புதிய ஐஒஎஸ் 11க்கு பொருத்தமான சிறந்த AR செயலிகள்

AR செயலிகள் என்று கூறப்படும் செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய உலகத்தை திறந்து விட்டது போன்ற பிரமை ஏற்பட்டுள்ளது.

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேட் உபகரணங்களில் புதிய ஐஒஎஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நவீன டெக்னாலஜி அனுபவத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக AR செயலிகள் என்று கூறப்படும் செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய உலகத்தை திறந்து விட்டது போன்ற பிரமை ஏற்பட்டுள்ளது.

புதிய ஐஒஎஸ் 11க்கு பொருத்தமான சிறந்த AR செயலிகள்

இந்த AR செயலிகள் அடங்கிய ஐஒஎஸ் 11 எந்தெந்த மாடல் ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ளது தெரியுமா?

  • ஐபோன் 7
  • ஐபோன் 7 பிளஸ்
  • ஐபோன் 6s
  • ஐபோன் 6s பிளஸ்
  • ஐபோன் SE
  • 12.9- இன்ச் ஐபேட் புரோ (2017)
  • 12.9-இன்ச் ஐபேட் புரோ (2016)
  • 10.5-இன்ச் ஐபேட் புரோ
  • 9.7-இன்ச் ஐபேட் புரோ
  • ஐபேட் (2017)

மேற்கண்ட ஐஒஎஸ் மாடல் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய AR செயலிகள் குறித்து தற்போது பார்ப்போம்

வேர்ல்ட் பிரஷ் (World Brush)

வேர்ல்ட் பிரஷ் (World Brush)

உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் உங்கள் ஐபோன் அல்லது ஐபேடில் தேர்வு செய்து அதனை நீங்களே பல வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கலாம். நீங்கள் பெயிண்ட் அடித்த பகுதி ஜிபிஎஸ் உதவியால் சேமிக்கப்பட்டு மற்றவர்களின் கருத்து அறியப்படும். இதற்கு லைக், டிஸ்லைக் ஆகியவையும் கிடைக்கும். இந்த வேர்ல்ட் பிரஷ் ஐபோன் மற்றும் ஐபேட் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் டிசைன் செய்யப்பட்டுள்ளது

மேஜிக் பிளான் (Magic Plan)

மேஜிக் பிளான் (Magic Plan)

இந்த செயலி உங்கள் கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று பிளான் செய்ய உதவுகிறது. எந்தெந்த அறை எங்கிருக்க வேண்டும், அதன் பட்ஜெட் என்ன? எந்த இடத்தில் எவ்வளவு இடம் இருக்க வேண்டும் என்பதை நீங்கல் 3D வசதியில் பிளான் செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் மேஜிக் பிளானை நீங்கள் மற்ற பயனாளிகளுக்கு ஷேர் செய்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறியலாம்

IKEA Place

IKEA Place

வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் மற்றும் உபயோகமுள்ள பொருட்கள் எந்த இடத்தில் வைக்க வேண்டும், எவ்வளவு நீள அகலத்தில் அந்த பொருள் இருக்க வேண்டும், சோபா முதல் சேர்கள் வரை எந்த இடத்தில் வைத்தால் வீடு அழகாக இருக்கும் என்பது உள்பட அனைத்து விபரங்களும் உங்களுக்கு புரியும் வகையில் நீங்களே செட் செய்ய உதவும் செயலிதான் இந்த IKEA Place செயலி. இந்த செயலியில் நீங்கள் தேர்வு செய்த செட்டிங்கை சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு பகிர்ந்தும் கொள்ளலாம்

தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

Kings of Pool

Kings of Pool

இந்த செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் முன் 8 பந்துகளுடன் வீரர்கள் மோத தயாராக இருப்பார்கள். நீங்கள் அவர்களுடன் மோதி வெற்றி பெற்று அதிக புள்ளிகளை பெற்று வெற்றியாளராகலாம்

ஸ்டார் வார்ஸ் (Star Wars)

ஸ்டார் வார்ஸ் (Star Wars)

நீங்கள் ஒரு ஸ்டார் வார்ஸ் ரசிகராக இருந்தால் இந்த செயலியை நீங்கள் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேலும் இந்த செயலி உங்கள் அதிரடி செய்திகள், சமூக பிரச்சனைகள், மற்றும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் தரும்.

மேலும் திடீரென அறிவிக்கப்படும் பெரிய அறிவிப்புகள், வெளியாகவுள்ள திரைப்படங்களில் டிரைலர்கள் ஆகியவைகளும் இதில் கிடைக்கும். இந்த ஸ்டார் வார்ஸ் செயலியில் நீங்கள் லாகின் செய்து எண்ணற்ற பயன்களை அனுபவிக்கலாம்

AR டிராகன்

AR டிராகன்

டிராகனில் விளையாட விருப்பம் உள்ளவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம், நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு கிடைக்கும் பரிசுகளை வைத்து உங்கள் டிராகனின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
With iOS 11, Apple stepped into the world of Augmented reality and also packs a variety of new features across various platforms including iPhones and iPads.Check out the best AR apps to experience on your phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X