Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!

|

பிரபலமான ஆன்டி வைரஸ் பயன்பாடான அவாஸ்ட் மற்றும் அதன் துணை பயன்பாடான ஏ.வி.ஜி ஆகிய இரண்டு பயன்பாடுகளும் பல மில்லியன் கணக்கான பயனர்களின் முக்கியமான பிரௌசர் ஹிஸ்டரியை எடுத்துப் பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் செய்த மோசடி

ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் செய்த மோசடி

மதர்போர்டு மற்றும் பிசிமேக்கின்(Motherboard and PCMag) விசாரணையின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் அவாஸ்ட் மற்றும் ஏ.வி.ஜி ஆகிய இரண்டு பயன்பாடுகளும் கூகிள் தேடல்கள், ஜி.பி.எஸ் ஒருங்கிணைப்புகள், லிங்கேடின் பிரௌசர் ஹிஸ்டரி, குறிப்பிட்ட யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஆபாச வலைத்தத்தின் ஹிஸ்டரி போன்றவற்றைக் கண்காணித்துள்ளது.

பயனரின் பிரௌசர் ஹிஸ்டரி டேட்டா விற்பனை

பயனரின் பிரௌசர் ஹிஸ்டரி டேட்டா விற்பனை

நடத்தப்பட்ட விசாரணையின்படி அவாஸ்ட் நிறுவனம், ஜம்ப்ஷாட் என்ற மற்றொரு துணை நிறுவனத்தைப் பயன்படுத்தி பயனர்களின் பிரௌசர் ஹிஸ்டரி டேட்டா விபரங்களை பேக்கேஜ் செய்துள்ளது. இந்த டேட்டா பேக்கஜ்களை கூகிள், யெல்ப் (Yelp), மைக்ரோசாஃப்ட், மெக்கின்சி (McKinsey), பெப்சி (Pepsi), ஹோம் டிப்போட் (Home Depot), கான்டே நாஸ்ட் (Condé Nast), இன்ட்யூட் (Intuit) மற்றும் பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்துள்ளது.

Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!

ஒப்புதலும் இல்லாமல் தகவலை விற்பனை செய்த அவாஸ்ட்

ஒப்புதலும் இல்லாமல் தகவலை விற்பனை செய்த அவாஸ்ட்

அறிக்கையின்படி, கணினியில் நிறுவப்பட்ட இலவச அவாஸ்ட் ஆன்டி வைரஸ் பாதுகாப்பின் உதவியுடன், பயனர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு தரவை சேகரிப்பதாக அவாஸ்ட் கூறியிருந்தாலும், பல பயனர்களின் தரவுகள் எந்த ஒரு ஒப்புதலும் இல்லாமல், அறிவிப்பும் இல்லாமல் சேகரிக்கப்பட்டு, பெரிய நிறுவனங்களுக்குப் பயனர்களின் அனுமதியின்றி விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபாச தளத்தைப் பார்வையிட்ட டேட்டாவும் விற்பனை

ஆபாச தளத்தைப் பார்வையிட்ட டேட்டாவும் விற்பனை

ஆபாச தளத்தைப் பார்வையிடும் பயனரின் தேதி மற்றும் நேரத்தைக் கண்காணிப்பதோடு, ஆபாச தளத்தில் பயன்படுத்தப்படும் தேடல் சொல் மற்றும் பயனர் பார்த்த வீடியோ ஆகியவையும் கண்காணிக்கப்பட்டு அந்த தரவையும் விற்பனை செய்துள்ளது. கண்காணிக்கப்பட்டுச் சேகரிக்கப்பட்ட தரவுகளில் பயனர்களின் தனிப்பட்ட அடையாளங்காட்டிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

தனிநபரின் அடையாளத்தை அவிழ்ப்பது கஷ்டம் இல்லை

தனிநபரின் அடையாளத்தை அவிழ்ப்பது கஷ்டம் இல்லை

பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை அவாஸ்ட் வெளியிடவில்லை என்றாலும், விற்பனை செய்யப்பட்டுள்ள தரவுகளின் அளவை வைத்து பார்க்கையில், தனிநபர்களின் அடையாளங்களை அவிழ்ப்பது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை என்றும், மிகவும் எளிதாக தனிநபரை அடையாளம் காண முடியும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான லாபம்

மில்லியன் கணக்கான லாபம்

இந்த தரவுகளை வைத்து, தரவுகளை வாங்கிய நிறுவனங்கள் தங்கள் வருங்கால வாடிக்கையாளர்களைத் துல்லியமாகக் குறிவைக்க உதவுவதாகத் தெரியவந்துள்ளது. ஜம்ப்ஷாட் இந்த விற்பனையிலிருந்து பல மில்லியன் கணக்கான லாபத்தை ஈட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. சில ஜம்ப்ஷாட் தயாரிப்புகள் ஒரு குறிப்பிட்ட அளவிலான தரவை மட்டுமே கொண்டிருக்கிறது.

சத்தமில்லாமல் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கு பிஎஸ்என்எல்-ன் பலே திட்டம்.! இது தெரியாம போச்சேசத்தமில்லாமல் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கு பிஎஸ்என்எல்-ன் பலே திட்டம்.! இது தெரியாம போச்சே

'ஆல் க்ளிக் ஃபீட்' வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்

'ஆல் க்ளிக் ஃபீட்' வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்

ஆனால் ஜம்ப்ஷாட் தயாரிப்புகளில் ​​"ஆல் க்ளிக் ஃபீட்(All Click Feed)" என்று அழைக்கப்படும் தயாரிப்பில் தான் அமேசான்.காம், வால்மார்ட்.காம், டார்கெட்.காம், பெஸ்ட்புய்.காம் அல்லது ஈபே போன்ற முக்கிய இ-காமர்ஸ் வலைத்தளங்களில் பயனர்கள் மேற்கொண்ட அனைத்து கிளிக்குகளின் தரவையும் சேகரித்துள்ளது. இந்த தயாரிப்பு பேக்கேஜ் தரவுகளை வாங்கவே பெரிய நிறுவனங்களை ஆர்வம் காட்டுகிறன என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பும் சிக்கலில் சிக்கிய அவாஸ்ட்

இதற்கு முன்பும் சிக்கலில் சிக்கிய அவாஸ்ட்

பயனர் தரவைக் கண்காணிப்பதில் அவாஸ்ட் குற்றவாளி எனக் கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பும் நிறுவனத்தின் பிரௌசர் எஸ்ட்டென்ஷன் அனுமதியின்றி பயனர் தரவைக் கண்காணித்து ஜம்ப்ஷாட்டுக்கு அனுப்புவது கண்டறியப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. உடனடியாக நிறுவனம் விரைந்து பிரௌசர் எஸ்ட்டென்ஷன்னிலிருந்து தரவை சேகரிப்பதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Avast And AVG Sold Personal Web Browsing History For Millions Of Dollars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X