YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

|

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொடங்கி.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூட்யூப் என எங்கு பார்த்தாலும்.. எங்கு திரும்பினாலும் ஒரே SFV-க்கள் தான் - அதாங்க Shorts எனப்படும் ஷார்ட் பார்மெட் வீடியோஸ் (Short Format Videos)!

SFV என்றால் என்ன?

SFV என்றால் என்ன?

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், யூட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) எனப்படும் சில நொடிகள் - மிஞ்சி மிஞ்சிப் போனால் 1 நிமிடம் வரை நீளும் - சின்ன சின்ன வீடியோக்கள் தான் SFV எனப்படுகின்றன!

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

நீங்கள் Shorts, Reels-களை விரும்பி பார்ப்பீர்களா?

நீங்கள் Shorts, Reels-களை விரும்பி பார்ப்பீர்களா?

ஆம் என்றால், ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ்களை பார்க்கும் உங்களின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயார் ஆகிக்கொள்ளுங்கள். ஏனெனில் கூடிய விரைவில், உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவி வழியாக யூட்யூப் ஷார்ட்ஸ்களை பார்க்க போகிறீர்கள்!

யூட்யூப் நிறுவனத்தின் அடுத்த குறி!

யூட்யூப் நிறுவனத்தின் அடுத்த குறி!

கூகுளுக்கு சொந்தமான யூட்யூப் அதன் ஸ்மார்ட் டிவி ஆப் ஆன யூட்யூப் டிவியில் (YouTube TV) அதன் ஷார்ட் பார்மெட் வீடியோ ஆப் ஆன ஷார்ட்ஸ்-ஐ (Shorts) அறிமுகப்படுத்த உள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவியில் உள்ள யூடியூப் ஆப்பில், யூட்யூப் ஷார்ட்ஸ்களுக்கான ஆதரவை சேர்ப்பது பற்றி நிறுவனம் தனது கூட்டாளர்களிடம் பேசிவருகிறதாம்!

அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

YouTube Shorts-இன் டெய்லி வியூஸ்-ஐ சொன்னால் ஷாக் ஆகிடுவீங்க!

YouTube Shorts-இன் டெய்லி வியூஸ்-ஐ சொன்னால் ஷாக் ஆகிடுவீங்க!

யூட்யூப் நிறுவனத்தின் கூற்றுப்படி, YouTube Shorts ஆனது தினமும் 30 பில்லியன் வியூஸ்களை சந்திக்கிறது, மேலும் இது நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து கொண்டே போகிறது!

ஆக யூட்யூப் ஷார்ட்ஸ்-ஐ டிவிகளுக்கும் கொண்டு வரும் பட்சத்தில், மேற்கண்ட வியூஸ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

YouTube-ற்கு வரும் மொசைக்  மோட்!

YouTube-ற்கு வரும் மொசைக் மோட்!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, யூட்யூப்பில் "மொசைக் மோட்" (Mosaic Mode) எனப்படும் ஒரு புதிய அம்சமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த அம்சத்தின் கீழ் பார்வையாளர்கள், ஸ்மார்ட் டிவி வழியாக, அதாவது யூட்யூப் டிவி ஆப் வழியாக, ஒரே நேரத்தில் நான்கு லைவ் ஸ்ட்ரீம்களை பார்க்க முடியும்.

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

YouTube-க்கு முன்னாடியே முந்திக்கொண்ட TikTok!

YouTube-க்கு முன்னாடியே முந்திக்கொண்ட TikTok!

ஷார்ட்-பார்ம் வெர்டிக்கல் வீடியோக்களை (Short-form vertical videos) டிவி ஸ்க்ரீனில் கொண்டு வர உள்ள "முதல் ஆள்" - யூட்யூப் அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் TikTok சில காலமாகவே ஸ்மார்ட் டிவி இன்டர்பேஸ்களை பரிசோதித்து வருகிறது.

YouTube TV-இல் Shorts மற்றும் Mosaic Mode எப்போது வரும்?

YouTube TV-இல் Shorts மற்றும் Mosaic Mode எப்போது வரும்?

ஒரே நேரத்தில் நான்கு லைவ் ஸ்ட்ரீம்களை பார்க்க உதவும் மொசைக் மோடும், ஷார்ட்ஸ் வீடியோக்களும் "வரவிருக்கும் மாதங்களில்" ஏதேனும் ஒரு அப்டேட் வழியாக உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அல்லது கூகுள் ஸ்மார்ட் டிவிக்கு வந்து சேரலாம்!

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

YouTube வழியாக Shorts உருவாக்குவது எப்படி?

YouTube வழியாக Shorts உருவாக்குவது எப்படி?

- YouTube ஆப்பிற்குள் சைன்-இன் செய்யவும்

- ஸ்க்ரீனில் கீழே காணப்படும் + பட்டனை கிளிக் செய்யவும்

- பின்னர் Create a Short என்கிற விருப்பதை கிளிக் செய்யுயவும்.

- 15 வினாடிகளுக்கு மேல் நீளும் ஒரு வீடியோவை ரெக்கார்ட் செய்யவும்

- கிளிப்பைப் பதிவு செய்ய, கேப்சர் பட்டனை அழுத்தி பிடிக்கவும் அல்லது வெறுமனே கிளிக் செய்து, ரெக்கார்ட் செய்து முடித்துவிட்டு, பின்னர் நிறுத்தவும்.

- பிறகு உங்களுக்கு விருப்பமான ம்யூசிக் மற்றும் எபெக்ட்களை சேர்த்து அப்லோட் செய்யவும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Are you a YouTube Shorts Lover Get ready to Watch it on Your Android Smart TV

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X