2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.!
புதிய ஐபோன் வாங்கி அதில் எந்த விதமான புது ஆப்களை டவுன்லோட் செய்யலாம் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? அல்லது உங்களின் பழைய ஐபோனிற்கு சிறந்த 2019 ஆப்களை இன்னும் தேடிக்கொண்டுள்ளீர்களா?
புதிய ஐபோன் வாங்கி அதில் எந்த விதமான புது ஆப்களை டவுன்லோட் செய்யலாம் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? அல்லது உங்களின் பழைய ஐபோனிற்கு சிறந்த 2019 ஆப்களை இன்னும் தேடிக்கொண்டுள்ளீர்களா?

கவலை வேண்டாம் உங்களின் ஐபோன் போன்களுக்கு தேவையான 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆப்களின் பட்டியலை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

சிறந்த ஈமெயில் ஆப்:
ஜிமெயில்:
ஆப்பிள் ஐபோனில் வழங்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் ஈமெயில் சேவையில் பல சிறப்பம்சங்களின் குறைபாடு உள்ளதினால் ஐபோன் பயனர்கள் ஜிமெயில் ஆப் சேவையை டவுன்லோட் செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். ஜிமெயில் சேவை உலகளவில் பயன்படுத்தப்படும் ஈமெயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுட்லுக்:
அவுட்லூக் ஆப் சேவையும் ஜிமெயில் செயலியில் உள்ள நோட்டிபிசேஷன் புஷ் போன்ற அணைத்து சேவைகளையும் வழங்குகிறது. இந்தச் செயலியில் உங்களின் மெயில்களை ஷெடியூல் செய்துகொள்ளலாம். இவ்விரண்டு செயலிகளும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

சிறந்த ஐபோன் பிரௌஸர்:
ஐபோன் இல் வழங்கப்படும் சஃபாரி பிரௌஸர்க்கு பதிலான மாற்று பிரௌஸர் செயலியை பயன்படுத்த விரும்பினால், கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிறோம் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் ஜிமெயில் அக்கௌன்டை லிங்க் செய்து பாஸ்வோர்டு, ப்ரொவ்சிங் ஹிஸ்டரி மற்றும் புக்-மார்குகளை உங்களின் அணைத்து டிவைஸ்களிலும் லிங்க் செய்துகொள்ளலாம்.

சிறந்த காலெண்டர்:
கூகுள் காலெண்டர் சேவை பயனர்களுக்குப் பல விதமான எளிய வசதிகளை வழங்குகின்றது. முக்கிய நிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்வுகளின் குறிப்புகளையும் மிகத் துல்லியமாக குறித்துக் கொண்டு, உங்களின் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் தொகுத்து வழங்குகிறது.

சிறந்த வானிலை ஆப்:
அக்குவெதர்(AccuWeather) வானிலை பற்றிய தகவல்களை மிகத் துல்லியமாக அறியவும், மழை வருவதற்கு முன்பாகவே எச்சரிக்கை விபரங்களை உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரே செயலி அக்குவெதர் ஆப் மட்டுமே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சிறந்த நேவிகேஷன் ஆப்:
ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்தும் ஆப்பிள் பிரியர்களிடம் கேட்டால், அவர்களே சொல்லிவிடுவார்கள் ஆப்பிள் மேப் சேவையை விடக் கூகுள் வழங்கும் கூகுள் மேப் சேவைதான் மிகத் துல்லியமாக நேவிகேஷன் சேவையை வழங்குகிறதென்று. இந்தக் கூகுள் மேப் சேவை இலவசமாக ஐபோன் மற்றும் ஐபாட்களுக்கும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.

சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்:
ஸ்னாப்ஸீட் ஆப், பயனரின் தேவைகளை அறிந்து போட்டோக்களை சிறந்த முறையில் எடிட்டிங் செய்ய அனுமதிக்கிறது. பல புது வகை பில்டர்கள் மற்றும் பல வித புதிய சேவைகளுடன் களமிறங்கி, போட்டோ பிரியர்களின் மனதில் இடம் பிடித்த இந்த ஆண்டிற்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் இதுதான். இந்தச் செயலி இலவசமாகக் கிடைக்கிறது, ப்ரோ வெர்ஷனில் இன்னும் கூடுதல் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது.

சிறந்த வீடியோ எடிட்டிங் ஆப்:
குயிக் வீடியோ எடிட்டிங் செயலி கோ ப்ரோவின் கம்பெனியன் ஆப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ எடிட்டிங் செயலியில் பல விதமான தீம்கள், எழுத்துக்கள் மற்றும் பாடல்களை சரியாக விடியோவுடன் சிங்க் செய்யும் புதிய சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்லோ மோஷன், ஸ்மார்ட் கட் மற்றும் ஸ்பீட் கொன்றோல் எனப் பல சேவைகளை இலவசமாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications