நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த ஆப் கட்டாயமாக உங்கள்மொபைலில் இருக்க வேண்டும்.!
நீங்கள் தமிழ்நாட்டில் 108 அவசர உதவி சேவைக்கு மொபைல் ஆப் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது, இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
பொதுவாக இப்போது வளர்ந்துவரும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பல ஆப் வசதிகள் நமது தினசரி வேலையை கூட மிகவும் எளிமையாக்குகிறது. அதன்படி நீங்கள் தமிழ்நாட்டில் 108 அவசர உதவி சேவைக்கு மொபைல் ஆப் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது, இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஆப் வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆப் வசதியின் சிறப்பம்சங்கள் மற்றும் வழிமுறைகளைப் பார்ப்போம். தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த செயலியின் பெயர் Avasaram 108 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் Avasaram 108 என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை-2:
அடுத்து உங்கள் மொபைல் நம்பரை Avasaram 108 செயலியில் பதிவிட வேண்டும், பின்பு ஒடிபி-அனுப்பிவைக்கப்படும், அந்த ஒடிபி-நம்பரை
இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
பின்பு Avasaram 108 செயலியில் உங்களது பெயரை பதிவிட்டு லாக்இன் செய்தல் வேண்டும், மேலும் நீங்கள் இருக்கும் எடத்தை சரியாக காண்பிக்கும் இந்த செயலி.

வழிமுறை-4:
தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்தில் விபத்து நடந்தால் கூட இந்த Avasaram 108 செயலியின் மூலம் கால் செய்தால் போதும், உடனே உங்களதுமொபைல் location-ஐ டிராக் செய்து விரைவில் ஆம்புலன்ஸ் வந்துவிடும்.மேலும் உங்களது உறவினர்களுக்கு கூட அவசர உதவி தேவைப்பட்டால் இந்த ஆப் வசதி மிகவும் அருமையாக உதவும்.

வழிமுறை-5:
நீங்கள் இருக்கும் இடத்தை எளிமையாக தெரிந்துகொள்ள இந்த ஆப் வசதி மிகவும் அருமையாக உதவுகிறது.மேலும் இந்த ஆப் வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








