SHAREit மற்றும் Xender பயனர்களே கவலை வேண்டாம்! உங்களுக்கான சிறந்த மாற்று சாய்ஸ் இதுதான்!

|

பிரபலமான பயன்பாடுகளான டிக்டாக், ஷேரீட், மி வீடியோ கால்ஸ், ஷெய்ன், ஹெலோ, செண்டர் போன்ற பல பயன்பாடுகள் உள்ளடக்கிய 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தற்பொழுது தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள சில பயன்பாடுகளை மில்லியன் கணக்கான பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்டுள்ள பயன்பாடுகளுக்கான மாற்று வழிகளை நீங்கள் இந்த பதிவில் காணலாம்.

SHAREit மற்றும் Xender போன்ற ஃபைல் ஷேரிங் ஆப்ஸிற்கு மாற்று

SHAREit மற்றும் Xender போன்ற ஃபைல் ஷேரிங் ஆப்ஸிற்கு மாற்று

திடீர் தடை ஸ்மார்ட்போன் பயனர்களை பெரிதும் பாதிக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருக்கும். ஒன்று போனால் வேறொன்று இருக்கும் என்பதே இயல்பு, உங்களுடைய SHAREit மற்றும் Xender போன்ற ஷேர் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுவிட்டது இனி எப்படிச் சிறந்த பயன்பாட்டை நான் கண்டுபிடிப்பது என்று என்பவர்களுக்குக் கீழே குறிப்பிட்டுள்ள பயன்பாடுகள் தான் பெஸ்ட் சாய்ஸ்.

கூகிள் ஃபைல்ஸ் (Files By Google)

கூகிள் ஃபைல்ஸ் (Files By Google)

கூகிள் நிறுவனத்தின் ஃபைல்ஸ் பை கூகிள் பயன்பாடு உங்களுடைய ஃபைல் ஷேரிங் பயன்பாடுகளான SHAREit மற்றும் Xender பயன்பாடுகளுக்கு ஒரு சிறந்த மாற்றுப் பயன்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கூகிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் சந்தேகத்துடன் பயன்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. SHAREit மற்றும் Xender பயன்பாடு போலவே வயர்லெஸ் முறையில் நீங்கள் எளிதாக ஃபைல்களை ட்ரான்ஸ்பர் செய்துகொள்ளலாம். இன்டர்நெட் சேவை இதற்குத் தேவையில்லை.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

ஷேர்ஆல் (ShareAll)

ஷேர்ஆல் (ShareAll)

இந்தியத் தயாரிப்பு ஆப் தான் வேண்டும், இனி நான் இந்தியத் தயாரிப்பு ஆப்ஸ்களை மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதியாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த ஷேர்ஆல் பயன்பாடு ஒரு நல்ல சாய்ஸ். SHAREit மற்றும் Xender போன்ற சீன பயன்பாடுகளுக்கு மாற்றாக டெல்லியை சேர்ந்த இந்தியப் பயன்பாடு தான் இந்த ஷேர்ஆள் ஆப்ஸ். இதில் பயனர்கள் வீடியோக்கள், போட்டோஸ், திரைப்படங்கள், பயன்பாடுகள் போன்றவற்றை எளிதாக இணைய சேவை இல்லாமல் அனுப்ப முடியும். இதில் பாஸ்வோர்டு பாதுகாப்பும் உள்ளது.

சென்ட் எனிவேர் (Send Anywhere)

சென்ட் எனிவேர் (Send Anywhere)

SHAREit மற்றும் Xender பயன்பாட்டிற்கு மற்றொரு மாற்று பயன்பாடுத் தான் இந்த சென்ட் எனிவேர் பயன்பாடு. வைஃபை டைரக்ட் வழியாக ஃபைல்களைப் ஷேர் செய்ய அனுமதிக்கிறது. ஃபைல்களைப் பகிரும்போது மேம்பட்ட பாதுகாப்பிற்காக 256 பிட் வலுவூட்டப்பட்ட பைல் குறியாக்கத்தை பயன்பாடு பயன்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பயனர்கள் தாங்கள் பகிர விரும்பும் ஃபைல்களுக்கான இணைப்பை உருவாக்கிப் பல நபர்களுக்கு அனுப்பலாம் அல்லது சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்கள் வழியாகவும் பகிர்ந்துகொள்ளலாம்.

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!

நியர்பை ஷேரிங் (Nearby Sharing)

நியர்பை ஷேரிங் (Nearby Sharing)

IOS பயனர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கிய பயன்பாடாக இந்த நியர்பை ஷேரிங் ஆப்ஸ் கிடைக்கிறது. இதன் பெயருக்கு ஏற்றார் போல அருகிலுள்ள சாதனங்களுடன் ஷேரிங் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஃபைல்கள், போட்டோக்கள், வீடியோக்களை போன்ற அனைத்தையும் அருகிலுள்ள சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். மேலும், இந்த பயன்பாடு விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் குரோம் ஓஎஸ் உடன் இணக்கமானது.

சூப்பர்பீம் (Superbeam)

சூப்பர்பீம் (Superbeam)

சூப்பர் பீம் என்பது SHAREit போலவே செயல்படும் மற்றொரு ஃபைல் ஷேரிங் பயன்பாடாகும். சூப்பர் பீம் ஃபைல்களை பகிரும்போது மேம்பட்ட வேகத்திற்கு வைஃபை நேரடி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. சூப்பர்பீம் வழியாக ஃபைல்களை பகிர, பயனர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது உள்ளமைக்கப்பட்ட QR குறியீடு ஸ்கேனருடன் வருகிறது. மிகவும் பாதுகாப்பான ஷேரிங் அம்சத்துடன் இது கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Alternative File Sharing Apps For SHAREit And Xender : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X