உங்கள் ஃபிட்னெஸ்-க்கு உதவும் சிறந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்கள்

By Siva
|

தற்போது எல்லாமே ஆப்ஸ் மயமாகிவிட்ட நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பிட்னெஸ்க்கு ஆப்ஸ் இல்லாமல் இருக்குமா? பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஃபிட்பிட் (Fitbit) ஆப்ஸ் இருக்கும்என்பது அனைவரும் அறிந்ததே

உங்கள் ஃபிட்னெஸ்-க்கு உதவும் சிறந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்கள்

இந்த ஃபிட்பிட் ஆப்ஸ் உடன் கலோரியை கவுண்ட் செய்வது உள்பட பல விஷயங்களை தெரிந்து கொள்ள மேலும் ஒருசில ஆப்ஸ்களை இதனுடன் லிங்க் செய்து கொள்வது நலம் பயக்கும். அந்த வகையில் ஒருசில ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்

ஸ்ட்ராவா (Strave)

ஸ்ட்ராவா (Strave)

ஸ்ட்ராவா ஆப்ஸ் ஜிபிஎஸ் உதவியுடன் இயங்குவதால் நீங்கள் ஓடும் அல்லது சைக்கிளிங் செய்யும் வேகத்தை சரியாக அள்வீடு செய்து எவ்வளவு கலோரி இழக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கும்.

மேலும் நீங்கள் பயணிக்கும் தூரம் மற்றும் திசையை காட்டுவதோடு, முந்தைய நாள் தூரத்திற்கும் இன்றைய தூரத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் அளவீடு செய்யும். ஆனால் இதில் உள்ள அனைத்து வசதிகளையும் நீங்கள் பெற வேண்டும் என்றால் பிரிமியர் வெர்ஷனை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேப் மை ரன் ( Map my run)

மேப் மை ரன் ( Map my run)

நாம் ரன்னிங் மற்றும் உடற்பயிற்சி செய்வதை சரியான விகிதத்தில் அளவிடுவதோடு நாம் செல்லும் ரூட்டையும் நமக்கு தெரிவிக்கும் வகையில் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் உள்ள முக்கிய இன்னொரு வசதி என்னவெனில் பெரும்பாலானோர் சென்ற பொதுவான வழியை நமக்கு இந்த ஆப்ஸ் ஜிபிஎஸ் மூலம் வழிகாட்டும். எனவே நாம் தவறான திசைக்கு செல்வதை தவிர்க்க இந்த ஆப்ஸ் உதவும்

மை ஃபிட்னெஸ் பால் (My Fitness Pal)

மை ஃபிட்னெஸ் பால் (My Fitness Pal)

நீங்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் கலோரியை கவுண்ட் செய்ய வேண்டும் என்றால் இந்த ஆப்ஸை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு சாப்பாட்டிலும் எவ்வளவு கலோரி இருக்கின்றது, இன்றைய உங்களுடைய உணவில் உள்ள கலோரியின் அளவு என்ன என்பதை இந்த ஆப்ஸ் சரியாக கணக்கிடும். மேலும் ஒரு மில்லியன் உணவு வகைகளின் கலோரிகள் இதில் கணக்கிடப்பட்டு டேட்டாவாக உள்ளது.

ஃபைண்ட் மை ஃபிட் (Find my Fit)

ஃபைண்ட் மை ஃபிட் (Find my Fit)

10 வித்தியாசமான ஃபிட்பிட்டுக்களை கொண்டுள்ள இந்த ஆப்ஸ், புளூடூத் மூலம் தொலைந்த டிராக்கர்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ் பிட் (Drivebit)

டிரைவ் பிட் (Drivebit)

நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தாலோ அல்லது நீங்கள் டிரைவராக இருந்தாலோ இந்த ஆப் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.

பயணத்தின் போது உங்களுடைய அன்றாட தேவைகளை ஞாபகபப்டுத்துவதோடு, அவை கிடைக்கும் இடம் குறித்த தகவல்களையும் உங்களுக்கு கொடுக்கும். உங்களுடைய டிரைவிங் திட்டம் குறித்து நீங்கள் இதில் பதிவு செய்தால் போதும் உங்களுக்கு தேவையானவற்றை இது தெளிவாக விளக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
When it comes to the fitness tracking industry, Fitbit is the forerunner with some devices. Even though it doesn't a large portfolio of devices, it has many third party applications that interface very well with their trackers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X