பணம் சம்பாதிக்க எளிய வழிமுறைகள்- இந்த ஆப்ஸ் இருந்தாலே போதும்: எதைத் தொட்டாலும் காசு!
பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் வளர்ந்து கொண்டே வருகிறது. நமது நேரத்தையும், நேர்மையையும், உழைப்பையும் செலவிட்டால் போதும் உழைப்புக்கேற்ற ஊதியமும், நேர்மைக்கேற்ற வளர்ச்சியும் தானாக கிடைக்கும். அதன்படி ஆப்ஸ்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் விரைவான மற்றும் எளிதான வழிகள் குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு வழிமுறைகளுக்கு ஏற்ப ஒரு பயன்பாடு இருக்கிறது. ஆப்ஸ்-கள் மூலம் பணம் சம்பாதிக்க விரைவான மற்றும் எளிதான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் பணம் சம்பாதிக்கும் சில சிறந்த ஆப்ஸ் பட்டியலை விரிவாக காணலாம்.

இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்
இதற்கு இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமே தேவை. இந்த ஆப்ஸ் மூலம் நீங்கள் எளிதாக சம்பாதிக்க தொடங்கலாம். பரிந்துரை திட்டங்கள், கேஷ்பேக் வெகுமதிகள், ரிவ்யூஸ், டை-அப்ஸ் உள்ளிட்டவைகள் தேவை. எல்லாவற்றையும் போன்றே சில பணம் சம்பாதிக்கும் பயன்பாடிகளை பயன்படுத்துவதில் நன்மை தீமைகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு வழிமுறையே தவிர இதுவே வழிமுறையில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்

ரோஸ்தான்
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறந்த பணம் சம்பாதிக்கும் செயலியில் ரோஸ்தான் ஒன்றாகும். அதேபோல் ரோஸ் தான் என்பது ஒரு பொழுதுபோக்கு பயன்பாடாகும். கூகுள் ப்ளே தளத்தில் இதை பதிவிறக்கம் செய்யலாம். ஆப் ஸ்டோரில் இது கிடைக்காது. பயனர்கள் நண்பர்களை அழைப்பது, போட்டிகளில் பங்கேற்பது, செய்திகளை சரிபார்ப்பது போன்ற பல விருப்பங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இதுபோன்ற எளிய பயன்பாடுகளால் இந்தியாவில் சிறந்த பணம் சம்பாதிக்கும் செயலிகளில் ஒன்றாக ரோஸ்தான் மாறி இருக்கிறது.

டாஸ்க் பக்ஸ்
டாஸ்க் பக்ஸ் என்பது இந்தியாவில் அதிக மதிப்பிடப்பட்ட சிறந்த பணம் சம்பாதிக்கும் பயன்பாடாகும். பரிந்துரைக்கப்பட்ட இணையதளங்களை பார்வையிடுவது, ஆப்ஸ்களை பதிவிறக்குவது, விளம்பரங்கள் பார்ப்பது, வீடியோக்களை பார்ப்பது, டாஸ்க் பக்ஸுக்கு நண்பர்களை குறிப்பிடுவது போன்ற எளிய பணிகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ரோஸ்தானை போன்றே போட்டிகளில் பங்கேற்று பணம் சம்பாதிக்கலாம்.

டூ கேஷ்
இந்தியாவில் சிறந்த பணம் சம்பாதிக்கும் பயன்பாடுகளில் டூகேஷ் இருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பிற பயன்பாடுகளை போன்றே டூகேஷ் என்பது பொழுதுபோக்கு பயன்பாடாகும். இதில் பயனர்கள் கேம்களை விளையாடுவதன் மூலமும், வீடியோக்கள், விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாகவும், கருத்துக்கணிப்புகளை பங்கேற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம். ப்ரீபெய்ட் ரீசார்ஜ், பிட்காயின் கிரிப்டோகரன்ஸி மூலமாக ஊதியம் செலுத்தப்படுகிறது. அதேபோல் கூடுதலாக ஒருவர் கூகுள் கிஃப்ட் கார்ட்கள், ஐ டியூன்ஸ் மற்றும் அமேசான் கிஃப்ட் வவுச்சர்களை பெறலாம். இந்த பயன்பாடு கூகுள் ப்ளே-ல் கிடைக்கும்.

கூகுள் ஒபீனியன் ரிவார்ட்ஸ்
கூகுள் இந்தியாவில் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும். கூகுள் ஒபீனியன் ரிவார்ட்ஸ் என்பது இந்தியாவில் பணம் சம்பாதிக்கும் பயன்பாடுகளில் மிகவும் பிரபலமான பயன்பாடுகளாகும். வணிகங்கள் மற்றும் இருப்பிடங்களின் மதிப்புரைகளை வழங்க வேண்டும். ஒருவர் கருத்துக் கணிப்பு பதில்களையும் வழங்க வேண்டும். இது இந்தியாவில் சிறந்த பணம் சம்பாதிக்கும் ஆப்ஸ்களில் ஒன்றாகும்.

போன்பே
இந்தியாவில் பணம் சம்பாதிக்கும் பயன்பாடுகளை பற்றி நினைக்கும் போது போன் பே செயலியை தவிர்க்க முடியாது. யூபிஐ அடிப்படையிலான கட்டணமே ஆப்ஸ்களின் முக்கிய செயல்பாடாக இருந்தாலும், பணம் செலுத்தும் போது பண வெகுமதிகளை பெறலாம். போன்பே மூலம் ஒருவர் பண வெகுமதிகள், கூப்பன்கள், தள்ளுபடிகள் உள்ளிட்ட பலவற்றை பெறலாம். வரும் பரிந்துரை மூலம் சம்பாதிக்க பணம் நேரடியாக பயனரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

டேட்டாபடி
டேட்டாபடி என்பது இந்தியாவில் சிறந்த பணம் சம்பாதிக்கும் பயன்பாடுகள் என தேடும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும், இந்த ஆப்ஸ் உங்கள் பேடிஎம் வாலட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களில் படங்கள், ஜிஐஎஃப்-கள் மற்றும் பிற ஊடகங்களை பகிர்வதன் மூலம் டேட்டா படி செயலி மூலம் ஒருவர் நல்ல பணம் சம்பாதிக்கலாம். டேட்டாபடி ஆப் மூலம் பல இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களிடம் கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை பெறலாம்.


Click it and Unblock the Notifications