் (Quikr) மற்றும் ஓஎல்எக்ஸ் (OLX). இந்த ஆப்ஸ்கள் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதாகும்.


Click it and Unblock the Notifications