பஜாஜ் அலையன்ஸ் வாலெட் ஆப் : டிஜிட்டல் காப்பீட்டு திட்டம்.!

நவீன தொழில்நுட்ப மாற்றங்களை கொண்டு இந்நிறுவனம் புதிய முயற்சிகளை எடுத்துள்ளது. இந்தப் வாலெட் ஆப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.!

By Prakash
|

மொபைலில் இருக்கும் ஆப்ஸ் பொறுத்தமட்டில் நம் வாழ்க்கையை எளிமையாகவும் சிறப்பாகவும் செய்துள்ளது. மேலும் கல்வி, மருத்துவம்,அல்லது பயணமாக இருக்குமானால் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் உள்ள ஆப்ஸ்களின் உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. தற்போது பஜாஜ்அலையன்ஸ் பல்வேறு புதிய முயற்சிகளை கொண்டுவந்துள்ளது.

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் டிஜிட்டல் முன்முயற்சிகளை பலப்படுத்தியுள்ளது. மேலும் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்ப மாற்றங்களை கொண்டு இந்நிறுவனம் புதிய முயற்சிகளை எடுத்துள்ளது.இந்தப் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காப்பீட்டு செயல்முறையை எளிமைப்படுத்துவதற்கும் புது முயற்சியை எடுத்துள்ளது அந்நிறுவனம்.

ட்ராவல் ஈஸி :

ட்ராவல் ஈஸி :

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் புதிய இன்ஷூரன்ஸ் திட்டம் பொறுத்தமட்டில் வாலெட் ஆப் என்ற பயன்பாட்டில் ஒருங்கிணைத்துள்ளது. முதலாவதாக, அதன் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விமான கட்டணம் போன்ற சேவைகளை வழங்குகிறது. இந்த சேவை எளிமையான முறையில் விமான போக்குவரத்துக்கு உதவியாக உள்ளது.

வாடிக்கையாளரான நீங்கள் செய்ய வேண்டியது, விண்ணப்ப அறிவிப்பில் கிளிக் செய்து உங்களுடைய விபரங்கள் மற்றும் கணக்கு விவரங்களை பூர்த்தி செய்யவும். மேலும் பஜாஜ் அலையன்ஸ் சேவைப்பிரிவு உங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும்.

வாலெட்  ஆப்:

வாலெட் ஆப்:

பஜாஜ் அலையன்ஸ் வாலெட் ஆப் பொறுத்தமட்டில் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து பாலிசி வாங்க, புதுப்பித்தல்,உரிமை கோரிக்கை மற்றும் நிர்வகிக்க அனுமதிக்கிறது. இந்த புதியமுன் முயற்ச்சி முழு செயல்முறையையும் மிகவும் எளிதாக்குகிறது, குறைவான நேரம் எடுத்துக்கொள்வதோடு வாடிக்கையாளர் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகிறது.

மோட்டார் ஸ்பாட்:

மோட்டார் ஸ்பாட்:

பஜாஜ் அலையன்ஸ் மோட்டார் ஸ்பாட் பொறுத்தமட்டில் உங்கள் வாகனத்திற்க்கு காப்புறுதியை வழங்குகிறது, மேலும் வாலெட் ஆப் பயன்பட்டில் இதன் முழு சேவையையும் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பஜாஜ் 'மோட்டார் ஸ்பாட் 'புரட்சி சேவை மூலம் ஒடிஎஸ் வாடிக்கையாளர்களை பதிவு செய்வதற்கு அதிகாரம் அளிப்பதோடு, அவர்களது மோட்டார் காப்பீட்டில் ரூ. 20,000 காப்பீடு வாலெட் ஆப் மூலம் இந்த சேவையானது, கோரிக்கை தீர்வுக் கால அளவைக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த வாகனத்திக்கு பல்வேறு சேவைகள் மூலம் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் உதவுகிறது. பாலிசிதாரர் மொபைல் ஆப் மூலம் சேதமடைந்த வாகனத்தின் படங்களை சேர்த்து உடனே பணம் பெரும் வசதிசெய்துதரப்படும் அல்லது வாகனத்தை சரிசெய்து கொடுக்கும் வசதியும் அவற்றில் உள்ளது.

இந்த வசதி தற்போது தனியார் கார்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் உள்ளது, கூடிய விரைவில் அனைத்து வாகனங்களுக்கான ஆதரவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போயிங் :

போயிங் :

பஜாஜ் அலையன்ஸ் 24/7 வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காக 'போயிங் சேட்ஃபோட் சேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் காப்புறுதி தொடர்பான சிக்கல்களை நீக்குவதற்க்கும் மற்றும் பல்வேறு சேவைகளுக்கும் இவை பயன்படுகிறது.

1.மோட்டார் கோரிக்கையை பதிவுசெய்தல்
2.பாலிசி நகலை பெறுதல்
3.பாலிசி சரிபார்ப்பு (மோட்டார் & உடல்நலம்)
4.உரிமைகோரல் நிலையைச் சரிபார்க்கிறது
5.மருத்துவமனை, வாகனம் பழுதுபார்க்கும் இடங்களின் தகவலை பெறமுடியும்.

வாலெட் ஆப் பொறுத்தமட்டில் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியும். மேலும் இந்த ஆப் பல நன்மைகள் கொடுக்கும் வண்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
bajaj-allianz-general-insurance-transforming-industry-with ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X