ஆண்ட்ராய்டு போனில் இருக்க வேண்டிய 15 முக்கிய செயலிகள்

நம் வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும் தற்போது ஆண்ட்ராய்டு செயலிகள் தேவைகள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

By Siva
|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு நபருக்கும் தேவை என்பது குறித்து விவரிக்க தேவையில்லை. நம் வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும் தற்போது ஆண்ட்ராய்டு செயலிகள் தேவைகள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆண்ட்ராய்டு போனில் இருக்க வேண்டிய 15 முக்கிய செயலிகள்

இந்த நிலையில் புதியதாக ஆண்ட்ராய்டு போன்கள் வாங்குபவர்களுக்கு தேவையான அடிப்படையான 15 செயலிகள் குறித்து தற்போது பார்ப்போம்

ஸ்விப்ட் கீ:

ஸ்விப்ட் கீ:

மொபைல் போனில் மிக வேகமாக டைப் செய்ய உதவும் இந்த ஸ்விப்ட் கீ செயலி கண்டிப்பாக ஒவ்வொரு ஆண்ட்ராய்டு போனுக்கும் தேவை. மேலும் இந்த செயலி புதுப்புது தீம்ஸ்கள் கொண்ட கீபோர்டுகலை தரும். இந்த செயலியை பயன்படுத்தி பார்த்தால்தான் இதன் அருமை தெரியும்

எவர்நோட்:

எவர்நோட்:

இந்த செயலியை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த செயலி உதவும். தேவையான போது இந்த செயலியில் சேமித்து வைத்ததை உபயோகப்படுத்தவும் முடியும்

ஹோட்டல் டுநைட்:

ஹோட்டல் டுநைட்:

வெளியூர் செல்ல வேண்டிய நிலை வந்தாலோ அல்லது திடீரென இரவு ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலை வந்தாலோ அந்த பகுதியில் நல்ல தங்கும் விடுதி இருக்கின்றதா? என்பதை கண்டுபிடிப்பது அரிது. ஆனால் இந்த செயலி நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் எந்த ஓட்டல் வசதியாக தங்குவதற்கு கிடைக்கும் என்பது உள்பட அனைத்து தகவல்களையும் தரும்.

உபேர் அல்லது ஓலா கேப்:

உபேர் அல்லது ஓலா கேப்:

நீங்கள் திடீரென வெளியே கிளம்ப வேண்டும் என்றால் உங்களுடைய அவசர தேவைக்கு ஏற்ற கேப் இதில் கிடைக்கும். இந்த இரண்டு செயலிகளையும் டவுன்லோடு செய்து அதின் மூலம் உங்கள் பயணத்தை எளிதில் தொடரலாம். மேலும் முன்கூட்டியே உங்கள் பயணத்திற்கான கட்டணத்தையும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய செயலிகளில் இந்த இரண்டும் முக்கியம்

பிஸார்ட்:

பிஸார்ட்:

கம்ப்யூட்டரில் ஒரு போட்டோவை எடிட் செய்ய வேண்டும் என்றால் உடனே போட்டோஷாப்பை நாடுவீர்கள். ஆனால் மொபைல் போனில் மிக எளிதில் ஒரு போட்டோவை எடிட் செய்ய உதவுகிறது இந்த பிஸார்ட். ஒரு புகைப்படத்தை எந்தவித மாற்றம் செய்யவும் இந்த செயலி உதவும். ஒரு கம்ப்யூட்டரில் புகைப்படத்தில் என்னென்ன மாற்றங்கல் செய்யலாமோ அவை அத்தனையும் இதிலும் செய்யலாம்

 ஜிமெயில் இன்பாக்ஸ்:

ஜிமெயில் இன்பாக்ஸ்:

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த செயலி உங்களுக்கு கண்டிப்பாக பயனளிக்கும். உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெயிலையும் தரம் பிரித்து உங்களுக்கு வகைப்படுத்தி காண்பிக்கும் என்பதால் எதை படிக்கலாம், எதை தவிர்க்கலாம் என்பதை நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் ஒரு குறிப்பிட்ட மெயிலை பிறகு படிக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதை ரிமைண்டரில் போட்டு வைத்தால் உங்களுக்கு சரியான நேரத்தில் இந்த செயலி ஞாபகப்படுத்தும். இந்த செயலி உங்களிடம் இருந்தால் ஜிமெயில் மொத்தமும் இருப்பது போலத்தான்

ரூ.7999/-க்கு அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் இன்னொரு சர்பரைஸ்.!ரூ.7999/-க்கு அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் இன்னொரு சர்பரைஸ்.!

வேஸ் (Waze):

வேஸ் (Waze):

நீங்கள் நெடுந்தூரம் செல்லும் டிரைவர் என்றாலோ அல்லது தனியாக வழி தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலோ உங்களுக்கு ஒரு வழிகாட்டி போல் உதவுகிறது இந்த செயலி.

இந்த செயலி உங்களுக்கு எந்த இடத்தில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், சரியான வழி எது, டிராபிக் அதிகம் உள்ள பகுதிகள் எவை என்பதை கோடிட்டி காண்பிக்கும். மேலும் சாலைகள் வேலை நடந்து கொண்டிருக்கும் பகுதி, விபத்து பகுதி, சிகப்பு விளக்கு இருக்கும் பகுதி என அனைத்தையும் உங்களுடன் ஒரு வழிகாட்டி இருப்பதை போலவே உதவி செய்யும்

கேஷ் (Cash):

கேஷ் (Cash):

இந்த செயலி நண்பர்களுக்குள் பணப்பரிமாற்றம் செய்யவோ அல்லது வங்கியின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யவோ உதவுகிறது. இதுவொரு இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் நீங்கள் முதலில் சைன் அப் செய்து அதன் பின்னர் உங்களது டெபிட் கார்டை கனெக்ட் செய்து கொள்ல வேண்டும்.

அதன் பின்னர் ஒருசில ஸ்டெப்ஸ்களில் உங்கள் நண்பருக்கு நீங்கள் எளிதில் பணம் அனுப்பலாம். ஒருசில நேரங்களில் தவிர பெரும்பாலும் பணம் உடனடியாக சேர வேண்டியவருக்கு போய் சேர்ந்துவிடும் என்பதும் நம்பகத்தன்மையுடையதும் ஆகும்

அமேசான் அல்லது பிளிப்கார்ட்;

அமேசான் அல்லது பிளிப்கார்ட்;

உங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து டோர் டெலிவரி கிடைக்க உதவும் இரண்டு செயலிகள் இவை. பொருளுக்குரிய பணத்தை பொருள் கையில் கிடைத்தவுடன் கொடுக்கும் வசதியும் இதில் உண்டு.

ஸ்போட்டிஃபை (Spotify):

ஸ்போட்டிஃபை (Spotify):

நீங்கள் ஒரு இசை பிரியராக இருந்தால் இந்த செயலி உங்களுக்கு கண்டிப்பாக தேவை. இதில் உள்ள ஏராளமான இசையை நீங்கள் கேட்டு மகிழலாம். மேலும் இதில் உள்ள ஆன்லைன் ரேடியோ உங்களை 24 மணி நேரமும் இசையில் மூழ்கடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

குரோம் பிரெளசர்:

குரோம் பிரெளசர்:

குரோம் பிரெளசர் என்பது ஒவ்வொரு ஆண்ட்ராய்டு போனிலும் இருக்க வேண்டிய ஒரு செயலி. இதை பயன்படுத்துவதன் மூலம் 50% டேட்டாவை சேமிக்கலாம். அந்த அளவுக்கு இந்த செயலி வேகமாக இயங்கும். பல ஸ்மார்ட்போன்களில் இந்த செயலி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Xender:

Xender:

ஒரு ஆண்ட்ராய்டு போனில் இருந்து இன்னொரு ஆண்ட்ராய்டு போனுக்கு வயர்லெஸ் மூலம் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்ய உதவும் செயலி இது. இசை, திரைப்படங்கள், கேம்ஸ், பைல்கள், வீடியோ ஆகியவற்றை மிக வேகமாக டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்

க்ளீன் மாஸ்டர்:

க்ளீன் மாஸ்டர்:

உலகில் 740 மில்லியன் பேர் பயன்படுத்தி வரும் இந்த செயலி நிச்சயம் உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு தேவை. இது ஒரு ஆண்ட்டி வைரஸ் போல செயல்பட்டு உங்கள் போனை வைரஸ்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் போனில் உள்ள ஜங்க் பைல்களை சுத்தம் செய்யும்

MX பிளேயர்:

MX பிளேயர்:

இதுவொரு சக்தி வாய்ந்த வீடியோ பிளேயர். சப்டைட்டில் சப்போர்ட் செய்யும் இந்த செயலி மூலம் வீடியோவை பிளே செய்து பார்க்கல்லாம். கிட்டத்தட்ட அனைத்துவித வீடியோ பார்மட்களும் இந்த செயலி சப்போர்ட் செய்யும்

ஸ்பீட் டெஸ்ட்:

ஸ்பீட் டெஸ்ட்:

உங்கள் போனில் உள்ள இண்டர்நெட் வேகத்தை தெரிந்து கொள்ள உதவும் இந்த செயலி நிச்சயம் உங்களுக்கு தேவையான ஒரு செயலி.

Best Mobiles in India

Read more about:
English summary
If you are a beginner then we the are here to help you with these best and amazing apps that you really need on your smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X