ஆண்ட்ராய்ட் போன்களுக்கான பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப்ஸ்கள்

By Siva
|

மொபைல் போன் பயனாளிகளுக்கு பெர்சனல் அசிஸ்டெண்ட் போல் உதவும் ஆப்பிள் ஐபோனின் சிறி, அமேசனின் எக்கோ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கோர்ட்டானா ஆகியவை குறித்து நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம்.

ஆண்ட்ராய்ட் போன்களுக்கான பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப்ஸ்கள்

இந்த பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப்ஸ்கள் நம்முடைய வேலையை வெகுவாக குறைத்துவிடுவதோடு நம் நேரத்தையும் மிச்சப்படுத்திவிடும். மெசேஜ் அனுப்புவதும், வானிலை அறிக்கை செக் செய்வது, இமெயில் செக் செய்வது, லிஸ்ட் தயார் செய்வது, டிக்கெட்டுக்கள் புக் செய்வது உள்பட பல வேலைகளை இந்த பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப்ஸ்கள் செய்துவிடும்.

ஆனால் அதே நேரத்தில் மேலும் சில பெர்சனல் அசிஸ்டெண்ட் போன்கள் இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதோ அந்த பட்டியல்

கூகுள் நெள: (Google Now)

கூகுள் நெள: (Google Now)

தற்போது வெளிவரும் பல மாடல்களில் ஆண்ட்ராய்ட் நெளகட் ஓஎஸ் இருப்பதால் பெரும்பாலான போன்களில் கூகுள் நிறுவனத்தின் பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப்ஸ் கூகுள் நெள செயல்படும் விதத்தில் உள்ளது.

இந்த கூகுள் நெள ஆப்ஸ், அதிநவீனமாக பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் உதவியாக உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து அனைவரும் பயன்பெறலாம்

 கூகுள் அலோ (Google Allo)

கூகுள் அலோ (Google Allo)

கூகுள் அலோ ஆப்ஸ் உங்கள் தேவைகளை வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் செய்து முடித்துவிடுவதோடு நின்றுவிடுவதில்லை. உங்களது மனநிலையையும் அது மாற்றுகிறது.

நீங்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தால் இந்த அலோ ஆப்ஸ் படுஜாலியான ஜோக்ஸ்கள் கூறி உங்கள் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது. தற்போதைய டென்ஷன் உலகில் உங்கள் டென்ஷன்களை மிக அதிகமாக குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஹெளண்ட் (Hound):

ஹெளண்ட் (Hound):

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கோர்ட்டானா போலவே இருக்கும் இந்த பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப் உங்களுடைய அனைத்து பணிகளையும் குரல் கமாண்டில் செய்து முடிப்பதோடு கூடுதலாக கால்குலேட்டர், ஓட்டல் புக்கிங் செய்யும்போது தேவைப்படும் ஒருங்கிணைந்த விரிவாக்கம் ஆகியவற்றையும் கவனித்து கொள்கிறது.

ராபின் (Robin):

ராபின் (Robin):

இந்த பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆப் உங்களை தேவைகளை பூர்த்த் செய்வது மட்டுமின்றி உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இந்த ஆப் உங்களது அடிப்படை தேவைகளான கால் அழைப்பு, எஸ்.எம்.எஸ் அனுப்புவது ஆகியவற்றை செய்து தருவது மட்டுமின்றி பார்க்கிங் செய்ய வேண்டிய இடங்கள், டிராபிக் அதிகமாக உள்ள இடங்களை குறித்த தகவல்களை தருகிறது. கேஸ் விலை உள்பட பல்வேறு முக்கிய விலைகளையும் இந்த ஆப் உங்களுக்கு தொகுத்து தரும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Personal assistance apps have been here for a while, thanks to Apple's Siri, Amazon's Echo and Microsoft's Cortana.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X