வணக்கம்டி மாப்ள.. Apple-ல இருந்து டிம் குக்.. WWDC 2026 நிகழ்வு தேதி அறிவிப்பு.. iPhone யூசர்கள் ஆல் செட்!
ஆப்பிள் (Apple) நிறுவனம், டபுள்யூடபுள்யூடிசி 2026 (WWDC 2026) என்கிற தனது வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டிற்கான (Annual Worldwide Developers Conference) கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இது எப்போது நடைபெறும்? இந்நிகழ்வில் என்னென்ன அறிமுகம், அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது? இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
ஆப்பிள் ரசிகர்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிகழ்வு (Software Event) ஆகும். ஏனென்றால் இது ஐபோன் (iPhone), ஐபேட் (iPad), மேக் (Mac) மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) ஆகியவற்றின் "எதிர்காலத்தை" பற்றிய ஒரு நெருக்கமான பார்வையை வழங்கக்கூடும்.

டபுள்யூடபுள்யூடிசி 2026 நிகழ்வு எப்போது நடக்கும்? டபுள்யூடபுள்யூடிசி 2026 நிகழ்வு ஆனது வருகிற ஜூன் 8 முதல் ஜூன் 12, 2026 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு முதன்மையாக ஆன்லைனில் தான் நடைபெறும் மற்றும் உலகளவில், இலவசமாக பார்ப்பதற்கு அணுக கிடைக்கும். கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெவலப்பர்கள் மற்றும் மாணவர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு சிறப்பு நேரடி நிகழ்வையும் நடத்தும்.
இந்தியாவில் டபுள்யூடபுள்யூடிசி 2026 கீ நோட் நேரம்: இந்நிகழ்வின் கீ நோட் ஆனது ஜூன் 8 அன்று, இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இந்த விளக்கக்காட்சியில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் மற்றும் மூத்த நிர்வாகிகள், இந்த வாரத்தின் மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் தொழில்நுட்பம் சார்ந்த தொடர் அமர்வு (Apple's more technical follow-up session) ஆன 'பிளாட்ஃபார்ம்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' (Platforms State of the Union), ஜூன் 9 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் தொடங்கும்.
டபுள்யூடபுள்யூடிசி 2026 நிகழ்வில் என்னென்ன அறிமுகம், அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? இந்த ஆண்டுக்கான டபுள்யூடபுள்யூடிசி நிகழ்வு - ஏஐ (AI) என்கிற செயற்கை நுண்ணறிவில் (Artificial intelligence) அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகளில் ஐபோனுக்கான ஐஓஎஸ் 27(iOS 27), ஐபேட் ஓஎஸ் 27 (iPadOS 27), மேக் ஓஎஸ் 27 (macOS 27), வாட்ச் ஓஎஸ் 27 (watchOS 27), டிவி ஓஎஸ் 27 (tvOS 27), விஷன் ஓஎஸ் 27 (visionOS 27), ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் இயங்கும் மேம்பட்ட சிரி (Siri), மற்றும் ஆப்கள் (Apps) மற்றும் டெவலப்பர்களுக்கான புதிய ஏஐ அம்சங்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டபுள்யூடபுள்யூடிசி 2026-ஐ ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி? நீங்கள் கீ நோட் மற்றும் அனைத்து முக்கிய அமர்வுகளையும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ தளங்களான ஆப்பிள் ஈவென்ட்ஸ் பக்கம் (Apple Events page), ஆப்பிள் டெவலப்பர் இணையதளம் (Apple Developer website), ஆப்பிள் டெவலப்பர் ஆப் (Apple Developer app) மற்றும் ஆப்பிளின் யூட்யூப் சேனல் (Apple's YouTube channel) ஆகியவற்றில் நேரலையில் பார்க்கலாம். கீ நோட் எந்த விதமான ரிஜிஸ்ட்ரேஷனோ அல்லது கட்டணமோ தேவையில்லை.
டபுள்யூடபுள்யூடிசி 2026 நிகழ்வு நடக்கும் வாரத்தின் மீதமுள்ள நாட்களில் என்ன நடக்கும்? கீ நோட்டிற்கு பிறகு, ஆப்பிள் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அமர்வுகள் (100 technical sessions), ஆப்பிள் பொறியாளர்களுடனான குழு பயிற்சிகள் (Group labs with Apple engineers), டெவலப்பர் மன்றங்கள் (Developer forums), தனிப்பட்ட சந்திப்புகள் (One-on-one appointments) மற்றும் ஆப்பிள் வடிவமைப்பு விருதுகள் அறிவிப்புகளை (Apple Design Awards announcements) நடத்தும்.


Click it and Unblock the Notifications